Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மேல் மாகாண அரபு கலாசாலைகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை தெஹிவளையில் நடைபெற்றது









 முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மேல் மாகாண அரபு கலாசாலைகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை தெஹிவளையில் நடைபெற்றது


முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மேல் மாகாணத்திலுள்ள அரபு கலாசாலைகளின் நிருவாகிகளுக்கான விசேட வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை இன்று (10) வியாழக்கிழமை முற்பகல் 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை தெஹிவளை ஜூம்மா பள்ளிவாசல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


அரபு கலாசாலைகளின் நிருவாகக் கட்டமைப்பு, நிதி ஆளுகை மற்றும் மாணவர்கள் விவகாரம் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர். ஏ. சர்ஜூன், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி என். கபூர்தீன், அல் இமாம் பின் பாஸ் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம். எச். எம். அஸ்ஹர் மற்றும் ஹனான் ஹுசைன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினர்.


திணைக்களப் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத விவகார பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கௌரவ அதிதியாகப் பங்கேற்றார். மேல் மாகாணத்தைத் தொடர்ந்து, ஏனைய மாகாணங்களிலுள்ள பதிவு செய்யப்பட்ட அரபு கலாசாலைகளுக்காக குருநாகல், கண்டி, புத்தளம், காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஐந்து முக்கிய நிலையங்களிலும் இப்பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ச்சியாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / கல்வி மற்றும் ஆன்மீகச் செய்தி


මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ ලියාපදිංචි බස්නාහිර පළාතේ අරාබි විද්‍යාල සඳහා වූ විශේෂ පුහුණු වැඩමුළුවක් දෙහිවලදී සාර්ථකව පැවැත්විණි


මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ ලියාපදිංචි බස්නාහිර පළාත තුළ පිහිටි අරාබි විද්‍යාලවල පරිපාලකයින් වෙනුවෙන් සංවිධානය කරන ලද විශේෂ පුහුණු වැඩමුළුවක් අද (10) පෙරවරු 8.30 සිට පස්වරු 4.00 දක්වා දෙහිවල ජුම්මා මස්ජිඩ් ශ්‍රවණාගාර පරිශ්‍රයේදී ඉතා සාර්ථකව පවත්වන ලදී.


අරාබි විද්‍යාලවල පරිපාලන ව්‍යුහය, මූල්‍ය පාලනය සහ ශිෂ්‍ය කටයුතු යන ප්‍රධාන තේමාවන් තුනක් ඔස්සේ මෙම වැඩමුළුව මෙහෙයවන ලදී. අග්නිදිග විශ්වවිද්‍යාලයේ මහාචාර්ය ආර්. ඒ. සර්ජුන්, කොළඹ විශ්වවිද්‍යාලයේ මහාචාර්ය ආචාර්ය එන්. ගෆූර්දීන්, අල් ඉමාම් බින් බාස් අරාබි විද්‍යාලයේ අධ්‍යක්ෂ ආචාර්ය එම්. එච්. එම්. අස්හර් සහ හනාන් හුසේන් යන මහත්වරුන් මෙහිදී සම්පත්දායකයින් ලෙස දායකත්වය සැපයූහ.


දෙපාර්තමේන්තු අධ්‍යක්ෂ එම්. එස්. එම්. නවාස් මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම අවස්ථාව සඳහා ආගමික කටයුතු නියෝජ්‍ය අමාත්‍ය මුනීර් මුළෆර් මහතාද සහභාගී විය. බස්නාහිර පළාතට අමතරව ඉදිරියේදී කුරුණෑගල, මහනුවර, පුත්තලම, ගාල්ල සහ මඩකලපුව යන මධ්‍යස්ථාන පහ කේන්ද්‍ර කරගනිමින් සෙසු පළාත්වල ලියාපදිංචි අරාබි විද්‍යාල සඳහාද මෙම පුහුණු වැඩසටහන ක්‍රියාත්මක කිරීමට සැලසුම් කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධ්‍යාපනික හා ආගමික පුවත්


Special Capacity Building Workshop Successfully Held in Dehiwala for Department Registered Arabic Colleges in Western Province


A specialized institutional capacity building workshop organized for the administration of Arabic Colleges registered under the Department of Muslim Religious and Cultural Affairs across the Western Province was successfully conducted today, 10 September 2026, from 8:30 AM to 4:00 PM at the Dehiwala Jummah Mosque auditorium.


The academic deliberations focused on three core administrative domains: institutional governance structure of Arabic colleges, financial management and accountability, and student affairs. Specialized modules were delivered by distinguished academic resource persons including Professor R. A. Sarjoon of the South Eastern University of Sri Lanka, Professor Dr. N. Gafoordeen of the University of Colombo, Dr. M. H. M. Azhar, Director of Al-Imam Bin Baz Arabic College, and Hanan Hussain.


Presided over by Department Director M. S. M. Nawas, the official proceedings were attended by Deputy Minister of Religious Affairs Muneer Mulappar. Following the conclusion of the Western Province session, the department plans to extend identical training initiatives across five regional centers—Kurunegala, Kandy, Puttalam, Galle, and Batticaloa—to cover all registered Arabic colleges across the island.


KR TV Network - Local News / Educational and Religious Affairs

Comments