காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தினால் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து, இரண்டாம் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தொழில் உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (12) காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவர் எம். ஐ. எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிறுவனத்தின் செயலாளர் மௌலவி எம். ஐ. எம். ஜவாஹிர் பலாஹியின் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டது. இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் எம். சி. எம். சத்தார், சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ். எச். எம். ரமீஸ் ஜமாலி, சம்மேளன மற்றும் பைத்துஸ் ஸகாத் உறுப்பினர்கள், பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய தலைவர்கள் மற்றும் உலமாக்கள், ஸகாத் நிதியின் முக்கியத்துவம், அது மார்க்க ரீதியாகப் பேணப்பட வேண்டிய அமானிதம், நிதி மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை சுயமாகக் கட்டியெழுப்ப வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து கடன் சுமைகளில் இருந்து விடுபடுவதன் அவசியம் குறித்து அறிவுரைகளை வழங்கினர். தொடர்ந்து, சம்மேளனத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிவாயல்களினூடாகவும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், கைத்தொழில் மற்றும் சுயதொழில் உபகரணங்கள், முதலீட்டு நிதி மற்றும் கடன் நிவர்த்திக்கான உதவிகள் அந்தந்த பள்ளிவாயல் நிர்வாகிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
பள்ளிவாயல்கள் ஊடாக வாழ்வாதாரத்திற்காக 139, சுயதொழிலுக்காக 190, கடனுக்காக 67, வீடு திருத்தத்திற்காக 233, மலசலகூட திருத்தத்திற்காக 102 என மொத்தம் 731 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னதாக கடந்த 2026 ஓகஸ்ட் 16 ஆம் திகதி 60 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்திற்காக 3,132,000.00 ரூபாய் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் (12) இரண்டாம் கட்டமாக சுயதொழிலுக்காக 56 பயனாளிகளுக்கு 2,979,000.00 ரூபாயும், கடன் நிவர்த்திக்காக 22 பயனாளிகளுக்கு 1,175,000.00 ரூபாயும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சமூகம் மற்றும் ஸகாத் நிதி விவகாரச் செய்தி
කාත්තන්කුඩි අල් අක්සා පල්ලියේදී බයිතුස් සකාත් අරමුදල මඟින් දෙවන අදියරේ ජීවනෝපාය ආධාර පිරිනමයි
කාත්තන්කුඩි මුස්ලිම් පල්ලි සහ මුස්ලිම් ආයතන සම්මේලනය යටතේ ක්රියාත්මක වන බයිතුස් සකාත් අරමුදල මඟින් එකතු කරන ලද මුදල් ආශ්රයෙන්, දෙවන අදියර යටතේ තෝරාගත් ප්රතිලාභීන් සඳහා ස්වයං රැකියා උපකරණ සහ මූල්ය ආධාර ප්රදානය කිරීමේ විශේෂ උත්සවයක් අද (12) කාත්තන්කුඩි අල් අක්සා මුස්ලිම් පල්ලි පරිශ්රයේදී ඉතා සාර්ථකව පැවැත්විණි.
බයිතුස් සකාත් අරමුදලේ සභාපති එම්. අයි. එම්. මාහීර් මහතාගේ ප්රධානත්වයෙන් සහ ලේකම් මවුලවි එම්. අයි. එම්. ජවාහීර් බලාහි මහතාගේ මෙහෙයවීමෙන් මෙම අවස්ථාව සංවිධානය කර තිබුණි. මේ සඳහා කාත්තන්කුඩි මුස්ලිම් පල්ලි සහ මුස්ලිම් ආයතන සම්මේලනයේ සභාපති විශ්රාමික විදුහල්පති එම්. සී. එම්. සත්තාර්, සම්මේලනයේ ලේකම් මවුලවි එස්. එච්. එම්. රමීස් ජමාලි යන මහත්වරුන් ඇතුළු සම්මේලන සාමාජිකයින්, බයිතුස් සකාත් සාමාජිකයින්, ප්රදේශයේ පල්ලි භාරකාර මණ්ඩල නියෝජිතයින් සහ මහජනතාව විශාල පිරිසක් එක්ව සිටියහ.
