பசறை பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு – பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் மற்றும் பிரதேச செயலாளர் தலைமையில் கோலாகலமாக முன்னெடுப்பு!
பசறை பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு – பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் மற்றும் பிரதேச செயலாளர் தலைமையில் கோலாகலமாக முன்னெடுப்பு!
பசறை பிரதேச செயலகப் பிரிவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நல்வாழ்வை இழந்த பொதுமக்களுக்கு நட்டஈடு மற்றும் நிவாரணங்களை வழங்கும் விசேட நிகழ்வு நேற்று முன்தினம் (18.09.2026) பசறை பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பசறை பிரதேச செயலாளர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் ஆகியோரின் உத்தியோகபூர்வ பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது சொத்துக்களையும் மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான முதற்கட்ட நிதியுதவியாக 20 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டதுடன், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான இரண்டாவது தவணை நிதியாக 2 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 இலட்சம் ரூபாய் வீதம் பல பயனாளிகளுக்கும், மற்றும் இதர நட்டஈடுகளாக 50,000 ரூபாய் தொகையும் கையளிக்கப்பட்டன.
இதன் ஒரு கட்டமாக மேலதிக வாழ்வாதார மேம்பாட்டுத் தேவைகளுக்காக 75,000 ரூபாய் மற்றும் 1 இலட்சத்து 50,000 ரூபாய் பெறுமதியான உதவிகளும் உரிய பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / அனர்த்த நிவாரணச் செய்தி
පස්සර ප්රදේශයේ ආපනාවට ලක් වූ ජනතාවට වන්දි සහ ආධාර ලබා දීමේ උත්සවය – පාර්ලිමේන්තු මන්ත්රී කිඩ්නාන් සෙල්වරාජ් සහ ප්රදේශයේ ලේකම්වරයාගේ ප්රධානත්වයෙන් පැවැත්වේ!
පස්සර ප්රදේශයේ ස්වභාවික ආපදා හේතුවෙන් පීඩාවට පත් ජනතාව වෙත වන්දි සහ ආධාර මුදල් ලබා දීමේ විශේෂ වැඩසටහනක් 2026.09.18 දින පස්සර ප්රදේශයේ ලේකම් කාර්යාලයේදී පවත්වන ලදී.
පස්සර ප්රදේශයේ ලේකම්වරයා සහ ගරු පාර්ලිමේන්තු මන්ත්රී කිඩ්නාන් සෙල්වරාජ් යන මහත්වරුන්ගේ සහභාගීත්වයෙන් පැවති මෙම උත්සවයේදී, ආපදාවට ලක් වූ ජනතාවගේ ජීවනෝපාය සහ දේපළ යළි නගාසිටුවීමේ අරමුණින් මූල්ය ආධාර බෙදා දෙන ලදී.
වාසස්ථාන සඳහා ආධාර: සම්පූර්ණයෙන්ම හානි වූ නිවාස නැවත ඉදිකිරීම සඳහා පළමු වාරිකය ලෙස රුපියල් ලක්ෂ 20ක මුදලක් ද, අර්ධ වශයෙන් හානි වූ නිවාස සඳහා දෙවන වාරිකය ලෙස රුපියල් ලක්ෂ 2ක මුදලක් ද ලබා දෙන ලදී.
පීඩාවට පත් වූවන්ගේ ව්යාපාරික කටයුතු සහ ජීවනෝපාය සංවර්ධනය සඳහා රුපියල් ලක්ෂ 20 බැඟින් වූ මූල්ය ආධාර කිහිපයක් ද, වෙනත් වන්දි ලෙස රුපියල් 50,000ක මුදලක් ද ප්රදානය කරන ලදී.
මීට අමතරව, අතිරේක ජීවනෝපාය අවශ්යතා සපුරා ගැනීම සඳහා රුපියල් 75,000ක් සහ රුපියල් 150,000ක ආධාර මුදල් ද අදාළලාභීන්ට ලබා දෙන ලදී.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / ආපදා සහන පුවත්
Compensation and Relief Distribution Event Held for Disaster-Affected Families in Passara: Graced by MP Kidnan Selvaraj and Divisional Secretary!
A special event to distribute compensation and relief grants to communities affected by natural disasters in the Passara Divisional Secretariat division was held on September 18, 2026.
The distribution ceremony took place with the official participation of the Passara Divisional Secretary and Hon. Member of Parliament Kidnan Selvaraj, aiming to rebuild the livelihoods and properties of the affected residents.
The first installment of 2 million rupees was granted for fully damaged houses, while a second installment of 200,000 rupees was disbursed for partially damaged homes.
Substantial recovery grants of 2 million rupees each, alongside additional relief amounts of 50,000 rupees, were provided to support impacted businesses and livelihoods.
Financial assistance packages worth 75,000 rupees and 150,000 rupees were also distributed to empower beneficiaries toward sustainable economic recovery.
KRTV Network | National / Disaster Relief News







Comments