முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாரச்சிக்கு பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு: ஆஜராகத் தவறியதாகத் தகவல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாரச்சிக்கு பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு: ஆஜராகத் தவறியதாகத் தகவல்
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
சட்டவிரோதமான முறையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்று பொதுமக்களிடம் இருந்து வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாரச்சி பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்றைய தினம் அவர் குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவில்லை எனப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு அடுத்தகட்டமாக புதிய திகதியொன்றில் முன்னிலையாகுமாறு மீள அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சட்டச் செய்தி
නීතිවිරෝධී මූල්ය ආයතනයක් පවත්වාගෙන යාමේ චෝදනාවකට හිටපු පාර්ලිමේන්තු මන්ත්රී ජානක තිස්සකුට්ටිආරච්චි මූල්ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය හමුවට කැඳවයි: පෙනී සිටීම මඟහැර ඇති බවට වාර්තා
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
නීතිවිරෝධී අන්දමින් මූල්ය ආයතනයක් පවත්වාගෙන යමින් මහජනතාවගෙන් තැන්පතු මුදල් ලබාගෙන ඇති බවට එල්ල වී ඇති චෝදනාවලට අදාළ විමර්ශන සඳහා ප්රකාශයක් ලබාදීමට හිටපු පාර්ලිමේන්තු මන්ත්රී ජානක තිස්සකුට්ටිආරච්චි මහතා පොලිස් මූල්ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය (FCID) හමුවට කැඳවා තිබේ.
නීතිවිරෝධී වත්කම් විමර්ශන අංශය මඟින් ක්රියාත්මක කරනු ලබන මෙම පරීක්ෂණවලට අදාළව ඒ මහතාට ඊයේ දිනයේදී පෙනී සිටින ලෙස දැනුම් දී තිබුණද, ඔහු එම කොට්ඨාසය හමුවේ පෙනී සිට නොමැති බව පොලිස් ආරංචි මාර්ග පවසයි. මෙම චෝදනා සම්බන්ධයෙන් ඔහුගෙන් ඉදිරියේදී ප්රකාශ සටහන් කරගැනීම සඳහා නව දිනයක් ලබාදීමට පියවර ගනු ඇති බව වාර්තා වේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අපරාධ විමර්ශන පුවත්
Former MP Janaka Tissakuttiarachchi Summoned by Police Financial Crimes Investigation Division Over Unauthorised Financial Operation
Reporter: Farhana Badurdeen
Former Member of Parliament Janaka Tissakuttiarachchi was summoned by the Police Financial Crimes Investigation Division (FCID) in connection with an inquiry into allegations that he operated an unauthorized financial entity and solicited deposits from members of the general public.
The summons was issued under investigations coordinated by the specialized assets and financial investigation unit to record a detailed statement regarding the alleged financial irregularities. However, reports indicate that the former parliamentarian failed to appear before the investigation division on the designated date yesterday. Investigative authorities are expected to schedule an alternative appearance date to proceed with the inquiry.
KR TV Network - Local News / Legal News

Comments