Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் உத்தரவு


 மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் உத்தரவு


மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 31 ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய அலுவலகத்திற்குள் பிரவேசித்து, அங்கிருந்த உத்தியோகத்தர்களின் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதேவேளை, அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த வேறு இரண்டு வழக்குகளின் பிடியாணைகள் தொடர்பில் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


මංගලාරාම විහාරාධිපති අම්පිටියේ සුමනරත්න හිමි හෙට දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට මඩකලපුව මහේස්ත්‍රාත්වරයා නියෝග කරයි


මඩකලපුව මංගලාරාම විහාරයේ විහාරාධිපති පූජ්‍ය අම්පිටියේ සුමනරත්න හිමියන් හෙට දිනය දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කරන ලෙස මඩකලපුව මහේස්ත්‍රාත් අධිකරණය නියෝග කර තිබේ.


පසුගිය 31 වනදා මඩකලපුවේ පිහිටි භූ විද්‍යා සමීක්ෂණ හා පතල් කාර්යාංශයේ ප්‍රාදේශීය කාර්යාලයට ගොස් එහි නිලධාරීන්ගේ රාජකාරියට බාධා කළ බව කියන සිද්ධියක් සම්බන්ධයෙන් මඩකලපුව මූලස්ථාන පොලිසිය මඟින් උන්වහන්සේ අද පෙරවරුවේ අත්අඩංගුවට ගන්නා ලදී.


අනතුරුව සැකකාර හිමියන් මඩකලපුව මහේස්ත්‍රාත් අධිකරණය හමුවට ඉදිරිපත් කිරීමෙන් පසු උන්වහන්සේ හෙට දිනය දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට නියෝග කෙරිණි.


මේ අතර උන්වහන්සේට එරෙහිව නිකුත් කර තිබූ වෙනත් නඩු දෙකක වරෙන්තු සම්බන්ධයෙන් රුපියල් ලක්ෂය බැගින් වූ ශරීර ඇප දෙකක් මත මුදාහැරීමට අධිකරණය නියෝග කර ඇත.


කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Mangalarama Viharadhipathi Ven. Ampitiye Sumanarathana Thero Remanded Until Tomorrow


The Batticaloa Magistrate's Court has ordered the Chief Incumbent of the Mangalarama Viharaya, Ven. Ampitiye Sumanarathana Thero, to be remanded until tomorrow.


Ven. Sumanarathana Thero was arrested earlier today by the Batticaloa Headquarters Police over an incident on August 31 where he allegedly entered the regional office of the Geological Survey and Mines Bureau (GSMB) in Batticaloa and obstructed the duties of public officials.


Following his arrest, he was produced before the Batticaloa Magistrate's Court, where the magistrate directed that he be remanded until tomorrow.


Meanwhile, regarding warrants issued in two other pending court cases against him, the magistrate granted release on two personal bails valued at Rs. 100,000 each.


KR TV Network - Local News

Comments