Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

"என் மகன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து அவனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்": சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இளைஞன் அனோஜனை மீட்க தாயார் கண்ணீர் மல்கக் கோரிக்கை


 "என் மகன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து அவனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்": சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இளைஞன் அனோஜனை மீட்க தாயார் கண்ணீர் மல்கக் கோரிக்கை


சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இளைஞனைப் பாதுகாத்து, உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் யோகலட்சுமி சிவராசா இலங்கை அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அம்பாறை மாவட்டம் கல்முனை நாவிதன்வெளி நாட்பிட்டிமுனைப் பகுதியைச் சேர்ந்த அனோஜன், தனது குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்குவதற்காக சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்தார். அங்கு சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு, அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றினால் ஆரம்பத்தில் ஐந்து வருட கால சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு நடவடிக்கைகளின் போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவரது தாயார், தமது மகன் திட்டமிட்டு எந்தத் தவறையும் செய்யவில்லை எனவும், உணர்ச்சிவசப்பட்டு அறியாமல் செய்த தவறை மன்னித்து, அவனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி நாடு திருப்பி அழைத்து வருவதற்கு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதியிலுள்ள இலங்கை தூதரகம் அவசர இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என மன்றாடிக் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கு உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரம்


"මගේ පුතා නොදැනුවත්ව කළ වරදට සමාව දී ඔහුව ජීවතුන් අතර බේරා දෙන්න": සවුදියේදී මරණ දඬුවම නියම වූ අනුජන්ගේ මවගෙන් කඳුළු සලමින් ඉල්ලීමක්


සවුදි අරාබියේදී ආගමික අපහාස චෝදනාවක් මත අත්අඩංගුවට පත්ව, මේ වන විට මරණ දඬුවම නියම වී ඇති බවට තොරතුරු වාර්තා වන අම්පාර දිස්ත්‍රික්කයේ පදිංචි ශිවරාසා අනුජන් නමැති තරුණයාගේ ජීවිතය බේරාගෙන මෙරටට ගෙන්වා දෙන ලෙස ඔහුගේ මව වන යෝගලක්ෂ්මී ශිවරාසා මහත්මිය ශ්‍රී ලංකා රජයෙන් සහ ජාත්‍යන්තර ප්‍රජාවෙන් හඬා වැටෙමින් ඉල්ලා සිටියි.


අම්පාර කල්මුනේ නාට්පිට්ටිමුනෙයි ප්‍රදේශයේ පදිංචිකරුවෙකු වන අනුජන්, සිය දිළිඳු පවුලේ ආර්ථික බර කරට ගෙන සවුදි අරාබියට රැකියාව සඳහා ගොස් තිබිණි. සමාජ මාධ්‍ය ඔස්සේ සිදුවූ මතභේදාත්මක ප්‍රකාශයක් සම්බන්ධයෙන් අත්අඩංගුවට පත් වූ ඔහුට, අල්-අහ්සා අපරාධ අධිකරණය විසින් මුලින් වසර පහක සිරදඬුවමක් සහ සවුදි රියාල් මිලියන තුනක දඩයක් නියම කරන ලදී. කෙසේ වෙතත්, අනතුරුව සිදුකළ අභියාචනා ක්‍රියාවලියේදී ඔහු වෙත මරණ දඬුවම නියම වී ඇති බවට නවතම තොරතුරු අනාවරණය වී ඇත.


මේ පිළිබඳව අදහස් දක්වන ඔහුගේ මව, සිය පුතු සැලසුම් සහගතව වරදක් නොකළ බවත්, අනවබෝධයෙන් සිදු වූ වරදට සමාව දී සිය පුත්‍රයාගේ දිවි බේරා ගැනීම සඳහා ජනාධිපතිවරයා, විදේශ කටයුතු අමාත්‍යාංශය සහ සවුදියේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය කඩිනම් රාජ්‍ය තාන්ත්‍රික මැදිහත්වීමක් සිදුකළ යුතු බවත් කඳුළු සලමින් ඉල්ලා සිටියි. මේ අතර, අනුජන්ගේ ජීවිතය බේරා ගැනීමට කඩිනම් පියවර ගන්නා ලෙස පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් ඇතුළු පාර්ශ්ව රැසක්ද විදේශ අමාත්‍යවරයාගෙන් ඉල්ලීම් කර තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / විදේශ රැකියා සහ මානව හිමිකම් පුවත්


"Pardon My Son's Unintended Mistake and Bring Him Back Alive": Mother of Sri Lankan Youth Facing Saudi Death Sentence Weeps for Help


The mother of Sivarasa Anojan, a young Sri Lankan migrant worker from the Ampara district who has reportedly been sentenced to death by a Saudi Arabian court over an online religious insult, has made an emotional and tearful appeal to the Sri Lankan Government and international rights bodies to save her son’s life and bring him back alive.


Anojan, a resident of Natpiddimunai in Kalmunai, traveled to the Kingdom of Saudi Arabia for employment to support his economically disadvantaged family. Following his arrest over a controversial Facebook post deemed offensive to Islamic sanctities, the Criminal Court in Al-Ahsa initially handed down a five-year prison sentence along with a fine of three million Saudi Riyals. However, subsequent reports indicate that during the judicial appeal process, the verdict was escalated to a capital death sentence, triggering immense grief and alarm.


Distraught and in tears, his mother Yogalechchumi Sivarasa stated that her son never harbored ill intentions and reacted emotionally without fully comprehending the legal ramifications. She pleaded directly with the President, the Ministry of Foreign Affairs, and the Sri Lankan Embassy in Riyadh to urgently intervene through diplomatic channels on humanitarian grounds. Simultaneously, political representatives and Members of Parliament in Sri Lanka have formally urged Foreign Minister Vijitha Herath to initiate urgent high-level diplomatic representations with Saudi authorities to secure sentence commutation or clemency for the youth.


KR TV Network - Local News / Foreign Employment and Human Rights Affairs

Comments