Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பதுளை - மஹியங்கன வீதியில் கோர விபத்து: வீட்டின் மீது லொறி கவிழ்ந்து நால்வர் படுகாயம்!






 பதுளை - மஹியங்கன வீதியில் கோர விபத்து: வீட்டின் மீது லொறி கவிழ்ந்து நால்வர் படுகாயம்!


பதுளை – மஹியங்கன பிரதான வீதியில் மடிதலே சந்திப் பகுதியில் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில், வீட்டின் மீது லொறி கவிழ்ந்ததில் தந்தை, மகன் உட்பட நால்வர் படுகாயமடைந்து பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 பிரேக் பழுதடைந்தமையால் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது மோதியதுடன், பின்னர் வீதிக்கு அருகில் சுமார் 75 அடி செங்குத்தான பள்ளத்தாக்கில் அமைந்திருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான ஒரு வீட்டின் மீது தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


 இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான லொறியின் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் வீதியில் இருந்த தந்தை, அவரது மகன் ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்துயரங்களைத் தவிர்த்து, விபத்துகளற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்

கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பிராந்திய / அவசரச் செய்தி


වාර්තාකරු:ෆර්හාන බදුර්දීන්


 බදුල්ල - මහියංගන මාර්ගයේ බිහිසුණු අනතුරක්: ලොරි රථයක් නිවසක් මතට පෙරළී සිව්දෙනෙකු බරපතළ තුවාල ලබයි!


බදුල්ල - මහියංගන මාර්ගයේ මැඩිතලේ හන්දියේදී ඊයේ (12) පස්වරුවේ සිදුවූ බිහිසුණු රිය අනතුරකින්, නිවසක සිටි පියෙකු සහ පුතෙකු මෙන්ම ලොරි රථයේ රියදුරු සහ සහායකවරයා බරපතළ තුවාල ලබා බදුල්ල ශික්ෂණ රෝහලට ඇතුළත් කර තිබේ.


 තිරිංග අක්‍රීය වීම නිසා පාලනය කරගත නොහැකි වූ ලොරි රථයක් මාර්ගයේ නවතා තිබූ ත්‍රිරෝද රථයක ගැටී, පසුව අඩි 75 ක පමණ ප්‍රපාතයක පිහිටා තිබූ මාර්ග සංවර්ධන අධිකාරියට අයත් නිවසක් මතට පෙරළී ගොස් ඇත.


මෙම අනතුරින් බරපතළ තුවාල සිදුවූ අතර, අනාගතයේදී මෙවැනි ඛේය වාචක මඟහරවා ගනිමින් ආරක්ෂාකාරී රිය පැදවීමක් හරහා අනතුරු වලින් තොර සමාජයක් බිහි කිරීමේ අරමුණින් මෙම අනතුරට මුහුණපෑ අයුරු දැක්වෙන ඡායාරූප ජනතාවගේ දැනුවත්භාවය සඳහා පළ කරනු ලැබේ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  | ප්‍රාදේශීය / හදිසි පුවත්


Tragic Accident on Badulla-Mahiyangana Road: Lorry Plunges onto House, Leaving Four Severely Injured!


Four individuals, including a father and son, sustained critical injuries when a brake-failed lorry veered off the road and crashed onto a house at the Madithale Junction along the Badulla-Mahiyangana main road yesterday afternoon (12). All victims have been rushed to the Badulla Teaching Hospital.


Before crashing onto the house, the out-of-control vehicle first collided with a parked three-wheeler on the roadside. It then plunged down a steep 75-foot precipice, landing directly on a Road Development Authority-owned residence.


 The driver and assistant of the lorry, alongside the father and son inside the house, were seriously injured. Photographs of the wreckage are being shared publicly to urge drivers to practice road safety and prevent such catastrophic accidents in the future.


Reporter: Farhana Bathur deen


KRTV Network | Regional / Breaking News

Comments