Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தலைமன்னார் கடற்பரப்பில் மணல்மேட்டில் தவித்த இலங்கை அகதிகள் கடற்படையினரால் மீட்பு!




 தலைமன்னார் கடற்பரப்பில் மணல்மேட்டில் தவித்த இலங்கை அகதிகள் கடற்படையினரால் மீட்பு!


தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள மணல்மேட்டில் வழிதவறித் தவித்த இலங்கை அகதிகள் குழுவொன்று இலங்கைச் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.


மீட்பு நடவடிக்கை: குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு ஒன்றில் வழிதவறித் தவித்த இந்தக் குழுவினர் அவதானிக்கப்பட்டு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


அகதிகளின் விவரம்: மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆணும், நான்கு பெண்களும், 2 முதல் 14 வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகளும் அடங்குவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.


இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் வழியாகக் கடல் வழியே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


 மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிகத் தங்குமிட வசதிகளை வழங்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மீட்கப்பட்ட நபர்கள் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காகச்

சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


கே.ஆர்.தி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 තලෙයිමන්නාරම මුහුදු ප්‍රදේශයේ වැලි ඔහියක සිරවී සිටි ශ්‍රී ලංකා ශරණකයින්` පිරිසක් නාවික හමුදාව විසින් මුදා ගනියි!


තලෙයිමන්නාරම මුහුදු ප්‍රදේශයේ පිහිටි වැලි ඔහියක මඟ හැරී සිරවී සිටි ශ්‍රී ලංකා ශරණකයින්` පිරිසක් නාවික හමුදා නිලධාරීන් විසින් ආරක්ෂිතව මුදාගෙන තිබේ.


 අදාළ මුහුදු ප්‍රදේශයේ නාවික හමුදාව විසින් සිදු කරන ලද මුර සංචාරයකදී, වැලි තලා මත මඟ හැරී සිටි මෙම පිරිස නිරීක්ෂණය කර ඇත.


මුදාගත් පිරිස අතර එක් පිරිමියෙකු, කාන්තාවන්හතර දෙනෙකු සහ වයස අවුරුදු 2 ත් 14 ත් අතර දරුවන් තිදෙනෙකු ඇතුළත් වන බව නාවික හමුදාව සඳහන් කරයි.


ඉන්දියාවේ අනෙයූර් සහ ඔක්කූර් සරණාගත කඳවුරුවල සිට රාමේෂ්වරම් හරහා මුහුදු මාර්ගයෙන් මොවුන් පැමිණ ඇති බවත්, මීට පෙර ඉන්දියාවේ සරණාගත තත්ත්වය ඉල්ලා සිටි අය බවත් මූලික විමර්ශනවලදී අනාවරණය වී ඇත.


දැඩි අපහසුතාවට පත්ව සිටි මෙම පිරිසට අවශ්‍ය පානීය ජලය, ආහාර සහ තාවකාලික නවාතැන් පහසුකම් ලබා දීමට පියවර ගෙන තිබේ.


 මුදාගත් මෙම පුද්ගලයින් ඉදිරි නීතිමය සහ පරිපාලන කටයුතු සඳහා අදාළ බලධාරීන් වෙත භාර දීමට නියමිතය.


කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් | දේශීය පුවත්


Sri Lankan Refugees Stranded on Talaimannar Sandbank Rescued Safely by the Navy!


A group of Sri Lankan refugees who lost their way and became stranded on a sandbank in the Talaimannar sea area has been successfully rescued by the Sri Lankan Navy.


 The group was spotted during a routine naval patrol conducted in the designated sea area after they were found stranded on a shallow sandbank.


 The Navy reported that the rescued group comprises one adult male, four adult females, and three children aged between 2 and 14 years.


 Preliminary investigations revealed that they arrived via sea routes from India after leaving the Anaiyur and Okkur refugee camps via Rameswaram, and had previously sought refugee status in India.


 Found in a severely distressed condition, immediate arrangements were made by the naval personnel to provide them with drinking water, food, and temporary shelter.


 The rescued individuals are scheduled to be handed over to the relevant authorities for necessary legal and administrative proceedings.


KRTV Network | Local News

Comments