Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலிக்கு விரைவில் மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிரடி அறிவிப்பு


 யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலிக்கு விரைவில் மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிரடி அறிவிப்பு


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


இதுவரை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிநவீன மெட்ரோ பேருந்து சேவையினை காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய நகரங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார். இந்த ஆண்டின் இறுதிக்குள் மெட்ரோ பேருந்து சேவையின் தொகுதியை 172 பேருந்துகள் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், எதிர்காலத்தில் தனியார் துறையினருக்கும் இந்த நவீன பொதுப் போக்குவரத்துத் திட்டத்தில் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / போக்குவரத்துச் செய்தி


යාපනය, නුවර සහ ගාල්ලටත් කඩිනමින් මෙට්‍රෝ බස් සේවාව දීර්ඝ කෙරේ: අමාත්‍ය බිමල් රත්නායකගෙන් විශේෂ ප්‍රකාශයක්


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


මෙතෙක් බස්නාහිර පළාතට පමණක් සීමා වී තිබූ නවීන මෙට්‍රෝ බස් රථ සේවාව (Metro Bus Service) ගාල්ල, මහනුවර සහ යාපනය යන ප්‍රධාන නගර කරාද දීර්ඝ කිරීමට පියවර ගන්නා බව ප්‍රවාහන, මහාමාර්ග සහ නාගරික සංවර්ධන අමාත්‍ය බිමල් රත්නායක මහතා ප්‍රකාශ කර තිබේ.


කඩවත මෙට්‍රෝ ඩිපෝ පර්යන්තයේ මෙහෙයුම් කටයුතු නිල වශයෙන් ආරම්භ කරමින් අදහස් දැක්වූ අමාත්‍යවරයා මේ බව සඳහන් කළේය. මෙම වසර අවසන් වන විට මෙට්‍රෝ බස් රථ සේවාව බස් රථ 172ක් දක්වා ව්‍යාප්ත කිරීමට අපේක්ෂා කරන බවත්, ඉදිරියේදී පෞද්ගලික අංශයටද මෙම ව්‍යාපෘතිය සඳහා අවස්ථාව ලබාදීමට නියමිත බවත් ඔහු වැඩිදුරටත් අවධාරණය කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ප්‍රවාහන පුවත්


Metro Bus Service to Expand to Jaffna, Kandy, and Galle: Minister Bimal Rathnayake Outlines Public Transit Fleet Modernization


Reporter: Farhana Badurdeen


The advanced Metro Bus service, previously confined to the Western Province, will soon be systematically extended to link major transit hubs across Galle, Kandy, and Jaffna, announced Minister of Transport, Highways, and Urban Development Bimal Rathnayake.


Delivering an address during the official commissioning of operations at the Kadawatha Metro Depot terminal, the minister indicated that the operational fleet is slated to scale up to 172 buses before the close of the current year. Rathnayake further noted that commercial framework opportunities will be opened to incorporate private sector operators into the modernization scheme to ensure optimized inter-provincial connectivity.


KR TV Network - Local News / Transport News

Comments