Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பல கோடி ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது!

 


பல கோடி ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது!


சுமார் 5 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' ரக போதைப்பொருட்களைச் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடத்திவந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 தாய்லாந்தில் இறைச்சிக் கடையில் பணிபுரியும் 23 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (08) அதிகாலை 12.00 மணிக்கு பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளனர்.


பசுமைப் பாதை' (Green Channel) வழியாகச் செல்ல முயன்றபோது அவர்களின் பைகளில் இருந்த விட்டமின் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் 'குஷ்' மற்றும் 641 கிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


කෝටි ගණනක් වටිනා මත්ද්‍රව්‍ය සමඟ කටුනායකදී විදේශිකයන් දෙදෙනෙක් අත්අඩංගුවට!


රුපියල් කෝටි පහකට අධික වටිනාකමකින් යුත් 'කුෂ්' සහ 'හෂීෂ්' මත්ද්‍රව්‍ය නීතිවිරෝධී ලෙස ශ්‍රී ලංකාවට රැගෙන ආ තායිලන්ත ජාතිකයන් දෙදෙනෙකු කටුනායක ගුවන්තොටුපළේදී රේගු මත්ද්‍රව්‍ය පාලන අංශයේ නිලධාරීන් විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ.


 තායිලන්තයේ මස් කඩයක මස් කපන්නන් ලෙස සේවය කරන 23 සහ 39 යන වයස්වල පසුවන දෙදෙනෙකු මෙසේ අත්අඩංගුවට ගෙන ඇති අතර, ඔවුන් අද (08) අලුයම 12.00 ට බැංකොක් නුවර සිට කටුනායක ගුවන්තොටුපළ වෙත පැමිණ ඇත.


'හරිත මාවත' (Green Channel) හරහා යාමට උත්සාහ කිරීමේදී ඔවුන්ගේ ගමන් මලු තුළ තිබූ විටමින් බෝතල්වල සඟවා තිබූ කිලෝ 4යි ග්‍රෑම් 496ක 'කුෂ්' සහ ග්‍රෑම් 641ක 'හෂීෂ්' මත්ද්‍රව්‍ය රේගු නිලධාරීන් විසින් සොයාගෙන ඇති අතර, වැඩිදුර විමර්ශන සඳහා සැකකරුවන් සහ මත්ද්‍රව්‍ය තොගය ගුවන්තොටුපළ මත්ද්‍රව්‍ය නාශක කාර්යාංශය වෙත භාර දී ඇත.


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


Two Foreign Nationals Arrested at Katunayake Airport with Multi-Million Rupee Narcotics Haul!


Two Thai nationals attempting to smuggle 'Kush' and 'Hashish' narcotics valued at approximately Rs. 51.37 million into Sri Lanka have been arrested by customs narcotics control officers at the Bandaranaike International Airport in Katunayake.


The suspects, aged 23 and 39, work as butchers in Thailand and arrived at Katunayake Airport from Bangkok today (08) at 12:00 AM.


 While attempting to pass through the 'Green Channel', customs officers inspected their luggage and recovered 4 kg and 496 g of 'Kush' concealed inside 16 vitamin containers, along with 641 g of 'Hashish'. The suspects and the seized narcotics have been handed over to the airport police narcotics bureau for further investigations.


Reporter: Farhana Bathur deen


KRTV Network | Local News

Comments