அரசாங்கத்திற்கு எதிராக சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் - தமிழ் தேசியக் தலைவர்கள் பங்கேற்பு!
அரசாங்கத்திற்கு எதிராக சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் - தமிழ் தேசியக் தலைவர்கள் பங்கேற்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக, தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி இன்று காலை (12) சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கு எத்தகைய ஆக்கபூர்வமான முன்னேற்றகரமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கைதிகளின் விடுதலை, கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும் ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | அரசியல் செய்தி
රජයට එරෙහිව චාවකච්චේරි හිදී දැවැන්ත විරෝධතා උපවාසයක් - දෙමළ ජාතික නායකයින්ගේ සහභාගීත්වයෙන්!
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ රජයට එරෙහිව දෙමළ ජනතාවගේ අයිතිවාසිකම් මුල් කරගනිමින් අද උදෑසන (12) චාවකච්චේරි බස් නැවතුම්පළ පරිශ්රයේදී දැවැන්ත විරෝධතා උපවාසයක් ආරම්භ කර තිබේ. ප්රජාතන්ත්රවාදී දෙමළ ජාතික සන්ධානයේ සංවිධායකත්වයෙන් මෙම විරෝධතාව ක්රියාත්මක වේ.
වත්මන් රජය බලයට පත්ව වසර දෙකක් ගත වී ඇතත් දෙමළ ජනතාව වෙනුවෙන් කිසිදු ධනාත්මක ක්රියාමාර්ගයක් ගෙන නොමැති බවට චෝදනා කරමින් මෙම උපවාසය දියත් කර ඇත. දේශපාලන कैඳවුම්කරුවන් නිදහස් කිරීම, අත්පත් කරගත් ඉඩම් මුදා හැරීම, සෙම්මනී සමූහ මිනීවළ සම්බන්ධයෙන් යුක්තිය ඉල්ලීම සහ පළාත් සභා මැතිවරණය වහාම පවත්වන ලෙස බල කරමින් මෙම ඉල්ලීම් ඉදිරිපත් කර තිබේ.
ශ්රී ලංකා තේරුම්පත් පක්ෂයේ වැඩබලන නායක සී.වී.කේ. සිවඥානම්, මහලේකම් එම්.ඒ. සුමන්තිරන්, දෙමළ ඊළාම් විමුක්ති සංවිධානයේ (ටෙලෝ) නායක සහ පාර්ලිමේන්තු මන්ත්රී සෙල්වම් අඩෙක්කලනාදන් සහ ඊලාම් ජනතා විමුක්ති පෙරමුණේ (EPRLF) නායක සුරේෂ් ප්රේමචන්ද්රන් ඇතුළු ප්රමුඛ දේශපාලනඥයෝ රැසක් මෙම අවස්ථාවට එක්ව සිටිති.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශපාලන පුවත්
Massive Hunger Strike Protest Erupts in Chavakachcheri Against Government: Tamil National Leaders Lead the Demonstration!**
A massive hunger strike protest opposing the administration of President Anura Kumara Dissanayake was launched this morning (12) at the Chavakachcheri bus stand premises under the organization of the Democratic Tamil National Alliance.
The protest denounces the government for failing to deliver tangible developmental progress or solutions for Tamil-speaking communities two years into its term. Key demands include the immediate release of political prisoners, the return of seized lands, justice for the Semmani mass graves, and the prompt conduct of long-delayed provincial council elections.
Prominent political figures, including Illankai Tamil Arasu Kachchi (ITAK) Acting Leader C.V.K. Sivagnanam, General Secretary M.A. Sumanthiran, TELO Leader and MP Selvam Adaikkalanathan, and EPRLF Leader Suresh Premachandran, joined the protest alongside public supporters.
KRTV Network | Political News

Comments