Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கம்பஹா மா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கிப் பரிதாப மரணம்: உயிரிழந்தவர்களில் மூவர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் – இன்று இறுதிக் கிரியைகள்!





கம்பஹா மா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கிப் பரிதாப மரணம்: உயிரிழந்தவர்களில் மூவர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் – இன்று இறுதிக் கிரியைகள்!


கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய - படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஹமங்கட பகுதியில் அமைந்துள்ள மா ஓயாவில் கடந்த 19ஆம் திகதி நீராடச் சென்ற நான்கு இளைஞர், யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


படல்கம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது, நீரில் மூழ்கித் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டன.


உயிரிழந்தவர்கள் படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கும் கோழி இறைச்சி பொதி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


ஹப்புத்தளை – ஓஹிய பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் தினேஷ்குமார் (25).


பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் திருச் செவ்வி (28).


பதுளை மாவட்டம், தெமோதரை – உடுவரை தோட்டம் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் சுதர்சனி (20) மற்றும் நாகராஜா நிசாந்தனி (19) ஆகிய இரு இளம் பெண்களும் அடங்குவர்.


மீட்கப்பட்ட சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பதுளைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.


உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (21.09.2026) இடம்பெறவுள்ளதாகக் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / விபத்துச் செய்தி


ගම්පහ මා ඔයට බැස්ස තරුණ තරුණියන් 4 දෙනෙක් දියවැඩියාවෙන්/දියවැටීමේ අනතුරකින් (දියෙහි ගිලී) ජීවිතක්ෂයට: මියගිය අය අතරින් තිදෙනෙක් බදුල්ල දිස්ත්‍රික්කයේ අයයි – අද අවමංගල්‍ය කටයුතු!


ගම්පහ දිස්ත්‍රික්කයේ, දිවුලපිටිය - පඩල්ගම පොලිස් වසමට අයත් පერගහමංගඩ ප්‍රදේශයේ මා ඔයෙහි පසුගිය (19) දින දිය නෑමට ගිය තරුණ තරුණියන් හතර දෙනෙක් දියෙහි ගිලී ජීවිතක්ෂයට පත්ව ඇත.


පඩල්ගම පොලිසියට ලැබුණු තොරතුරකට අනුව, පොලිසිය සහ ප්‍රදේශවාසීන් එක්ව සිදු කළ දැඩි සෙවීම් මෙහෙයුමකින් පසු දියෙහි ගිලී අතුරුදන්ව සිටි සිව්දෙනාගේම මළ සිරුරු සොයා ගන්නා ලදී.


මියගිය පිරිස පඩල්ගම පොලිස් වසමේ පිහිටි කුකුළු මස් ඇසුරුම් කරන පෞද්ගලික ආයතනයක සේවය කළ අය බව විමර්ශනවලදී අනාවරණය වී තිබේ.


හපුතලේ - ඔහිය ප්‍රදේශයේ පදිංචි සෙල්වකුමාර් දිනේෂ් කුමාර් (25).


පෙරියකුලම් ප්‍රදේශයේ පදිංචි සුබ්‍රමනියම් තිරු සෙව්වි (28).


බදුල්ල දිස්ත්‍රික්කයේ තෙමෝධර - උඩුවර වතුයායේ ඉහළ කොටසේ පදිංචි චන්ද්‍රසේකරන් සුධර්ෂනී (20) සහ නාගරාජා නිශාන්තනී (19) යන තරුණියන් දෙදෙනා වේ.


මීගමුව රෝහලේදී පශ්චාත් මරණ පරීක්ෂණ කටයුතු සිදු කිරීමෙන් අනතුරුව මළ සිරුරු ඥාතීන් වෙත භාර දී බදුල්ල වෙත රැගෙන ගොස් ඇත.


මියගිය අයගේ අවමංගල්‍ය කටයුතු අද (21.09.2026) දින සිදු කිරීමට නියමිත බව පවුලේ ඥාතිහු පවසති. පඩල්ගම පොලිසිය වැඩිදුර විමර්ශන පවත්වයි.


|කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   / අනතුරුදායක පුවත්


Four Youth Drown While Bathing in Maha Oya, Gampaha: Three Victims from Badulla District – Final Rites Today!


Four young individuals who went bathing in the Maha Oya river in the Peragahamangada area, under the Divulapitiya-Padalagama police division in Gampaha District, tragically drowned on the 19th.


Acting on information received, Padalagama police, alongside local residents, launched an extensive search operation and successfully recovered the bodies of all four missing individuals.


Investigations revealed that the victims were employees at a private poultry packaging establishment located within the Padalagama police division.


Selvakumar Dineshkumar (25), a resident of Ohiya, Haputale.


Subramaniam Thiruchevvi (28), a resident of Periyakulam.


Chandrasekaran Sudarshani (20) and Nagaraja Nishanthani (19), two young women residing in the Upper Division of Uduwera Estate, Demodara, Badulla District.


Following post-mortem examinations at the Negombo Hospital, the remains were handed over to relatives and transported to Badulla.


Relatives stated that the final funeral rites for the victims are scheduled to take place today (21.09.2026). Padalagama Police are conducting further investigations into the incident.


KRTV Network | National / Accident & Disaster News

Comments