அனோஜன் விவகாரம்: வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கை
அனோஜன் விவகாரம்: வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கை
சவூதி அரேபியாவில் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவின் வழக்கினை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்தும் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இராஜதந்திர வழிகள் ஊடாக சம்பந்தப்பட்ட சவூதி அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதுடன், அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவருக்குத் தேவையான சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / வெளிவிவகார மற்றும் இராஜதந்திர விவகாரம்
අනුජන්ගේ නඩු කටයුතු ගැන විදේශ අමාත්යාංශයෙන් නිල නිවේදනයක්
සවුදි අරාබියේදී අධිකරණ ක්රියාමාර්ගයකට මුහුණ දී සිටින අනුජන් ශිවරාසා නමැති ශ්රී ලාංකික පුරවැසියාගේ නඩු කටයුතු පිළිබඳව විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය දැඩි අවධානයෙන් පසුවන බව නිල වශයෙන් ප්රකාශ කර තිබේ.
රියාද්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය හරහා සහ කොළඹ පිහිටි සවුදි අරාබි තානාපති කාර්යාලය සමඟ සම්බන්ධීකරණය වෙමින් මේ පිළිබඳ තත්ත්වය අඛණ්ඩව නිරීක්ෂණය කරන බව එම අමාත්යාංශය සඳහන් කරයි. රාජ්ය තාන්ත්රික මාර්ග ඔස්සේ අදාළ සවුදි බලධාරීන් සමඟ අඛණ්ඩව සාකච්ඡා පවත්වන බවත්, අනුජන් ශිවරාසාගේ අයිතිවාසිකම් සහ සුබසාධනය ආරක්ෂා කරමින් ඔහු වෙත අවශ්ය හැකි සෑම සහයෝගයක්ම ලබාදීමට සුදුසු පියවර ගනිමින් සිටින බවත් විදේශ අමාත්යාංශය නිකුත් කළ නිවේදනයේ වැඩිදුරටත් දැක්වේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / විදේශ කටයුතු සහ රාජ්යතාන්ත්රික පුවත්
Foreign Ministry Closely Follows Case of Anojan Sivarasa in Saudi Arabia
The Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism has officially confirmed that it is closely following the legal case involving Sri Lankan national Anojan Sivarasa, who is undergoing judicial proceedings in the Kingdom of Saudi Arabia.
In an official statement released today, the Ministry affirmed that it continues to monitor developments via the Embassy of Sri Lanka in Riyadh and in close coordination with the Royal Embassy of Saudi Arabia in Colombo. Diplomatic engagement with the relevant Saudi authorities remains active, with the Ministry undertaking appropriate measures to safeguard Anojan Sivarasa's interests and extend all possible assistance throughout the ongoing proceedings.
KR TV Network - Local News / Foreign Affairs and Diplomatic Relations

Comments