Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தெஹிவளை, கவுடான பகுதியில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இரண்டு சிறார்கள் உயிரிழப்பு; தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி


 தெஹிவளை, கவுடான பகுதியில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இரண்டு சிறார்கள் உயிரிழப்பு; தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கொடூரமான கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று அதிகாலை உந்துருளியில் வருகை தந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குறித்த வீட்டின் மீது கைக்குண்டை வீசித் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு சிறார்களும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / குற்றவியல் செய்தி


දෙහිවල, ගවූඩාන ප්‍රදේශයේ නිවසකට අද අලුයම එල්ල වූ අත්බෝම්බ ප්‍රහාරයකින් කුඩා දරුවන් දෙදෙනෙකු මරුට; පියා බරපතළ තුවාල ලබා රෝහලේ


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


දෙහිවල, ගවූඩාන ප්‍රදේශයේ සිරිසඟබෝ මාවතේ පිහිටි නිවසක් ඉලක්ක කරගනිමින් අද (11) අලුයම එල්ල කරන ලද දරුණු අත්බෝම්බ ප්‍රහාරයකින් එම නිවසේ සිටි කුඩා දරුවන් දෙදෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව ඇති අතර, ඔවුන්ගේ පියා බරපතළ තුවාල ලබා රෝහල්ගත කර තිබේ.


අද අලුයම් කාලයේදී යතුරුපැදියකින් පැමිණි නාඳුනන තුවක්කුකරුවන් පිරිසක් විසින් නිවස වෙත අත්බෝම්බ ප්‍රහාරය එල්ල කර වහාම පළාගොස් ඇති බව මූලික විමර්ශනවලදී අනාවරණය වී ඇත. ප්‍රහාරයෙන් තුවාල ලැබූවන් කඩිනමින් රෝහල්ගත කිරීමට පියවර ගත්තද, ඒ වන විටත් දරුවන් දෙදෙනා මියගොස් සිටි බව වාර්තා වේ. බරපතළ තුවාල ලැබූ පියා මේ වන විට රෝහලේ දැඩි සත්කාර ඒකකයේ ප්‍රතිකාර ලබමින් සිටියි. ප්‍රදේශය පුරා මහත් භීතියක් ඇති කළ මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් සහ පළාගිය සැකකරුවන් අත්අඩංගුවට ගැනීම සඳහා පොලිසිය පුළුල් පරීක්ෂණ ආරම්භ කර තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අපරාධ පුවත්


Hand Grenade Attack on Residence in Dehiwala Kawdana Leaves Two Children Dead and Father Severely Injured


Reporter: Farhana Badurdeen


A hand grenade attack directed at a residential premises along Sirisangabo Road in the Kawdana area of Dehiwala early this morning (11) has resulted in the tragic death of two young children, while their father sustained severe injuries and was hospitalized for critical care.


According to preliminary investigative briefings, unidentified assailants arriving on a motorcycle hurled a hand grenade into the residence before fleeing the area. The victims were rushed to the hospital immediately following the explosion; however, the two minors succumbed to their grave blast trauma upon admission. The critically injured father remains under intensive medical treatment. Police authorities have initiated comprehensive forensic and investigative operations to identify the perpetrators, establish the motive behind the fatal explosion, and effect immediate arrests.


KR TV Network - Local News / Crime and Judicial News

Comments