Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பல்வேறு மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசேட தெளிவுபடுத்தல் – சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என எச்சரிக்கை!


 பல்வேறு மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசேட தெளிவுபடுத்தல் – சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என எச்சரிக்கை!


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்



பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) முக்கிய தெளிவுபடுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.



சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் குறித்த அறிவித்தல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் அனைத்தும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் எனக் பொதுமக்கள் கருத வேண்டாம் என்றும் அதிகாரசபை எச்சரித்துள்ளது.


நூகர்வோர் விவகார அதிகாரசபையின் கூற்றுப்படி, பின்வரும் குறிப்பிட்ட பரிசோதனைகளுக்கு மட்டுமே வர்த்தமானி மூலம் அதிகபட்சக் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன:



முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC): ரூ. 400 (பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு)



டெங்கு NS1 என்டிஜென் பரிசோதனை: ரூ. 1,200 (பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு)



கொவிட்-19 பிசிஆர் (PCR) பரிசோதனை: ரூ. 6,500 (பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு)



கொவிட்-19 விரைவு என்டிஜென் (RAT) பரிசோதனை: ரூ. 2,000 (பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு)



இவை தவிர, பரப்பப்படும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT, MRI, Ultrasound, Mammogram மற்றும் DEXA உள்ளிட்ட பிற பரிசோதனைகளுக்கான கட்டணங்கள், அதிகாரசபையின் உத்தரவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் அல்ல என வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் போலித் தகவல்களை நம்பாமல், மேலதிக தெளிவுபடுத்தல்களுக்கு 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / நுகர்வோர் விவகாரச் செய்தி




විවිධ වෛද්‍ය පරීක්ෂණ ගාස්තු සම්බන්ධයෙන් පාරිභෝගික කටයුතු අධිකාරියෙන් විශේෂ පැහැදිලි කිරීමක් – සමාජ මාධ්‍යවල පැතිර යන අසත්‍ය තොරතුරු නොමඟ නොයන ලෙස දැනුම්දීමක්!



වාර්තාකරු: ෆර්හානාබදුර්දීන්r




විවිධ වෛද්‍ය පරීක්ෂණ සඳහා අය කෙරෙන ගාස්තු ඇතුළත් ලැයිස්තුවක් සමාජ මාධ්‍ය ඔස්සේ සංසරණය වීම සම්බන්ධයෙන් පාරිභෝගික කටයුතු අධිකාරිය (CAA) විසින් වැදගත් පැහැදිලි කිරීමක් සිදු කර තිබේ.




සමාජ ජාලා ඔස්සේ හුවමාරු වන අදාළ නිවේදනය නිල ප්‍රකාශයක් නොවන බවත්, එහි සඳහන් වන සියලුම ගාස්තු ගැසට් නිවේදනයක් මඟින් නියම කරන ලද උපරිම ගාස්තු ලෙස ජනතාව නොසැලකිය යුතු බවත් අධිකාරිය අවධාරණය කරයි.



පාරිභෝගික කටයුතු අධිකාරියට අනුව, පහත සඳහන් පරීක්ෂණ සඳහා පමණක් ගැසට් පත්‍රය හරහා නිල වශයෙන් උපරිම ගාස්තු පනවා ඇත:



සම්පූර්ණ රුධිර පරීක්ෂණය (FBC): රු. 400 (පරීක්ෂණය සහ වාර්තාව සමඟ)



ඩෙංගු NS1 ප්‍රතිජනක පරීක්ෂණය: රු. 1,200 (පරීක්ෂණය සහ වාර්තාව සමඟ)



කොවිඩ්-19 PCR පරීක්ෂණය: රු. 6,500 (පරීක්ෂණය සහ වාර්තාව සමඟ)



කොවිඩ්-19 රැපිඩ් ඇන්ටිජන් (RAT) පරීක්ෂණය: රු. 2,000 (පරීක්ෂණය සහ වාර්තාව සමඟ)



මීට අමතරව, සංසරණය වන ලැයිස්තුවේ සඳහන් FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT, MRI, Ultrasound, Mammogram සහ DEXA ඇතුළු අනෙකුත් පරීක්ෂණ ගාස්තු අධිකාරියේ නියෝග යටතේ නිල වශයෙන් නියම කළ උපරිම ගාස්තු නොවන බව දන්වා සිටී. මේ සම්බන්ධයෙන් වැඩිදුර තොරතුරු හෝ පැහැදිලි කිරීම් අවශ්‍ය නම් 1977 යන ක්ෂණික ඇමතුම් අංකය අමතන ලෙස පාරිභෝගිකයන්ගෙන් ඉල්ලා ඇත.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  ජාතික / පාරිභෝගික කටයුතු පුවත්




 Consumer Affairs Authority Issues Clarification on Medical Testing Fees: Public Urged Not to Rely on Unverified Social Media Lists!


Reporter: Farhana bathurdeen




The Consumer Affairs Authority (CAA) has issued an important clarification regarding a list of medical testing fees currently circulating across various social media platforms.



The Authority has cautioned the public that the widely shared lists are not official documents and that the prices listed should not be misconstrued as maximum charges legally mandated through an official gazette notification.


According to the Consumer Affairs Authority, maximum charges have only been officially gazetted for the following specific medical tests:



Full Blood Count (FBC): Rs. 400 (Inclusive of test and report)



Dengue NS1 Antigen Test: Rs. 1,200 (Inclusive of test and report)



COVID-19 PCR Test: Rs. 6,500 (Inclusive of test and report)



COVID-19 Rapid Antigen Test (RAT): Rs. 2,000 (Inclusive of test and report)



It is strongly emphasized that fees for other tests mentioned in the viral circular—such as FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT, MRI, Ultrasound, Mammogram, and DEXA—are not capped under official CAA price directives. Consumers are advised to rely solely on official verified information and can contact the hot-line 1977 for further inquiries and clarifications.



KRTV Network | National / Consumer Affairs News400

Comments