உயர்நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறினார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல்
உயர்நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறினார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல்
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, உயர்நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஒருவரின் மரணத்திற்குக் காரணமான குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டைப் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது. இந்த உத்தரவை ஆட்சேபித்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அண்மையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.
எனினும், குறித்த நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த முற்பட்ட போதே, அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியே இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டையும் முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சட்டச் செய்தி
විදෙස් ගමන් තහනම පැනවීමට පෙර හිටපු රාජ්ය අමාත්ය ප්රේමලාල් ජයසේකර රටින් පිටවෙයි: අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව අනාවරණය කරයි
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
මිනීමැරුම් චෝදනාවකට වරදකරු වී මරණ දණ්ඩනය නියමවීමෙන් අනතුරුව අභියාචනාධිකරණය මඟින් නිදොස් කොට නිදහස් කරන ලද හිටපු රාජ්ය අමාත්ය ප්රේමලාල් ජයසේකර මහතා, ශ්රේෂ්ඨාධිකරණය විසින් විදෙස් ගමන් තහනමක් පැනවීමට පෙර දිවයිනෙන් බැහැරව ගොස් ඇති බව අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ (CID) ජ්යෙෂ්ඨ නිලධාරියෙකු ප්රකාශ කර තිබේ.
2015 ජනාධිපතිවරණ ප්රචාරක රැස්වීමකට වෙඩි තබා පුද්ගලයෙකු ඝාතනය කිරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් ප්රේමලාල් ජයසේකර ඇතුළු තිදෙනෙකුට රත්නපුර මහාධිකරණය මරණ දණ්ඩනය නියම කර තිබුණි. ඊට එරෙහි අභියාචනයක් සලකා බැලූ අභියාචනාධිකරණය ඔවුන්ව නිදහස් කිරීමට නියෝග කළ අතර, එම තීන්දුව බලරහිත කරන ලෙස ඉල්ලා වින්දිත පාර්ශවය ශ්රේෂ්ඨාධිකරණය හමුවේ අභියාචනයක් ගොනු කරන ලදී.
අගවිනිසුරු ප්රීති පද්මන් සූරසේන, අසල වෙන්ගප්පුලි සහ ගිහාන් කුලතුංග යන ත්රිපුද්ගල ශ්රේෂ්ඨාධිකරණ විනිසුරු මඩුල්ල හමුවේ මෙම පෙත්සම කැඳවූ අවස්ථාවේදී වගඋත්තරකරුවන්ට විදේශගතවීම තහනම් කරමින් නියෝග නිකුත් කෙරුණු අතර, ලබන ඔක්තෝබර් 21 වන දින අධිකරණය හමුවේ පෙනී සිටින ලෙස නොතීසි නිකුත් කරන ලදී.
එම අධිකරණ නියෝගය ක්රියාත්මක කිරීමට පියවර ගැනීමේදී, ප්රේමලාල් ජයසේකර මහතා පසුගිය අගෝස්තු මස 31 වන දිනම විදෙස්ගතව ඇති බව අනාවරණය වී ඇත. කෙසේ වෙතත්, ඔහු නැවත මෙරටට පැමිණීම සඳහා වන ගුවන් ප්රවේශපත්රයක්ද වෙන්කරවා ගෙන ඇති බව වාර්තා වේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ පුවත්
Former State Minister Premalal Jayasekara Traveled Abroad Prior to Supreme Court Travel Ban: CID Confirms
Reporter: Farhana Badurdeen
Former State Minister Premalal Jayasekara, who was previously sentenced to death over a shooting homicide and subsequently acquitted on appeal, departed Sri Lanka prior to the imposition of an overseas travel ban by the Supreme Court, senior Criminal Investigation Department (CID) officials confirmed.
Jayasekara and two others were initially convicted and handed capital punishment by the Ratnapura High Court regarding a fatal shooting that transpired during the 2015 presidential election campaign, a verdict that was subsequently set aside by the Court of Appeal upon reviewing their petition. Aggrieved parties subsequently appealed against the acquittal before the Supreme Court.
A three-judge bench comprising Chief Justice Preethi Padman Surasena, Justice Asoka Weligampitiya, and Justice Gihan Kulatunga recently took up the matter, issuing an overseas travel ban directed to the Controller General of Immigration and Emigration while summoning the respondents to appear before the bench on 21 October.
Upon enforcement proceedings of the travel restriction, investigators identified that Jayasekara had already boarded a flight out of the island on 31 August. Investigative sources, however, noted that the former state minister has secured a return flight reservation back to Sri Lanka.
KR TV Network - Local News / Legal News

Comments