பேஸ்புக் விருந்துகள் குறித்து உளவு பார்க்க விசேட திட்டம்: பொலிஸ் மா அதிபர் அதிரடி உத்தரவு
பேஸ்புக் விருந்துகள் குறித்து உளவு பார்க்க விசேட திட்டம்: பொலிஸ் மா அதிபர் அதிரடி உத்தரவு
பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் களியாட்ட விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான இரகசியப் புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை பொலிஸ் மா அதிபர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் பயனாக, சில தினங்களுக்கு முன்னர் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பேஸ்புக் விருந்தொன்றை முற்றுகையிட்டு, அதில் பங்கேற்ற 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். எதிர்காலத்திலும் இத்தகைய இடங்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் உளவுத் தகவல்களைத் திரட்டும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கும் பாரிய ஆபத்து காணப்படுவதாகவும், இவ்வாறான நிகழ்வுகள் போதைப்பொருள் வலையமைப்புகளினால் பணத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் சட்டவிரோத வியாபாரங்கள் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் அன்றாட நடத்தைகள், உரையாடல்கள் மற்றும் பயணங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதைப்பொருள் பாவனையின் விபரீதம் காரணமாக 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 172 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்கலாக மொத்தம் 175 நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், நடப்பு 2026 ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் தொடர்பான சம்பவங்களில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தரவுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
ෆේස්බුක් සාද පිළිබඳ බුද්ධි තොරතුරු රැස්කිරීමට පොලිස්පතිගෙන් විශේෂ වැඩපිළිවෙළක්
ෆේස්බුක් සමාජ මාධ්ය ජාලය ඔස්සේ සංවිධානය කරනු ලබන සාද සහ ඒවා පවත්වන ස්ථාන පිළිබඳව රහස්ය බුද්ධි තොරතුරු එක්රැස් කිරීම සඳහා පොලිස්පතිවරයාගේ උපදෙස් මත විශේෂ මෙහෙයුම් වැඩපිළිවෙළක් ආරම්භ කර ඇති බව පොලිසිය පවසයි.
මෙම වැඩපිළිවෙළේ ප්රතිඵලයක් ලෙස පසුගියදා තෙල්දෙණිය පොලිස් වසමේ පැවති එවැනි ෆේස්බුක් සාදයක් වැටලීමට හැකිවූ බවත්, එහිදී තරුණ තරුණියන් 41 දෙනෙකු අත්අඩංගුවට ගත් බවත් පොලිස් මාධ්ය ප්රකාශක සහකාර පොලිස් අධිකාරී එෆ්.යූ. වුට්ලර් මහතා සඳහන් කළේය. ඉදිරියටත් මෙවැනි සැකකටයුතු ස්ථාන සම්බන්ධයෙන් අඛණ්ඩව බුද්ධි තොරතුරු රැස්කර නීතිමය පියවර ගන්නා බවද හෙතෙම කියා සිටියේය.
ෆේස්බුක් සාද මුවාවෙන් තරුණ පරපුර මත්ද්රව්ය ජාවාරම්කරුවන්ගේ ගොදුරු බවට පත්වීමේ දැඩි අවදානමක් පවතින බවත්, ඇතැම් අවස්ථාවලදී සංවිධානාත්මක අපරාධකරුවන් විසින් මුදල් ඉලක්ක කරගනිමින් මෙවැනි සාද පවත්වන බවත් පොලිසිය අනතුරු අඟවයි. එම නිසා තම දරුවන්ගේ ඇසුර, හැසිරීම් රටාවන් සහ ගමන් බිමන් පිළිබඳව දැඩි විමසිල්ලෙන් පසුවන ලෙස දෙමාපියන්ගෙන් ඉල්ලා සිටියි.
මේ අතර, මත්ද්රව්ය උවදුරේ භයානක ප්රතිඵලයක් ලෙස 2025 වසර තුළදී පිරිමි පුද්ගලයින් 172ක් සහ කාන්තාවන් තිදෙනෙකු ඇතුළුව පුද්ගලයින් 175 දෙනෙකු සියදිවි නසාගෙන ඇති බව පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා අනාවරණය කළේය. එසේම 2026 වසරේ මේ දක්වා කාලය තුළදී මත්ද්රව්ය භාවිතය හා සම්බන්ධ සිද්ධීන්ගෙන් පුද්ගලයින් 11 දෙනෙකු මියගොස් ඇති බවද වාර්තා වේ.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
IGP Launches Intelligence Initiative to Target Facebook Parties Exploiting Youth
The Inspector General of Police (IGP) has implemented a specialized intelligence-gathering mechanism to monitor parties and gatherings organized via Facebook, according to the Police Department.
Police Media Spokesperson, Assistant Superintendent of Police (ASP) F.U. Wootler, stated that this specialized drive led to the recent raid of a Facebook party in the Teldeniya police division, culminating in the arrest of 41 youths. He affirmed that proactive surveillance and intelligence operations will continue systematically to identify similar unauthorized events.
Authorities warned that illicit narcotics networks frequently orchestrate such social media parties as commercial fronts to lure young people into substance abuse. ASP Wootler urged parents to remain vigilant over shifts in their children's behavioral patterns, daily routines, social circles, and travel habits.
Highlighting the devastating consequences of the narcotics crisis, the spokesperson revealed that drug-related despair drove 175 individuals to commit suicide in 2025, comprising 172 males and three females. Furthermore, 11 drug-related fatalities have already been recorded thus far in 2026.
KR TV Network - Local News

Comments