இரு புனிதத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் புனிதம்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி ஜும்ஆப் பேருரைகளில் வலியுறுத்தல்
இரு புனிதத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் புனிதம்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி ஜும்ஆப் பேருரைகளில் வலியுறுத்தல்
புனித மக்கா மற்றும் மதீனா ஆகிய நகரங்களின் புனிதம், பாதுகாப்பு மற்றும் அங்குள்ள மக்களின் அமைதியைப் பாதுகாப்பது மிக முக்கியமான கட்டாயம் எனவும், அதனை மீறுவது பாரிய குற்றமாகும் எனவும் மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவி ஆகிய இரு பெரும் புனிதப் பள்ளிவாசல்களின் ஜும்ஆப் பேருரைகளில் இமாம்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கா மஸ்ஜிதுல் ஹராம் இமாம் அஷ்-ஷைக் கலாநிதி பந்தர் பலீலா ஆற்றிய குத்பா பேருரையில், புனிதத் தலங்கள் மற்றும் அமைதியான நகரங்களைக் குறிவைத்து அச்சுறுத்துவதும், பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள் மற்றும் உடைமைகளை இலக்கு வைப்பதும் மார்க்க விழுமியங்களுக்கும் மனிதாபிமானத்திற்கும் முற்றிலும் எதிரான குற்றவியல் நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்டார். மேலும் முஸ்லிம்கள் மத்தியில் நற்பெயரையும் நல்லெண்ணத்தையும் பேண வேண்டும் என்றும், புறம்பேசுதல், வேவு பார்த்தல் மற்றும் சந்தேகப்படுதல் ஆகியவற்றிலிருந்து விலகி உள்ளங்களின் தூய்மையைப் பாதுகாத்து சமூக ஒற்றுமையை பலப்படுத்துமாறு அவர் நினைவூட்டினார்.
இதேவேளை, மதீனா மஸ்ஜிதுன் நபவி இமாம் அஷ்-ஷைக் கலாநிதி அப்துல் முஹ்சின் அல்-காஸிம் தனது பேருரையில், மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள புனிதத்தையும் சிறப்பையும் சுட்டிக்காட்டினார். அமைதியான மனிதர்களை அச்சுறுத்துவதும், இரத்தம் சிந்துவதும், புனித நகரங்களின் பாதுகாப்பைக் குலைக்க முனைவதும் பெருங்குற்றமாகும் என எச்சரித்த அவர், யானைப்படையினரின் வரலாற்றுச் சம்பவத்தையும், மதீனாவின் புனிதத்தைப் பேணுவது தொடர்பான நபிமொழிகளையும் மேற்கோள் காட்டினார். அத்துடன், மனிதர்களின் செல்வ நிலை மற்றும் வாழ்வாதாரங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இறைவனின் சோதனையாகும் எனவும், அல்லாஹ்விடத்தில் மனிதர்களின் மேன்மையை தீர்மானிப்பது இறையச்சமும் நற்செயல்களுமே தவிர செல்வமல்ல எனவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / ஆன்மீகம் மற்றும் இஸ்லாமிய மார்க்க விவகாரம்
ශුද්ධ නගරයන්හි ආරක්ෂාව හා ගෞරවය සුරැකීම ගැන මක්කම සහ මදීනා ජුම්ආ දේශනාවලින් අවධාරණය කෙරේ
ශුද්ධ වූ මක්කම සහ මදීනාව යන නගරයන් සතු උත්තරීතර ගෞරවය හා පාරිශුද්ධත්වය රැකගැනීමත්, එහි වෙසෙන සාමකාමී ජනතාවගේ ආරක්ෂාව තහවුරු කිරීමත් කිසිසේත් උල්ලංඝනය කළ නොහැකි මූලික වගකීමක් බව මක්කම මස්ජිදුල් හරාම් සහ මදීනාවේ මස්ජිදුන් නබවි දේවස්ථානවල පැවති ජුම්ආ දේශනාවන්හිදී ප්රකාශ වී තිබේ.
මස්ජිදුල් හරාම් දේවස්ථානයේ ඉමාම් ආචාර්ය බන්දර් බලීලා මහතා සිය දේශනයේදී පෙන්වා දුන්නේ, ශුද්ධ වූ සිද්ධස්ථාන, පල්ලි, අධ්යාපන ආයතන සහ පොදු දේපළ ඉලක්ක කරගනිමින් භීතිය වැපිරීම ආගමික සහ මානුෂීය වටිනාකම්වලට පටහැනි බරපතළ සාපරාධී ක්රියාවක් බවයි. එමෙන්ම අන්යයන් පිළිබඳව සැක කිරීම, කේලාම් කීම සහ අසාධාරණ ලෙස හැසිරීමෙන් වැළකී, සහෝදරත්වය හා යහපත් ආකල්ප තුළින් සමාජ බැඳීම් ශක්තිමත් කරගත යුතු බවද ඔහු අවධාරණය කළේය.
මේ අතර, මදීනා මස්ජිදුන් නබවි දේවස්ථානයේ ඉමාම් ආචාර්ය අබ්දුල් මුහ්සින් අල්-කාසිම් මහතා ප්රකාශ කළේ, මක්කම සහ මදීනා නගරයන්ට සර්වබලධාරී දෙවියන් විසින් ලබාදී ඇති සුවිශේෂී උරුමය හා ආරක්ෂාව විනාශ කිරීමට ගන්නා ඕනෑම උත්සාහයක් මහා පාපයක් බවයි. මිනිසුන්ගේ ධනය හෝ දිළිඳුකම යනු එක්තරා පරීක්ෂාවක් පමණක් බවත්, දෙවියන් ඉදිරියේ පුද්ගලයෙකුගේ උසස්භාවය තීරණය වන්නේ භක්තිය, විශ්වාසය සහ යහපත් ක්රියාවන් මත පමණක් බවත් ඒ මහතා වැඩිදුරටත් සිහිපත් කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත් / ආගමික සහ ඉස්ලාමීය කටයුතු පිළිබඳ පුවත්
Friday Sermons at Two Holy Mosques Emphasize Sacred Inviolability and Security of Makkah and Madinah
The Friday sermons delivered at the Grand Mosque in Makkah and the Prophet’s Mosque in Madinah underscored the immense religious status, sanctity, and necessity of preserving the safety and peace of the Two Holy Cities as non-negotiable principles.
Delivering the sermon at the Grand Mosque in Makkah, Imam Sheikh Dr. Bandar Baleelah highlighted that targeting holy sanctuaries, peaceful towns, mosques, educational institutions, and public property constitutes a grave criminal path contradicting the core values of faith and humanity. He further urged believers to uphold piety, think well of fellow individuals, and shun suspicion, espionage, and backbiting to safeguard internal purity and communal harmony.
Concurrently, at the Prophet's Mosque in Madinah, Imam Sheikh Dr. Abdulmohsen Al-Qasim reaffirmed the divine sanctity bestowed upon Makkah and Madinah, warning that terrorizing peaceful inhabitants and shedding innocent blood are among the gravest sins, citing prophetic traditions on honoring the sanctity of Madinah. He also addressed divine wisdom regarding differences in human wealth and circumstances, emphasizing that wealth and poverty serve as spiritual tests and that true virtue before God rests solely upon faith, righteousness, and good deeds.
KR TV Network - International News / Religion and Islamic Affairs

Comments