Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

"குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்": ராஜபக்சக்களின் பழிவாங்கல் வாதங்களுக்கு ஜெனீவாவில் ஐ.நா. பிரதி உயர்ஸ்தானிகர் அவா தபோ அதிரடிப் பதிலடி!


 "குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்": ராஜபக்சக்களின் பழிவாங்கல் வாதங்களுக்கு ஜெனீவாவில் ஐ.நா. பிரதி உயர்ஸ்தானிகர் அவா தபோ அதிரடிப் பதிலடி!


இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஊழல் ஒழிப்பு விசாரணைகளும் சட்டநடவடிக்கைகளும் அரசியல் பழிவாங்கல்கள் என ராஜபக்ச தரப்பினர் ஜெனீவாவில் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் பிரதி உயர்ஸ்தானிகர் அவா தபோ (Awa Dabo) மிகத் தெளிவான மற்றும் திட்டவட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.


 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம், நல்லாட்சி மற்றும் குற்றவியல் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துப் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது நாட்டின் நீண்டகால ஜனநாயக வளர்ச்சிக்கு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.


நாட்டைப் பொருளாதார ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் சீரழித்த தரப்பினர், தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் சட்ட நடவடிக்கைகளை 'அரசியல் பழிவாங்கல்' எனத் திசைதிருப்ப முயல்வதை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், ஊழல் குற்றவாளிகளுக்கும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் எவ்விதச் சலுகையும் இன்றி முறையான தண்டனைகள் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ.நா. பிரதி உயர்ஸ்தானிகர் தனது உரையில் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 "වරදකරුවන්ට සහ දූෂිතයන්ට නියත වශයෙන්ම දඬුවම් ලැබිය යුතුය": රාජපක්ෂවරුන්ගේ දේශපාලන පළිගැනීම් තර්කවලට ජිනීවාහිදී එක්සත් ජාතීන්ගේ නියෝජ්‍ය මහකොමසාරිස් අවා දාබෝගෙන් දැඩි පිළිතුරක්!


ශ්‍රී ලංකාවේ ක්‍රියාත්මක වන දූෂණ විරෝධී විමර්ශන සහ නීතිමය ක්‍රියාමාර්ග දේශපාලන පළිගැනීම් ලෙස රාජපක්ෂ පාර්ශ්වය විසින් ජිනීවා නුවරදී ගෙන යන ප්‍රචාරයන්ට, එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් නියෝජ්‍ය මහකොමසාරිස් අවා දාබෝ (Awa Dabo) මහත්මිය විසින් ඉතා පැහැදිලි සහ දැඩි පිළිතුරක් ලබා දී තිබේ.


එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලය වෙත ශ්‍රී ලංකාවේ වත්මන් මානව හිමිකම් තත්ත්වය, යහපාලනය සහ අපරාධ පරීක්ෂණවල ප්‍රගතිය පිළිබඳ යාවත්කාලීන වාර්තාවක් ඉදිරිපත් කරමින් ඇය මෙම අදහස් පළ කළාය. අතීතයේ සිදුවූ දැවැන්ත දූෂණ සහ බලය අවභාවිත කිරීම් සම්බන්ධයෙන් අපක්ෂපාතී විමර්ශන පැවැත්වීම රටේ අනාගත ප්‍රජාතන්ත්‍රවාදී ගමනට අත්‍යවශ්‍ය වන බව ඇය පෙන්වා දුන්නාය.


රට ආර්ථික හා ව්‍යුහාත්මක වශයෙන් අගාධයට ඇද දැමූ පාර්ශ්වයන්, තමන්ට එරෙහිව ක්‍රියාත්මක වන නීතිමය ක්‍රියාවලීන් 'දේශපාලන පළිගැනීම්' ලෙස හැඳින්වීමට උත්සාහ කිරීම ජාත්‍යන්තරය විසින් හොඳින් අවබෝධ කරගෙන ඇති බව සඳහන් වේ. නීතියේ ආධිපත්‍යය සැමට එක හා සමානව ක්‍රියාත්මක විය යුතු බවත්, දූෂිතයන්ට සහ වැරදකරුවන්ට කිසිදු වට්ටෝරුවකින් තොරව නිසි දඬුවම් ලබා දීම සහතික කළ යුතු බවත් එක්සත් ජාතීන්ගේ නියෝජ්‍ය මහකොමසාරිස්වරිය අවධාරଣ කර ඇත.


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


Strict Punishment Must Be Delivered to Criminals and the Corrupt": UN Deputy High Commissioner Awa Dabo Delivers a Firm Rebuke in Geneva Against Rajapaksa's Victimization Claims!


UN Deputy High Commissioner for Human Rights Awa Dabo has delivered an explicit and uncompromising response to narratives pushed by Rajapaksa-linked circles in Geneva, who have continually branded ongoing anti-corruption probes and legal actions in Sri Lanka as political victimization.


 Presenting an updated oral assessment regarding Sri Lanka's human rights landscape, governance reforms, and investigative progress at the UN Human Rights Council, Dabo emphasized that impartial and robust inquiries into past corruption and institutional abuses are vital for the nation's democratic recovery.


The UN official highlighted that the international community is fully cognizant of attempts by factions responsible for historical socio-economic decay to frame rightful legal scrutiny as political witch-hunts. Reaffirming that the rule of law must apply universally, she underscored that the administration must ensure tangible accountability, leaving no room for impunity for wrongdoers and corrupt actors alike.


Reporter: Farhana Bathur deen

KRTV Network | Local News

Comments