சவூதியில் மரண தண்டனை விவகாரம்: அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் ரிஷாத் பதியுதீன்
சவூதியில் மரண தண்டனை விவகாரம்: அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் ரிஷாத் பதியுதீன்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் நேற்று (18) நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கல்முனை நாற்பிட்டிமுனையிலுள்ள அனோஜனின் இல்லத்திற்குச் சென்ற அவர், அனோஜனின் தாயார், சகோதரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசி, தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். இத்தீர்ப்பு குறித்த செய்திகள் இலங்கை முஸ்லிம் சமூகத்திடமும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும், சவூதி மன்னரிடமும் அவசர கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அனோஜனை விடுதலை செய்ய சவூதி அரசிடம் முறையிடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளதாகக் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் மற்றும் மனித உரிமைகள் விவகாரம்
සවුදියේ මරණ දඬුවම් සිද්ධිය: අනුජන්ගේ පවුලේ සාමාජිකයන් හමුවීමට රිෂාඩ් බදියුදීන් යයි
සවුදි අරාබියේදී මරණ දඬුවම නියම වී ඇති බවට තොරතුරු පළවන අම්පාර කල්මුණේ නාට්පිට්ටිමුනෙයි ප්රදේශයේ පදිංචි ශිවරාසා අනුජන්ගේ නිවසට හිටපු අමාත්ය සහ සමස්ත ලංකා මක්කල් කොංග්රසයේ නායක රිෂාඩ් බදියුදීන් මහතා ඊයේ (18) පෞද්ගලිකවම ගොස් පවුලේ ඥාතීන් හමුවී සිය සහයෝගය පළකර තිබේ.
අනුජන්ගේ මව සහ සහෝදර සහෝදරියන් හමුවූ ඒ මහතා, මෙම සිදුවීම සම්බන්ධයෙන් අදාළ සියලු බලධාරීන් සමඟ සාකච්ඡා කර අවශ්ය පියවර ගන්නා බවට සහතික විය. මෙම මරණ දඬුවම් පුවත සම්බන්ධයෙන් මෙරට මුස්ලිම් ප්රජාව තුළද දැඩි කනස්සල්ලක් මතුව ඇති බව සඳහන් කළ බදියුදීන් මහතා, මුස්ලිම් පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් ඒකරාශී කර ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගෙන් මෙන්ම සවුදි රජුගෙන්ද විශේෂ ඉල්ලීමක් කිරීමට බලාපොරොත්තු වන බව පැවසීය. එමෙන්ම අනුජන් මුදාගැනීම සඳහා සවුදි රජයට කරුණු දක්වන ලෙස සමස්ත ලංකා ජමියතුල් උලමා සංවිධානයෙන්ද ඉල්ලා සිටින බව ඔහු සඳහන් කළේය. පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන ගජේන්ද්රකුමාර් පොන්නම්බලම්, ශානක්කියන් රාසමානික්කම් සහ මනෝ ගනේෂන් යන මහත්වරුන් තමන් සමඟ දුරකථනයෙන් සාකච්ඡා කළ බවත්, කණ්ඩායමක් ලෙස එක්ව ඉදිරි පියවර ගැනීමට අපේක්ෂා කරන බවත් ඔහු වැඩිදුරටත් අනාවරණය කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන සහ මානව හිමිකම් පුවත්
Saudi Death Sentence Issue: Rishad Bathiudeen Visits Anojan's Family in Kalmunai
Former Minister and leader of the All Ceylon Makkal Congress, Rishad Bathiudeen, visited the residence of Sri Lankan national Anojan Sivarasa in Narpittimunai, Kalmunai, yesterday (18) following reports that he had been handed a capital death sentence in Saudi Arabia.
During the visit, Bathiudeen met with Anojan’s mother, siblings, and relatives, offering his solidarity and pledging to engage directly with relevant authorities to pursue legal and diplomatic relief. Highlighting that the reported verdict had caused widespread concern among Sri Lanka's Muslim community, he stated that he plans to mobilize Muslim Members of Parliament to submit an urgent appeal to President Anura Kumara Dissanayake and the King of Saudi Arabia. He also noted that he would formally request the All Ceylon Jamiyyathul Ulama to appeal to the Saudi government on humanitarian grounds. Bathiudeen added that parliamentarians Gajendrakumar Ponnambalam, Shanakiyan Rasamanickam, and Mano Ganesan had contacted him via telephone to coordinate joint parliamentary representations regarding the case.
KR TV Network - Local News / Politics and Human Rights

Comments