Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

லண்டன் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் விசேட கையெழுத்து மனு ஆரம்பிப்பு


 லண்டன் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் விசேட கையெழுத்து மனு ஆரம்பிப்பு


பிரித்தானியாவின் லண்டன் நகருக்கும் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய தொழிற்கட்சி (Labour Party) பாராளுமன்ற உறுப்பினர் கேரத் தோமஸ் (Gareth Thomas) விசேட கையெழுத்து மனுவொன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.


வட இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாசார ரீதியான ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்டுள்ள பிரித்தானியத் தமிழ் மக்களின் நீண்டகாலப் பயண சிரமங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான நேரடி விமான சேவையை கொண்டு வாருங்கள் எனும் தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மனுவில், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் குடும்பங்கள் திருமணங்கள், சமய உற்சவங்கள், அந்தியேட்டி மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் பயணிக்கும் போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


ஹரோ வெஸ்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கேரத் தோமஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், தற்போது நேரடி விமான சேவைகள் இல்லாத காரணத்தால் பயணிகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாகப் பயணித்து, அங்கிருந்து மேலும் சுமார் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு தரைவழியாகவோ அல்லது ரயில் மூலமாகவோ 6 முதல் 7 மணித்தியாலங்கள் மேலதிக பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலைமை முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுடன் பயணிப்போருக்கு பாரிய அசெளகரியத்தை ஏற்படுத்துவதாகவும், லண்டன்-யாழ்ப்பாணம் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால் பயண நேரம் குறைவதோடு, வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை, நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பொருளாதார மீளெழுச்சிக்கும் அது பெரும் உந்துசக்தியாக அமையும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / விமானப் போக்குவரத்து மற்றும் புலம்பெயர் விவகாரம்


ලන්ඩන් සහ යාපනය අතර සෘජු ගුවන් සේවා ආරම්භ කරන ලෙස ඉල්ලා බ්‍රිතාන්‍ය පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙකුගෙන් පෙත්සමක්


එක්සත් රාජධානියේ ලන්ඩන් නුවර සහ යාපනය ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ අතර සෘජු ගුවන් ගමන් වාර ආරම්භ කරන ලෙස බලධාරීන්ගෙන් ඉල්ලා සිටිමින් බ්‍රිතාන්‍ය කම්කරු පක්ෂයේ (Labour Party) පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගැරත් තෝමස් (Gareth Thomas) මහතා විසින් විශේෂ මහජන අත්සන් ලබාගැනීමේ පෙත්සමක් ආරම්භ කර තිබේ.


උතුරු ශ්‍රී ලංකාව සමඟ පවුල් හා සංස්කෘතික සබඳතා පවත්වන බ්‍රිතාන්‍යයේ වෙසෙන දෙමළ ප්‍රජාවගේ ගමන් පහසුව සලසා දීමේ අරමුණින් මෙම පියවර ගෙන ඇත. "යාපනයට සෘජු ගුවන් සේවාවක් රැගෙන එන්න" යන තේමාව යටතේ ආරම්භ කර ඇති මෙම පෙත්සම මඟින් පෙන්වා දෙන්නේ, විවාහ මංගල්‍යයන්, ආගමික උත්සව සහ අවමංගල්‍ය අවස්ථා වැනි හදිසි පවුල් කටයුතු සඳහා යාපනය බලා ගමන් කරන දෙමළ ජනතාව දැඩි අපහසුතාවන්ට මුහුණ දෙන බවයි.


හැරෝ වෙස්ට් ආසනය නියෝජනය කරන පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගැරත් තෝමස් සඳහන් කරන්නේ, වර්තමානයේ ලන්ඩන් සිට යාපනය දක්වා සෘජු ගුවන් සේවා නොමැති වීම හේතුවෙන් මගීන්ට කොළඹට පැමිණ එතැන් සිට කිලෝමීටර් 400කට අධික දුරක් පැය 6ත් 7ත් අතර කාලයක් දුම්රියෙන් හෝ මාර්ගගතව ගමන් කිරීමට සිදුව ඇති බවයි. මෙම තත්ත්වය වැඩිහිටියන්ට හා කුඩා දරුවන් සහිත පවුල්වලට දැඩි පීඩාවක් ගෙනදෙන අතර, මෙම නව සෘජු ගුවන් සේවාව ක්‍රියාත්මක වුවහොත් ගමන් පහසුව සැලසෙනවාට අමතරව උතුරු පළාතේ සංචාරක කර්මාන්තයට, ආයෝජනවලට සහ කලාපීය ආර්ථික සංවර්ධනයටද ඉමහත් පිටුවහලක් වනු ඇති බව ඔහු වැඩිදුරටත් අවධාරණය කරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / ගුවන් සේවා සහ ඩයස්පෝරා කටයුතු පිළිබඳ පුවත්


British MP Gareth Thomas Launches Petition Calling for Direct Flights Between London and Jaffna


British Labour Member of Parliament Gareth Thomas has initiated a formal parliamentary and public petition urging civil aviation authorities and airline operators to establish direct flight connectivity between London and the Jaffna International Airport in Palaly, northern Sri Lanka.


The campaign, spearheaded under the banner "Bring Direct Flights to Jaffna," aims to facilitate seamless transit for the extensive British Tamil diaspora maintaining strong familial, cultural, and economic ties to northern Sri Lanka. The petition outlines the substantial logistical hurdles encountered by travelers journeying to Jaffna for religious festivals, weddings, memorial rituals, and urgent family visits.


Speaking on the initiative, the MP for Harrow West noted that the current absence of direct aerial routes forces passengers to transit via Colombo, followed by an arduous journey spanning over 400 kilometers that takes six to seven hours by road or rail. Highlighting that this protracted overland travel disproportionately impacts senior citizens and families traveling with young infants, the petition underscores that direct air operations would significantly reduce travel time, foster closer cultural and diaspora ties, and provide a major catalyst for tourism, foreign direct investment, and regional economic revitalization across the Northern Province.


KR TV Network - International News / Aviation and Diaspora Affairs

Comments