Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி மறுசீரமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு காத்தான்குடியில் முன்னெடுப்பு: வரி விதிப்பு மற்றும் சபை அமர்வுகள் குறித்து வழிகாட்டல்

 











உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி மறுசீரமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு காத்தான்குடியில் முன்னெடுப்பு: வரி விதிப்பு மற்றும் சபை அமர்வுகள் குறித்து வழிகாட்டல்


இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி மறுசீரமைப்பை வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கில் விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு காத்தான்குடி பொதுநூலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது. பொதுநலவாய உள்ளூராட்சி அமைப்புகள் அமைப்பு மற்றும் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) இணைந்து கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வரும் விசேட அபிவிருத்தித் திட்டத்தின் ஓர் அங்கமாக இவ்வேலைத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. உள்ளூராட்சி நிறுவனங்களில் மாதாந்த சபை அமர்வுகளை சட்டதிட்டங்களுக்கு அமைவாக முறையாக நடத்துதல் மற்றும் வருடாந்திர வரிகளைத் துல்லியமாக மதிப்பிட்டு அறவிடுவது தொடர்பான பொறிமுறைகள் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நகர முதல்வர், நகர சபை உறுப்பினர்கள், செயலாளர், கணக்காளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / பிரதேசச் செய்தி


පළාත් පාලන ආයතනවල මූල්‍ය ප්‍රතිසංස්කරණය පිළිබඳ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් කාත්තන්කුඩියේදී: බදු අය කිරීම සහ සභා රැස්වීම් පැවැත්වීම පිළිබඳව මඟපෙන්වීමක්


ශ්‍රී ලංකාවේ පළාත් පාලන ආයතනයන්හි මූල්‍ය ප්‍රතිසංස්කරණ කටයුතු ශක්තිමත් කිරීමේ අරමුණින් විශේෂ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් කාත්තන්කුඩි මහජන පුස්තකාල ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි. පොදුරාජ්‍ය මණ්ඩලීය පළාත් පාලන සංසදය සහ ශ්‍රී ලංකා පළාත් පාලන ආයතන සම්මේලනය (FSLGA) එක්ව නැගෙනහිර පළාත කේන්ද්‍ර කරගනිමින් ක්‍රියාත්මක කරනු ලබන ව්‍යාපෘතියකට සමගාමීව මෙම වැඩසටහන සංවිධානය කර තිබුණි. පළාත් පාලන ආයතන තුළ නීත්‍යානුකූලව සභා වාරයන් පැවැත්වීම සහ වාර්ෂික බදු තක්සේරු කිරීම් හා එකතු කිරීම් විධිමත්ව සිදුකරන ආකාරය පිළිබඳව නගරාධිපති, ගරු මන්ත්‍රීවරුන් සහ නිලධාරීන් මෙහිදී දැනුවත් කරන ලදී. මෙම අවස්ථාවට නගරාධිපතිතුමන්, නගර සභා මන්ත්‍රීවරුන්, ලේකම්, ගණකාධිකාරී, ප්‍රධාන කළමනාකරණ නිලධාරී ඇතුළු පිරිසක් එක්ව සිටියහ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ප්‍රාදේශීය පුවත්


Awareness Programme on Financial Restructuring for Local Authorities Held in Kattankudy Focusing on Taxation and Council Procedures


A targeted capacity-building workshop aimed at steering financial restructuring across local government bodies in Sri Lanka was conducted at the Kattankudy Public Library auditorium. Organised under an institutional initiative jointly facilitated by the Commonwealth Local Government Forum and the Federation of Sri Lankan Local Government Authorities (FSLGA) within the Eastern Province, the session focused on institutionalizing standard council meeting procedures alongside rationalizing annual assessment taxation mechanisms. The seminar engaged the Mayor, municipal council members, Secretary, Accountant, Chief Management Officer, and executive staff members to drive fiscal transparency and administrative governance within municipal setups.


KR TV Network - Local News / Regional News

Comments