போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு நீதிமன்றம் அபராதம்!
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு நீதிமன்றம் அபராதம்!
வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகார நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தான் குற்றவாளி என நடிகர் விஷ்வ கொடிகார நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா முன்னிலையில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார். மேலும், எதிர்காலத்தில் இது போன்ற குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், கட்டாயப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் எனச் சந்தேகநபருக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து குறித்த உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐந்து பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெயின் (Cocaine) கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / குற்றவியல் செய்தி
මත්ද්රව්ය සමඟ අත්අඩංගුවට පත් ප්රසිද්ධ ටෙලිනාට්ය නළු විශ්ව කොඩිකාරට අධිකරණයෙන් දඩ මුදලක්!
වැල්ලවත්ත මුහුදු වෙරළ ප්රදේශයේ පිහිටි ප්රසිද්ධ අවන්හලකදී පොලිසිය විසින් සිදු කරන ලද හදිසි සෝදිසි කිරීමකදී මත්ද්රව්ය සමඟ අත්අඩංගුවට ගත් ප්රසිද්ධ ටෙලිනාට්ය නළු විශ්ව කොඩිකාර අධිකරණය හමුවේ වරද පිළිගැනීමෙන් අනතුරුව ඔහුට දඩ නියම කර තිබේ.
මෙම නඩුව ගල්කිස්ස මහේස්ත්රාත් අධිකරණයේදී විභාගයට ගත් අවස්ථාවේදී, නළු විශ්ව කොඩිකාර තමන් වරදකරු බව මහේස්ත්රාත් කාංචනා නෙරංජලා සිල්වා හමුවේ පිළිගත්තේය. ඒ අනුව ඔහුට රුපියල් 5,000ක දඩ මුදක් නියම කළ මහේස්ත්රාත්වරිය, අනාගතයේදී මෙවැනි අපරාධවලට යළිත් සම්බන්ධ වී අධිකරණයට ඉදිරිපත් කළහොත් අනිවාර්ය පුනරුත්ථාපන මධ්යස්ථානයක් වෙත යොමු කරන බවට දැඩි අවවාදයක්ද කළාය.
වැල්ලවත්ත පොලිසියට ලද රහසිගත තොරතුරකට අනුව අදාළ අවන්හලේ වැටලීමක් සිදු කර ඇත. එහිදී නළු විශ්ව කොඩිකාර ඇතුළු පුද්ගලයින් 5 දෙනෙකු මත්ද්රව්ය සමඟ අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කර තිබුණි. අත්අඩංගුවට ගන්නා අවස්ථාවේදී ඔහු සතුව තිබී කොගයින් (Cocaine) මිලිග්රෑම්1,050ක් සොයාගෙන තිබීම විශේෂත්වයකි.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / අපරාධ පුවත්
---
Court Fines Popular Tele-actor Vishwa Kodikara After He Pleads Guilty to Drug Possession!
Popular Sinhala television actor Vishwa Kodikara, who was arrested with narcotics during a sudden police raid at a prominent restaurant in the Wellawatte beach area, has been fined by the court after pleading guilty.
When the case was taken up before the Mount Lavinia Magistrate's Court, actor Vishwa Kodikara admitted to the charges before Magistrate Kanchana Neranjana de Silva. The Magistrate ordered him to pay a fine of Rs. 5,000and sternly warned that any future involvement in similar offenses would result in being sent to a mandatory rehabilitation center.
Following a confidential tip-off received by Wellawatte police, the raid was conducted at the restaurant. The actor, along with four others, was taken into custody and produced before the court. Notably, 1,050 milligrams of cocaine were recovered from his possession at the time of his arrest.
KRTV Network | National / Crime News

Comments