Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

செயற்கை நுண்ணறிவுப் படை மற்றும் புதிய ஆலோசகர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு


 செயற்கை நுண்ணறிவுப் படை மற்றும் புதிய ஆலோசகர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு


அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையின் அசுர வளர்ச்சியை வழிநடத்துவதற்கும், அத்துறையின் ஒழுங்குமுறைகளைக் கண்காணிப்பதற்கும் விண்வெளிப் படையைப் (Space Force) போன்று புதிய ஏஐ படை (AI Force) ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும், அதை வழிநடத்த புதிய சிறப்பு ஆலோசகர் ஒருவரை (AI Czar) விரைவில் நியமிக்கவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.


தமது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், இந்த வியக்கத்தக்க துறையின் வளர்ச்சியை எக்காரணம் கொண்டும் கட்டுப்படுத்தவோ அல்லது முடக்கவோ மாட்டோம் என்றும், மாறாக அத்துறையைப் பாதுகாத்து உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 வீத பங்களிப்பை வழங்கக்கூடிய மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியாக செயற்கை நுண்ணறிவு மாறும் எனத் தெரிவித்த அவர், இத்துறையில் ஏற்பட்டுள்ள துஷ்பிரயோகங்களை ஏற்கனவே உள்ள நாட்டின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் மூலமே எதிர்கொள்ள முடியும் எனவும், புதிய கட்டுப்பாடுகள் மூலம் வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது எனவும் வாதிட்டுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / அமெரிக்க அரசியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப விவகாரம்


කෘත්‍රිම බුද්ධි බලකායක් සහ නව උපදේශකයෙකු පත් කිරීමට ඩොනල්ඩ් ට්‍රම්ප්ගෙන් පියවර


ඇමරිකා එක්සත් ජනපදයේ වේගයෙන් වර්ධනය වන කෘත්‍රිම බුද්ධි (AI) ක්ෂේත්‍රය අධීක්ෂණය කිරීම හා එහි ප්‍රගතිය මෙහෙයවීම සඳහා අභ්‍යවකාශ බලකාය (Space Force) ආදර්ශයට ගනිමින් නව ඒඅයි බලකායක් (AI Force) පිහිටුවන බවත්, එය මෙහෙයවීම සඳහා කෘත්‍රිම බුද්ධි විශේෂඥයෙකු (AI Czar) කඩිනමින් නම් කරන බවත් ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්‍රම්ප් ප්‍රකාශ කර තිබේ.


සිය ටෲත් සෝෂල් (Truth Social) ගිණුමේ සටහනක් තබමින් ට්‍රම්ප් පෙන්වා දී ඇත්තේ, මෙම අතිවිශිෂ්ට තාක්ෂණික කර්මාන්තයේ වර්ධනය කිසිසේත් සීමා කිරීමට හෝ බාධා කිරීමට කටයුතු නොකරන අතර, එය රැකබලා ගනිමින් ඇමරිකාවේ ප්‍රමුඛත්වය තහවුරු කිරීමට පූර්ණ සහය ලබාදෙන බවයි. කෘත්‍රිම බුද්ධිය හරහා රටේ දළ දේශීය නිෂ්පාදිතයෙන් (GDP) 25% ක පමණ දැවැන්ත ආර්ථික බලපෑමක් ඇතිවිය හැකි බව සඳහන් කළ ඔහු, එහි අහිතකර භාවිතයන් වැළැක්වීමට දැනට පවතින අපරාධ සහ සිවිල් නීති ප්‍රමාණවත් වන බැවින් අමතර නීතිමය බාධාවන් පැනවීමට විරුද්ධ වන බවද වැඩිදුරටත් අවධාරණය කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / අමෙරිකානු දේශපාලන සහ තොරතුරු තාක්ෂණ පුවත්


Trump Announces Plans to Establish 'AI Force' and Appoint New 'AI Czar'


US President Donald Trump announced on Saturday plans to establish a federal AI Force modeled on the US Space Force, alongside the forthcoming appointment of a specialized AI Czar to oversee the rapid expansion and competitiveness of the artificial intelligence industry.


Writing on his Truth Social platform, Trump emphasized that his administration will not hinder or stifle the trajectory of the AI sector, but rather nurture and safeguard it against international competition, particularly from China. Projecting that the technological surge could represent the next industrial revolution and drive up to 25 percent of the nation's GDP, he dismissed proposals for rigid federal restrictions, contending that any potential misuse of the technology can be adequately policed through the nation's existing civil and criminal justice systems.


KR TV Network - International News / US Politics and Information Technology

Comments