கவிஞர் பாலமுனை வாஹிட்டின் "தொலைந்து போன முகவரி" கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை பாலமுனையில் ஏற்பாடு
கவிஞர் பாலமுனை வாஹிட்டின் "தொலைந்து போன முகவரி" கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை பாலமுனையில் ஏற்பாடு
கவிஞர் பாலமுனை வாஹிட் எழுதிய "தொலைந்து போன முகவரி" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (12) முற்பகல் 9.00 மணிக்கு பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
கலாபூசணம் பாவேந்தல் பாலமுனை பாருக் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதியாகப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, விசேட அதிதியாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார், சிறப்பு அதிதியாகப் பொறியியலாளர் கவிஞர் தம்பி லெவ்வை இஸ்மாயில் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இவர்களுடன் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் இலக்கிய அதிதியாகவும், பிரதேச சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சீல் மற்றும் சந்தக்கவிஞர் கிண்ணியா அமீர் அலி ஆகியோர் நட்சத்திர அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், கவிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
செய்தியாளர்: அஹமட்
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்ளூர் கலை கலாசாரச் செய்தி
කවියා පාලමුනෙයි වාහිඩ්ගේ "තොලෛන්දු පෝන මුගවරි" කාව්ය කෘතිය දොරට වැඩීම සෙනසුරාදා පාලමුනෙයිදී
ප්රවීණ කවි පාලමුනෙයි වාහිඩ් විසින් රචිත "තොලෛන්දු පෝන මුගවරි" (අහිමි වූ ලිපිනය) නමැති කාව්ය ග්රන්ථය එළිදැක්වීමේ සාහිත්ය උළෙල ලබන සෙනසුරාදා (12) පෙ.ව. 9.00 ට පාලමුනෙයි අල්-හිදායා බාලිකා විද්යාලයේදී පැවැත්වීමට නියමිතයි.
කලාභූෂණ පාලමුනෙයි ෆාරුක්ගේ ප්රධානත්වයෙන් පැවැත්වෙන මෙම උළෙලේ ප්රධාන ආරාධිත අමුත්තා ලෙස සමස්ත ලංකා මක්කල් කොංග්රසයේ නායක සහ පාර්ලිමේන්තු මන්ත්රී අල්-හාජ් රිෂාඩ් බදියුදීන් සහභාගී වේ.
පාර්ලිමේන්තු මන්ත්රී එම්.එස්. උදුමාලෙබ්බෙ ගෞරවනීය අමුත්තා ලෙසද, සහකාර පොලිස් අධිකාරී එම්.කේ. ඉබ්නු අසාර් විශේෂ ආරාධිතයා ලෙසද, ඉංජිනේරු කවි තම්බි ලෙබ්බෙ ඉස්මයිල් විශේෂ අමුත්තා ලෙසද එක්වීමට නියමිතය. තවද, මහාචාර්ය රමීස් අබ්දුල්ලා සාහිත්ය අමුත්තා ලෙසත්, ප්රාදේශීය සභා මන්ත්රී නීතිඥ එම්.ඒ. අන්සීල් සහ සන්දක්කවිඥර් කින්නියා අමීර් අලි විශිෂ්ට ආරාධිතයින් ලෙසත් සහභාගී වෙති. මෙම අවස්ථාවට සාහිත්යවේදීන්, කවීන්, විද්වතුන් සහ දේශපාලන ප්රභූන් රැසක් එක්වීමට නියමිත බව වාර්තා වේ.
වාර්තාකරු: අහමඩ්
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Poet Palamunai Vahit's Book "Tholainthu Pona Mugavari" Launch Set for Saturday in Palamunai
The official launch ceremony of the Tamil poetry collection titled "Tholainthu Pona Mugavari" authored by poet Palamunai Vahit is scheduled to be held this coming Saturday (12) at 9:00 AM at the Palamunai Al-Hidhaya Ladies' College premises.
Presided over by Kalabooshanam Paaventhal Palamunai Farook, the literary gathering will be graced by the Leader of the All Ceylon Makkal Congress and Member of Parliament, Al-Haj Rishad Bathiudeen, as the Chief Guest.
Member of Parliament M.S. Uthumalebbe will attend as the Guest of Honour, alongside Assistant Superintendent of Police M.K. Ibnu Azar as a Special Guest, and Engineer-Poet Thambi Lebbe Ismail as a Special Invitee. Furthermore, Professor Rameez Abdullah will join as the Literary Guest, while Pradeshiya Sabha Member Attorney M.A. Anzeel and acclaimed poet Kinniya Ameer Ali will be featured as Star Guests. The event is set to convene notable writers, poets, scholars, and community leaders.
Reporter: Ahamath
KR TV Network - Local Arts & Culture

Comments