திருகோணமலையில் மதுபானசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து பணம் கொள்ளை: கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பொலிஸ் சார்ஜென்ட் எனத் திடுக்கிடும் தகவல் வெளியீடு!
திருகோணமலையில் மதுபானசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து பணம் கொள்ளை: கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பொலிஸ் சார்ஜென்ட் எனத் திடுக்கிடும் தகவல் வெளியீடு!
திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட திருகோணமலைப் பொலிஸார், சில மணித்தியாலங்களுக்குள் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தற்காலிக தங்குமிடமொன்றில் வைத்து சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
விசாரணைகளில் கைதான இருவரும் ஹக்மனப் பகுதியைச் சேர்ந்த 54 மற்றும் 61 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்ததும் கிளிபுஞ்சிமலை வெடிமருந்து களஞ்சியசாலையில் கடமையாற்றுவதுமான பொலிஸ் சார்ஜென்ட் ஆவர்.
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 115,000 ரொக்கப் பணம், அவர்கள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள், T-56 வகை துப்பாக்கி மற்றும் அதற்கரிய 29 தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ஆகியவை பொலிஸாரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / குற்றவியல் செய்தி
ත්රිකුණාමලයේ මත්පැන් සාළුවකට තුවක්කු පෙන්වා කෝටිපති කොල්ලයක්: අත්අඩංගුවට පත් වූ දෙදෙනා අතර පොලිස් සාජන්ට්වරයෙක්!
ත්රිකුණාමලය - අනුරාධපුර හන්දියේ පිහිටි මත්පැන්සලකට ගිනි අවියක් රැගෙන ඇතුළු වී මුදල් මංකොල්ලකෑ පුද්ගලයන් දෙදෙනෙකු අත්අඩංගුවට ගෙන ඇත.
පසුගිය (18) වන දින සිදුවූ මෙම කොල්ලයට සම්බන්ධ සැකකරුවන් පැය කිහිපයක් තුළ හඳුනාගත් ත්රිකුණාමල පොලිසිය, උප්පුවේලි පොලිස් වසමට අයත් තාවකාලික නවාතැන්පළකදී ඔවුන් අත්අඩංගුවට ගෙන තිබේ.
අත්අඩංගුවට පත් වූවන් හක්මන ප්රදේශයේ පදිංචි 54 සහ 61 යන වයස්වල පසුවන අය වන අතර, ඉන් එක් අයෙකු උප්පුවේලි පොලිස් ස්ථානයට අනුයුක්තව කිලිපුංචිමලේ වෙඩි බෙහෙත් ගබඩාවේ සේවය කරන පොලිස් සාජන්ට්වරයෙකු වීම විශේෂත්වයකි.
සැකකරුවන් සතුව තිබී රු. 115,000ක මුදලක්, ඔවුන් අපරාධය සඳහා භාවිත කළ මෝටර් රථයක්/මෝටර් රියක් (මොටර්සයිකලය), T-56 ගිනි අවියක් සහ 29 දෙනෙකුට (දෝට්ටා) හිමි පතරොම් ගැබක් පොලිසිය විසින් සොයාගෙන ඇත.
ත්රිකුණාමල පොලිසිය මේ පිළිබඳ වැඩිදුර විමර්ශන සිදු කරයි.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / අපරාධ පුවත්
Armed Robbery at Trincomalee Wine Store: Two Suspects Arrested, Revealing One is a Police Sergeant!
Two individuals who barged into a wine store near the Trincomalee-Anuradhapura junction with a firearm and robbed cash have been promptly apprehended by the police.
Following the robbery on the 18th, Trincomalee Police acted swiftly to track down and arrest the suspects within hours at a temporary lodging within the Uppuveli police division.
Investigations revealed that the suspects—aged 54 and 61—are residents of Hakmana, with one of them identified as a police sergeant attached to the Uppuveli Police Station and deployed at the Kilipunchimalai ammunition depot.
Authorities successfully recovered Rs. 115,000 in cash, the motorcycle used in the crime, a T-56 assault rifle, and a magazine containing 29 rounds of ammunition from the suspects' possession.
Trincomalee Police are conducting further legal investigations into the incident.
KRTV Network | National / Crime News

Comments