Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு - சுகாதாரத் தரம் குறைபாடு காரணமாக நடவடிக்கை!


 மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு - சுகாதாரத் தரம் குறைபாடு காரணமாக நடவடிக்கை!


திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனைகளின் போது சுகாதாரத் தரங்கள் கடுமையாக மீறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, அதனை உடனடியாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 வைத்தியசாலையின் சுகாதார நிலைமைகள் குறித்துப் பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடுத்து, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட மூதூர் நீதவான் யூ. வசீம் அஹமட், குறித்த சிற்றுண்டிச்சாலையை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.


 சிற்றுண்டிச்சாலையின் தற்போதைய சுகாதார நிலைமை குறித்த விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கு நீதிபதி பணித்துள்ளார். நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலை வளாகங்களில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பிராந்தியச் செய்தி


 මුතුර් මූලික රෝහලේ ආපන ශාලාව වසා දැමීමට අධිකරණයෙන් නියෝගයක් - සෞඛ්‍ය ප්‍රමිතීන් බිඳ වැටීම හේතුවෙන් පියවර!


ත්‍රිකුණාමලය - මුතුර් මූලික රෝහලේ ආපන ශාලාවේ සිදු කරන ලද සෞඛ්‍ය පරීක්ෂාවකදී නිරීක්ෂණය වූ සෞඛ්‍යාරක්ෂිත ගැටලු හේතුවෙන්, එම ආපන ශාලාව වසා දමන ලෙස අධිකරණය නියෝග කර තිබේ.


 රෝහලේ සෞඛ්‍ය තත්ත්වය සම්බන්ධයෙන් මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරයා විසින් ගොනු කරන ලද නඩුවක් සලකා බැලූ මුතුර් මහේස්ත්‍රාත් යූ. වසීම් අහමඩ් මහතා, චෝදනා හතරක් යටතේ අදාළ ආපන ශාලාව ලබන 18 වැනි දින දක්වා වසා තබන ලෙස නියෝග කර ඇත.


 ආපන ශාලාවේ සෞඛ්‍ය තත්ත්වය පිළිබඳ සවිස්තරාත්මක වාර්තාවක් සතියක් ඇතුළත අධිකරණයට ඉදිරිපත් කරන ලෙස මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරයාට නියෝග කර ඇති අතර, රෝහල් පරිශ්‍රයන්හි මහජන සෞඛ්‍ය සුරක්ෂිතතාව තහවුරු කිරීම සඳහා බලධාරීන් දැඩි නිරීක්ෂණ කටයුතුවල නිරතව සිටිති.


 


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ප්‍රාදේශීය පුවත්


Court Orders Immediate Closure of Mutur Base Hospital Canteen Due to Severe Health Violations!


The Mutur Magistrate's Court has ordered the temporary closure of the canteen at the Mutur Base Hospital following the detection of major hygiene and health standard violations during inspections.


Acting on a case filed by the Public Health Inspector (PHI) following a thorough inspection of the hospital premises, Mutur Magistrate U. Waseem Ahamad ordered the canteen to be shut down until September 18, pending further legal and health evaluations across multiple charges.


 The magistrate has further directed the PHI to submit a comprehensive report detailing the sanitary conditions of the facility within a week. Health authorities continue rigorous monitoring across institutional food outlets to safeguard public health and patient safety. 


KRTV Network | Regional News

Comments