Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மிக் விமானக் கொள்வனவு விவகாரம்: வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ


 மிக் விமானக் கொள்வனவு விவகாரம்: வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ


இலங்கை விமானப்படைக்கு மிக் ரக போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான சர்ச்சைக்குரிய கொடுக்கல்வாங்கல் விவகாரம் குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) உத்தியோகபூர்வமாக முன்னிலையாகியுள்ளார்.


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராக அவர் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பினை அடுத்தே அவர் இவ்வாறு நேரில் வருகை தந்துள்ளார். மிக் விமானக் கொடுக்கல்வாங்கல் தொடர்பில் முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முன்தினம் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் மற்றும் சட்ட விவகாரச் செய்தி


මිග් ගුවන් යානා ගනුදෙනුව පිළිබඳ ප්‍රකාශයක් ලබාදීමට හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මූල්‍ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය හමුවට පැමිණෙයි


ශ්‍රී ලංකා ගුවන් හමුදාව සඳහා මිග් ප්‍රහාරක ගුවන් යානා මිලදී ගැනීමේ මතභේදාත්මක ගනුදෙනුව සම්බන්ධයෙන් ප්‍රකාශයක් ලබාදීම සඳහා හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මහතා අද (11) උදෑසන මූල්‍ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය (FCID) හමුවේ පෙනී සිටියේය.


ආරක්ෂක අමාත්‍යාංශයේ හිටපු ලේකම්වරයා ලෙස ඔහු කටයුතු කළ සමයේ සිදුවූ බව කියන මූල්‍ය හා ක්‍රියා පටිපාටිමය ගනුදෙනු සම්බන්ධයෙන් ප්‍රශ්න කර ප්‍රකාශයක් සටහන් කරගැනීමට සිදුකළ කැඳවීමකට අනුව ඔහු මෙලෙස එම ඒකකය වෙත පැමිණ තිබේ. අදාළ ගනුදෙනුව සම්බන්ධයෙන් හිටපු ගුවන් හමුදාපති එයාර් චීෆ් මාර්ෂල් රොෂාන් ගුණතිලක මහතාගෙන් ඊයේ දිනයේදී ප්‍රකාශයක් සටහන් කරගැනීමෙන් අනතුරුව, හිටපු ජනාධිපතිවරයාගෙන් ප්‍රශ්න කිරීමේ විමර්ශන කටයුතු මේ වන විට ආරම්භ කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන හා නීතිමය පුවත්


MiG Procurement Investigation: Former President Gotabaya Rajapaksa Appears Before Financial Crimes Investigation Division


Former President Gotabaya Rajapaksa arrived at the Financial Crimes Investigation Division (FCID) this morning (11) to officially record a statement regarding the controversial procurement of MiG combat aircraft for the Sri Lanka Air Force.


His appearance follows official summons issued by investigating officers seeking formal testimony concerning procedural and financial approvals executed during his tenure as Secretary to the Ministry of Defence. The appearance comes in the wake of yesterday's statement recorded from former Commander of the Air Force, Air Chief Marshal Roshan Goonetileke, as investigative authorities continue proceedings concerning procurement irregularities tied to the defense transaction.


KR TV Network - Local News / Political and Legal Affairs

Comments