Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

போலி பொலிஸ் ஜீப் வண்டி மீட்பு: போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸ் உளவாளியைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலின் சதி முறியடிப்பு

 


போலி பொலிஸ் ஜீப் வண்டி மீட்பு: போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸ் உளவாளியைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலின் சதி முறியடிப்பு


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025 நவம்பர் 29 ஆம் திகதி கிரின்த கடற்பரப்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 500 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு இந்த உளவாளியே முக்கிய இரகசியத் தகவல்களை வழங்கியிருந்தார்.


இதனால் ஆத்திரமடைந்த வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளான ரூபன் மற்றும் அங்கொட பிரியங்கர ஆகியோர், குறித்த உளவாளியைப் பழிவாங்கும் நோக்கில் கடத்திக் கொலை செய்து, அவரது தலையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன் வீசிவிட்டுச் செல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தனர். அத்திட்டம் ஆரம்பத்தில் தோல்வியடைந்த நிலையில், 9 மாதங்களின் பின்னர் கடந்த செப்டம்பர் 05 ஆம் திகதி அதிகாலை கிரிந்த துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த உளவாளியை இந்தப் போலி பொலிஸ் ஜீப் வண்டியால் மோதி கொலை செய்ய மீண்டும் பாதாள உலகக் குழுவினர் முயன்றுள்ளனர்.


இத்தாக்குதலிலிருந்து தப்ப முயன்றபோது படுகாயமடைந்த உளவாளி, தற்போது தீவிர பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தின் பின்னர் தலைமறைவான ஜீப் வண்டி தொடர்பாகத் துப்பறிந்த வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், கடுவெல ஹேவாகம பகுதியிலுள்ள வாகனப் பட்டறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது போலி பொலிஸ் ஜீப் வண்டியைக் கண்டுபிடித்துக் கைப்பற்றியுள்ளனர். மீட்கப்பட்ட குறித்த வாகனம் மேலதிக விசாரணைகளுக்காகக் கிரிந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / குற்றவியல் செய்தி


පොලිස් ඔත්තුකරුවෙකු ඝාතනයට තැත් කළ පාතාලයේ ව්‍යාජ පොලිස් ජීප් රථය වලාන දුෂණ මර්දන ඒකකය මඟින් අත්අඩංගුවට


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


පොලිස් ඔත්තුකරුවෙකු ඝාතනය කිරීම සඳහා පාතාල කල්ලි සාමාජිකයින් විසින් භාවිත කරන ලද ව්‍යාජ පොලිස් ජීප් රථයක් පානදුර වලාන මධ්‍යම දුෂණ මර්දන ප්‍රහාරක බලකාය විසින් ඊයේ (08) දින අත්අඩංගුවට ගෙන තිබේ. 2025 නොවැම්බර් 29 වන දින සහකාර පොලිස් අධිකාරී රොහාන් ඕලුගල මහතාගේ මෙහෙයවීමෙන් කිරින්ද මුහුදු තීරයේදී රුපියල් කෝටි 500කට අධික වටිනාකමකින් යුත් අයිස් මත්ද්‍රව්‍ය කිලෝග්‍රෑම් 325ක්, සැකකරුවන් 8 දෙනෙකු සහ වාහන 6ක් අත්අඩංගුවට ගැනීමට මෙම ඔත්තුකරු විසින් තොරතුරු සපයා තිබුණි.


විදෙස්ගතව සිටින 'රූබන්' සහ 'අංගොඩ ප්‍රියංකර' නමැති පාතාල නායකයින් මෙහෙයවූ මෙම ජාවාරමට සිදු වූ පාඩුවට පළිගැනීමක් ලෙස, එම ඔත්තුකරු පැහැරගෙන ගොස් ඝාතනය කර ඔහුගේ හිස සහකාර පොලිස් අධිකාරීවරයාගේ නිවස ඉදිරිපිට දමා යාමට සැලසුම් කර තිබූ බව අනාවරණය වේ. එම ප්‍රයත්නය අසාර්ථක වීමෙන් පසු, පසුගිය සැප්තැම්බර් 05 වන දින අලුයම කිරින්ද වරාය දෙසට ගමන් කරමින් සිටි ඔත්තුකරු හප්පා ඝාතනය කිරීමට මෙම ව්‍යාජ පොලිස් ජීප් රථය යොදාගෙන තිබේ.


එහිදී තුවාල ලැබූ ඔත්තුකරු දැඩි පොලිස් ආරක්ෂාව මධ්‍යයේ රෝහල්ගතව ප්‍රතිකාර ලබන අතර, පලාගිය ජීප් රථය පිළිබඳව විමර්ශන කළ වලාන ඒකකයේ නිලධාරීන් කඩුවෙල - හේවගම ප්‍රදේශයේ ගරාජයක සඟවා තිබියදී මෙම රථය සොයාගෙන ඇත. අත්අඩංගුවට ගත් ව්‍යාජ පොලිස් ජීප් රථය වැඩිදුර නීතිමය කටයුතු සඳහා කිරින්ද පොලිස් ස්ථානය වෙත භාරදී ඇති අතර සිද්ධිය පිළිබඳ පරීක්ෂණ ක්‍රියාත්මකය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අපරාධ පුවත්


Fake Police Jeep Seized Following Foiled Underworld Assassination Bid on Police Informant in Kirinda


Reporter: Farhana Badurdeen


A counterfeit police jeep deployed by organized underworld elements in an attempt to assassinate a police intelligence informant was seized by the Walana Central Anti-Corruption Unit yesterday (08). The targeted informant had previously provided precise actionable intelligence on 29 November 2025, enabling Assistant Superintendent of Police (ASP) Rohan Olugala to lead an offshore interdiction in Kirinda that resulted in the confiscation of 325 kg of crystal methamphetamine (ICE) valued at over Rs. 5 billion, alongside the arrest of 8 suspects and 6 vehicles.


In retaliation for the disrupted syndicate coordinated by overseas-based criminal operatives known as ‘Ruban’ and ‘Angoda Priyankara,’ the cartel initially orchestrated a failed plot to abduct and decapitate the informant and place his head outside the ASP’s residence. Nine months later, on the morning of 5 September 2026, the syndicate executed a secondary hit attempt, ramming the informant with the counterfeit police jeep as he headed towards the Kirinda fisheries harbour.


The informant sustained injuries while evading the direct vehicular assault and remains hospitalized under armed police protection. Acting on intelligence tracing the runaway vehicle, Walana anti-corruption operatives raided a motor repair workshop in the Hewagama area of Kaduwela, where the customized fake police jeep had been concealed. The recovered vehicle was transferred to the Kirinda Police station to facilitate ongoing forensic and investigative proceedings.


KR TV Network - Local News / Crime News

Comments