வெள்ளை மாளிகையிலிருந்து மூன்று முன்னணி ஊடகங்களுக்குத் தடை: பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ஊடகங்கள் கண்டனம்
வெள்ளை மாளிகையிலிருந்து மூன்று முன்னணி ஊடகங்களுக்குத் தடை: பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ஊடகங்கள் கண்டனம்
அமெரிக்காவின் சிஎன்என் (CNN), எம்எஸ் நவ் (MS NOW) மற்றும் பொலிடிகோ (Politico) ஆகிய மூன்று முன்னணி ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கும், நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதற்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடித் தடை விதித்துள்ளார்.
தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள டிரம்ப், குறித்த மூன்று ஊடகங்களும் தொடர்ச்சியாக போலிச் செய்திகள், புனைகதைகள் மற்றும் பொய்களைப் பரப்பி வருவதால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகைக்கு கடமை நிமித்தம் சென்ற சிஎன்என் செய்தியாளர் பெட்ஸி க்ளீன், எம்எஸ் நவ் செய்தியாளர் அகாய்லா கார்ட்னர் மற்றும் பொலிடிகோ செய்தியாளர் செய்னே ஹாஸ்லெட் ஆகியோரின் செய்தி சேகரிப்பு அடையாள அட்டைகள் முடக்கப்பட்டு, அவர்கள் வளாகத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையானது ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடித் தடை (Ban on the free press) என வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கம் (WHCA) வன்மையாகக் கண்டித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்தின் (First Amendment) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட மூன்று ஊடக நிறுவனங்களும் எச்சரித்துள்ளன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக விவகாரம்
මාධ්ය ආයතන තුනක මාධ්යවේදීන්ට ධවල මන්දිරයට ඇතුළුවීම තහනම්: නිදහස් මාධ්යයට එල්ල වූ ප්රහාරයක් බවට චෝදනා
අමෙරිකාවේ ප්රමුඛ පෙළේ මාධ්ය ආයතන තුනක් වන සීඑන්එන් (CNN), එම්එස් නව් (MS NOW) සහ පොලිටිකෝ (Politico) හි මාධ්යවේදීන්ට ධවල මන්දිරය වෙත ඇතුළුවීම සහ වාර්තාකරණ කටයුතුවල නිරතවීම වහාම ක්රියාත්මක වන පරිදි තහනම් කිරීමට අමෙරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්රම්ප් පියවර ගෙන තිබේ.
සිය ටෲත් සෝෂල් ගිණුම හරහා ප්රකාශයක් නිකුත් කරමින් ට්රම්ප් සඳහන් කර ඇත්තේ, මෙම ආයතන සිය පරිපාලනය පිළිබඳව අසත්ය තොරතුරු, ප්රබන්ධ සහ බොරු අඛණ්ඩව ප්රචාරය කරන බැවින් මෙම පියවර ගත් බවයි. මෙම තීරණයත් සමඟ සෙනසුරාදා දින රාජකාරි සඳහා ධවල මන්දිරයට පැමිණි සීඑන්එන් මාධ්යවේදිනී බෙට්සි ක්ලයින්, එම්එස් නව් මාධ්යවේදිනී අකායිලා ගාඩ්නර් සහ පොලිටිකෝ මාධ්යවේදිනී ෂෙයින් හැස්ලට් යන අයගේ මාධ්ය හැඳුනුම්පත් අක්රිය කර ඔවුන් ඇතුළුවීම වළක්වා ඇත.
ජනාධිපතිවරයාගේ මෙම තීරණය නිදහස් මාධ්ය භාවිතය අහුරාලීමක් (Ban on the free press) බවට ධවල මන්දිර වාර්තාකරුවන්ගේ සංගමය (WHCA) දැඩි ලෙස චෝදනා කරයි. එමෙන්ම අමෙරිකානු ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ පළමු සංශෝධනයෙන් (First Amendment) සුරක්ෂිත කර ඇති මාධ්ය නිදහස වෙනුවෙන් නීතිමය ක්රියාමාර්ග ගැනීමට සූදානම් බව අදාළ මාධ්ය ආයතන ත්රිත්වයම ප්රකාශ කර තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත් / අමෙරිකානු දේශපාලන සහ මාධ්ය පුවත්
White House Bars Journalists from Three Major News Outlets: Move Decried as Ban on Free Press
US President Donald Trump has barred journalists from three major news organizations — CNN, MS NOW, and Politico — from the White House, triggering sharp condemnation from press freedom groups and media organizations.
Announcing the directive via his Truth Social platform, Trump accused the three outlets of persistently disseminating fake news, fiction, and lies regarding his administration, declaring that the exclusion was effective immediately. Following the announcement, White House correspondents Betsy Klein of CNN, Akayla Gardner of MS NOW, and Cheyenne Haslett of Politico were denied entry on Saturday after their official press credentials were confiscated or deactivated by security personnel.
The White House Correspondents' Association (WHCA) strongly condemned the action, characterizing it as an unconstitutional ban on the free press. The barred outlets stated that the move represents an unlawful assault on press freedom, confirming their intention to pursue legal measures to defend their rights under the First Amendment of the US Constitution.
KR TV Network - International News / US Politics and Media Freedom

Comments