தலவாக்கலை வால்ட்ரிம் தோட்டத்தில் குளவிக்கொட்டு: முதியவர் பலி, ஏழு தொழிலாளர்கள் காயம்
தலவாக்கலை வால்ட்ரிம் தோட்டத்தில் குளவிக்கொட்டு: முதியவர் பலி, ஏழு தொழிலாளர்கள் காயம்
தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வால்ட்ரிம் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது இன்று (21) இடம்பெற்ற தீவிர குளவித் தாக்குதலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக தேயிலைத் தோட்டத்தில் உள்ள மரமொன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்து தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது. இத்தாக்குதலுக்கு உள்ளான எட்டுப் பேரும் சம்பவ நேரத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களாவர். இச்சம்பவத்தில் வால்ட்ரிம் தோட்டத்தின் லென் தாமஸ் பிரிவைச் சேர்ந்த 77 வயதான முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய ஏழு தொழிலாளர்களும் உடனடியாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சமூகம் மற்றும் மலையக விவகாரம்
තලවාකැලේ වෝල්ට්රිම් වත්තේ දෙබර ප්රහාරයකින් වැඩිහිටියෙකු මරුට: තවත් සේවකයින් හත් දෙනෙකුට තුවාල
තලවාකැලේ - ලිඳුල පොලිස් වසමට අයත් වෝල්ට්රිම් වතුයායේ තේ දළු නෙළමින් සිටි වතු කම්කරුවන් පිරිසකට අද (21) එල්ල වූ දරුණු දෙබර ප්රහාරයකින් එක් අයෙකු ජීවිතක්ෂයට පත්ව තවත් සේවකයින් හත් දෙනෙකු තුවාල ලබා තිබේ.
ප්රදේශයේ පවතින අයහපත් කාලගුණික තත්ත්වය හේතුවෙන් තේ වත්තේ ගසක තිබූ දෙබර කූඩුවක් ඇවිස්සී යාමෙන් මෙම අනපේක්ෂිත ප්රහාරය එල්ල වී ඇති බව වාර්තා වේ. ප්රහාරයට ලක්වූ කම්කරුවන් අට දෙනාම එම අවස්ථාවේ වතුයායේ සේවයේ නිරතව සිට ඇත. සිද්ධියෙන් මියගොස් ඇත්තේ වෝල්ට්රිම් වතුයායේ ලෙන් තෝමස් කොටසේ පදිංචිව සිටි 77 හැවිරිදි වැඩිහිටි පුද්ගලයෙකි. තුවාල ලැබූ සෙසු සේවකයින් හත් දෙනා වහාම ලිඳුල ප්රාදේශීය රෝහලට ඇතුළත් කර ප්රතිකාර ලබාදීමෙන් අනතුරුව පිටව ගොස් ඇති අතර, මියගිය පුද්ගලයාගේ සිරුර පශ්චාත් මරණ පරීක්ෂණය සඳහා නුවරඑළිය දිස්ත්රික් මහ රෝහල වෙත යවා ඇති බව ලිඳුල පොලිසිය සඳහන් කරයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / සමාජීය සහ වතුකර පුවත්
Tragic Wasp Attack in Talawakelle Waltrim Estate Claims One Life, Injures Seven Workers
A severe wasp attack targeting estate laborers engaged in plucking tea leaves at the Waltrim Estate within the Lindula police division in Talawakelle today (21) left one elderly laborer dead and seven others injured.
According to local reports, the incident was triggered when an active wasp nest situated on a tree within the plantation was disrupted due to adverse prevailing weather conditions. All eight individuals affected were actively deployed on field duties at the time. The victim who succumbed to multiple stings has been identified as a 77-year-old resident of the Len Thomas division of Waltrim Estate. The remaining seven injured laborers were promptly admitted to the Lindula Divisional Hospital, where they received medical treatment before being discharged. Lindula police stated that the deceased's body has been transferred to the Nuwara Eliya District General Hospital for post-mortem inquests.
KR TV Network - Local News / Plantation and Community Affairs

Comments