Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவூதி அரேபியாவில் கல்முனை அனோஜனின் மேன்முறையீட்டு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல்: சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தகவல் வெளியீடு


 சவூதி அரேபியாவில் கல்முனை அனோஜனின் மேன்முறையீட்டு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல்: சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தகவல் வெளியீடு


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான அல்லது பிழையான கருத்தைப் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட கல்முனையைச் சேர்ந்த அனோஜன் என்பவரின் மேன்முறையீட்டு வழக்கின் போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இத்தகவலை சமூகச் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் நேற்று (17) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக இவ்வழக்குத் தொடர்பாக சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் அனோஜனுக்கு ஐந்து வருட கால சிறைத் தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால்கள் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அத்தீர்ப்பிற்கு எதிராக அனோஜன் தரப்பினால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் தண்டனையை மரண தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / சவூதி அரேபியா மற்றும் நீதித்துறைச் செய்தி


සවුදි අරාබියේදී කල්මුනේ අනෝජන්ට එරෙහි අභියාචනා තීන්දුවෙන් මරණ දඬුවම නියම වූ බවට තොරතුරු: සමාජ ක්‍රියාකාරික රාජ්කුමාර් රජීව්කාන්ත් පවසයි


මුහම්මද් නබි නායකතුමන් සම්බන්ධයෙන් සමාජ මාධ්‍ය ඔස්සේ වැරදි සහගත ප්‍රකාශයක් පළකළ බවට චෝදනා කරමින් අත්අඩංගුවට ගෙන සවුදි අරාබි අධිකරණයක් මඟින් දඬුවම් නියම කර සිටි කල්මුණේ ප්‍රදේශයේ පදිංචි අනෝජන් නැමැති තරුණයාට අභියාචනා නඩු තීන්දුවේදී මරණ දඬුවම නියම කර ඇති බවට තොරතුරු වාර්තා වේ.


සමාජ ක්‍රියාකාරිකයෙකු වන රාජ්කුමාර් රජීව්කාන්ත් විසින් ඊයේ (17) මෙම තොරතුරු අනාවරණය කර ඇත. මීට පෙර අදාළ නඩුවට අදාළව සවුදි අධිකරණය විසින් අනෝජන්ට වසර පහක සිරදඬුවමක් සහ සවුදි රියාල් මිලියන තුනක දඩ මුදලක් නියම කර තිබුණි. ඊට එරෙහිව අනෝජන්ගේ පාර්ශ්වයෙන් ඉදිරිපත් කරන ලද අභියාචනය සලකා බැලූ අධිකරණය විසින් අභියාචනා තීන්දුව ලෙස මරණ දඬුවම නියම කර ඇති බව ඔහු වැඩිදුරටත් සඳහන් කර තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / සවුදි අරාබිය සහ අධිකරණ පුවත්


Death Sentence Reportedly Handed to Kalmunai Youth Anojan on Appeal in Saudi Arabia: Activist Rajkumar Rajeevkanth


Reports indicate that Sri Lankan national Anojan from Kalmunai, who had been incarcerated in Saudi Arabia over allegations of publishing blasphemous or derogatory commentary targeting Prophet Muhammad (PBUH) across social media, has been sentenced to death following an appeal hearing.


Human rights activist Rajkumar Rajeevkanth disclosed this update yesterday (17). Anojan was previously sentenced by a Saudi court to five years of imprisonment alongside a penalty fine of three million Saudi Riyals. Challenging the primary custodial verdict, an appeal was filed on Anojan’s behalf; however, the appellate judicial forum has reportedly enhanced the verdict to capital punishment.


KR TV Network - International News / Saudi Arabia and Judicial Affairs

Comments