மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை அமைக்க வேண்டிய உடனடித் தேவை காணப்படுகிறது - நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை அமைக்க வேண்டிய உடனடித் தேவை காணப்படுகிறது - நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கிராமப்புறப் பகுதி மக்களுக்குத் தபால் மற்றும் தபாலகச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அங்கு புதிய தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை உருவாக்க வேண்டிய தேவை அவசியமாகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போதிய தபாலகக் கட்டமைப்புகள் இல்லாத காரணத்தினால், பொதுமக்கள் கடிதப் பரிமாற்றங்கள், முதியோர் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள், மற்றும் ஏனைய நிதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பின் சனத்தொகை அடர்த்தி மற்றும் புவியியல் பரம்பலுக்கு ஏற்ப தபால் சேவைகளை விஸ்தரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும், உரிய அமைச்சு இது தொடர்பில் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | அரசியல் செய்தி
මඩකලපුව දිස්ත්රික්කයේ නව තැපැල් කාර්යාල සහ උප තැපැල් කාර්යාල ඉදි කිරීමේ දැඩි අවශ්යතාවක් පවතී - පාර්ලිමේන්තු මන්ත්රී ශාණක්ය රාජමණික්කම්
මඩකලපුව දිස්ත්රික්කයේ බොහෝ ග්රාමීය ප්රදේශවල ජනතාවට තැපැල් සහ තැපැල් සේවා ලබා ගැනීමේදී දැඩි දුෂ්කරතාවන්ට මුහුණ දීමට සිදුව ඇති බවත්, එම නිසා නව තැපැල් කාර්යාල සහ උප තැපැල් කාර්යාල පිහිටුවීම අත්යවශ්ය කරුණක් බවත් පාර්ලිමේන්තු මන්ත්රී ශාණක්ය රාජමණික්කම් මහතා පවසයි.
ප්රමාණවත් තැපැල් පහසුකම් නොමැතිකම හේතුවෙන් ජනතාවට ලිපි හුවමාරු කර ගැනීමට, වැඩිහිටි සහ සමෘද්ධි දීමනා ලබා ගැනීමට මෙන්ම අනෙකුත් මූල්ය සේවා සඳහා ගමන් කිරීමට සිදුව ඇති බව ඔහු පෙන්වා දී තිබේ.
මඩකලපුව ප්රදේශයේ ජනගහන ඝනත්වය සහ භූගෝලීය ව්යාප්තියට සරිලන පරිදි තැපැල් සේවා පුළුල් කිරීම කාලීන අවශ්යතාවක් වන අතර, අදාළ අමාත්යාංශය මේ සම්බන්ධයෙන් වහාම ක්රියාත්මක විය යුතු බව ඔහු අවධාරණය කර ඇත.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්
Urgent Need to Establish New Post Offices and Sub-Post Offices in the Batticaloa District – MP Shanakiyan Rasamanickam!
Member of Parliament Shanakiyan Rasamanickam has emphasized the pressing need to establish new post offices and sub-post offices across rural areas in the Batticaloa district to address severe difficulties faced by residents in accessing postal services.
Highlighting the inadequacy of existing postal infrastructure, he pointed out that citizens are forced to travel long distances just to handle basic mail correspondence, collect senior citizen or welfare allowances, and manage essential financial transactions.
Pointing out that expanding postal services is a timely necessity aligned with Batticaloa's population distribution and geographic expanse, he urged the relevant ministry to take prompt and effective measures to resolve the issue.
KRTV Network | Political News

Comments