මෙහිදී අදහස් දැක්වූ ආගමික නායකයින් සහ විද්වතුන්, සකාත් අරමුදල්වල වටිනාකම, එය සුරැකිය යුතු විශ්වාසනීයත්වයක් බව සහ ලැබෙන උපකරණ මඟින් ආර්ථිකය ශක්තිමත් කරගනිමින් ණය බරින් මිදීමේ වැදගත්කම පිළිබඳව කරුණු පැහැදිලි කළහ. අනතුරුව සම්මේලනය යටතේ පවතින සියලුම මුස්ලිම් පල්ලි මඟින් තෝරාගත් ප්රතිලාභීන් වෙනුවෙන් මහන මැෂින්, පිටි කෙටීමේ යන්ත්ර ඇතුළු ස්වයං රැකියා උපකරණ, ව්යාපාරික මූල්ය ආධාර සහ ණය පියවීමේ මුදල් ආධාර අදාළ පල්ලි පරිපාලන නිලධාරීන් විසින් ප්රදානය කරන ලදී.
පල්ලි හරහා ජීවනෝපාය සඳහා 139ක්, ස්වයං රැකියා සඳහා 190ක්, ණය පියවීම සඳහා 67ක්, නිවාස අලුත්වැඩියාව සඳහා 233ක් සහ සනීපාරක්ෂක පහසුකම් සඳහා 102ක් වශයෙන් සමස්ත අයදුම්පත් 731ක් ලැබී තිබුණි. මීට පෙර 2026 අගෝස්තු 16 වන දින ජීවනෝපාය ආධාර ලෙස ප්රතිලාභීන් 60 දෙනෙකුට රුපියල් 3,132,000.00ක මුදලක් ලබාදී තිබූ අතර, අද (12) දින දෙවන අදියර යටතේ ස්වයං රැකියා සඳහා ප්රතිලාභීන් 56 දෙනෙකුට රුපියල් 2,979,000.00ක මුදලක් සහ ණය බරින් පීඩාවට පත් 22 දෙනෙකු වෙනුවෙන් රුපියල් 1,175,000.00ක මුදලක් නිල වශයෙන් බෙදා දෙන ලදී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / සමාජ සුබසාධන හා ආගමික පුවත්
Baithuz Zakath Fund Distributes Phase Two Livelihood Grants and Equipment at Kattankudy Al-Aqsa Mosque
The Baithuz Zakath Fund, functioning under the Federation of Kattankudy Mosques and Muslim Institutions, conducted its Phase Two distribution ceremony today (12) at the Al-Aqsa Mosque in Kattankudy, presenting essential self-employment implements and structured financial grants to selected community beneficiaries.
The event took place under the leadership of Baithuz Zakath Fund President M. I. M. Mahir and the coordination of Secretary Moulavi M. I. M. Jawahir Falahi. Attendees included the President of the Federation of Mosques and Muslim Institutions, Retired Principal M. C. M. Sathar, Federation Secretary Moulavi S. H. M. Rameez Jamali, council members, mosque trustees, and community residents.
Addressing the recipients, community dignitaries and Islamic scholars highlighted the importance and custodial responsibility associated with Zakat capital, advising beneficiaries to leverage the provided industrial assets to attain sustained economic independence and alleviate debt burdens. Following the addresses, certified beneficiaries representing all constituent mosques under the federation received sewing machines, flour grinding machinery, trade accessories, micro-business funds, and debt-relief disbursements directly from their respective mosque administrators.
A total of 731 applications were evaluated through the local mosques, including 139 for general livelihood support, 190 for self-employment, 67 for debt relief, 233 for housing renovations, and 102 for sanitation facilities. Following an earlier disbursement of Rs. 3,132,000 to 60 livelihood beneficiaries on 16 August 2026, today's Phase Two proceedings saw Rs. 2,979,000 disbursed to 56 self-employment recipients alongside Rs. 1,175,000 allocated to 22 beneficiaries for debt settlement.
KR TV Network - Local News / Community Welfare and Islamic Finance














Comments