Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட சந்திப்பு

 





கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட சந்திப்பு


கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று (10) முற்பகல் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த காத்திரமான வேலைத்திட்டங்களுக்கு கத்தோலிக்க மதத் தலைவர்கள் இதன்போது தமது ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


அத்துடன், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உட்பட அவர்கள் எதிர்நோக்கும் நாளாந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் மற்றும் மத விவகாரச் செய்தி


කොළඹ අගරදගුරු මැල්කම් කාදිනල් රංජිත් හිමිපාණන් ප්‍රමුඛ කතෝලික ආගමික නායකයින් සහ ජනාධිපති අනුර කුමාර දිසානායක අතර හමුවක්


කොළඹ අගරදගුරු අතිඋතුම් මැල්කම් කාදිනල් රංජිත් හිමිපාණන් ප්‍රමුඛ කතෝලික ආගමික නායකයින් සහ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අතර විශේෂ හමුවක් ඊයේ (10) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී පැවැත්විණි.


පසුගිය දෙවසරක කාලය තුළ මෙරට කිසිදු ජාතිවාදී ගැටුමකට ඉඩ නොතබා සියලු ජනතාව අතර සහජීවනය, සාමය සහ සංහිඳියාව තහවුරු කිරීම වෙනුවෙන් ජනාධිපතිවරයා ප්‍රමුඛ රජය ක්‍රියාත්මක කළ වැඩපිළිවෙළ ඇගයීමට ලක්කළ කතෝලික නායකයින් ඒ වෙනුවෙන් සිය ආශිර්වාදය පළ කළහ.


තවද පාස්කු ඉරිදා ත්‍රස්ත ප්‍රහාරය පිළිබඳ විමර්ශනවල වත්මන් ප්‍රගතිය සම්බන්ධයෙන් මෙහිදී විශේෂ අවධානයක් යොමු කෙරුණු අතර, කතෝලික ප්‍රජාව වෙසෙන ප්‍රදේශවල යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම ඇතුළුව ඔවුන් මුහුණ දෙන ගැටලු නිරාකරණය කිරීම සඳහා ගත යුතු ක්‍රියාමාර්ග පිළිබඳවද දෙපාර්ශ්වය අතර දීර්ඝ ලෙස සාකච්ඡා කෙරිණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන හා ආගමික පුවත්


President Anura Kumara Dissanayake Convenes with Catholic Delegation Led by Cardinal Malcolm Ranjith


A high-level delegation of Catholic religious leaders, headed by the Archbishop of Colombo, His Eminence Cardinal Malcolm Ranjith, held an official discussion with President Anura Kumara Dissanayake yesterday (10) morning at the Presidential Secretariat.


During the meeting, the Catholic leadership extended their blessings and appreciation to the administration led by the President for its proactive measures over the past two years in averting communal tensions and fostering sustainable peace, co-existence, and national reconciliation among diverse communities.


The deliberations focused extensively on the ongoing investigative progress concerning the Easter Sunday terror attacks. In addition, comprehensive discussions were held on resolving socio-economic challenges faced by the Catholic community, with particular emphasis on advancing civic infrastructure developments in regions inhabited by the community.


KR TV Network - Local News / Political and Religious Affairs

Comments