Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர் உவைஸ் சவூதி அரேபியாவில் காலமானார்: கே ஆர் டி வி நெட்வொர்க் ஆழ்ந்த இரங்கல்

 


காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர் உவைஸ் சவூதி அரேபியாவில் காலமானார்: கே ஆர் டி வி நெட்வொர்க் ஆழ்ந்த இரங்கல்


காத்தான்குடி புலவனார் வீதியைப் பிறப்பிடமாகவும், புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் உவைஸ் அவர்கள் சவூதி அரேபியாவின் அல்-கோபார் பகுதியில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).


டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் மிகுந்த திறமையும் ஆளுமையும் கொண்ட சகோதரர் உவைஸ், தனது துறைசார் அறிவையும் அனுபவத்தையும் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளுக்காகப் பயன்படுத்தி வந்த ஒரு சிறந்த சமூக நலன்விரும்பி ஆவார். அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த ஊர் மக்களுக்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாக அமைந்துள்ளது.


அன்னாரின் மறைவால் துயருறும் அவரது மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கே ஆர் டி வி நெட்வொர்க் ஊடகக் குழுமம் தனது இதயப்பூர்வமான இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் நல்லறங்களை ஏற்று, பாவங்களை மன்னித்து, அவரது மறுமை வாழ்வை ஒளிமயமாக்கி, உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் சுவனத்தை வழங்குவதோடு, குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையையும் மன அமைதியையும் அருளப் பிரார்த்திக்கின்றோம்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - இரங்கல் செய்தி


කාත්තන්කුඩියේ සහෝදර උවයිස් සෞදි අරාබියේදී අභාවප්‍රාප්ත වෙයි: කේ ආර් ටීවී නෙට්වර්ක් ශෝකය පළ කරයි


කාත්තන්කුඩිය පුලවනාර් වීදියේ උපත ලබා, නව කාත්තන්කුඩිය අල්-අක්සා මහා ජුම්මා පල්ලිය වීදියේ පදිංචිව සිටි සහෝදර උවයිස් මහතා සෞදි අරාබියේ අල්-කෝබාර් ප්‍රදේශයේ සේවය කරමින් සිටියදී ඊයේ දින අභාවප්‍රාප්ත විය (ඉන්නා ලිල්ලාහි වඉන්නා ඉලයිහි රාජිඌන්).


ඩිජිටල් තාක්ෂණික ක්ෂේත්‍රයේ ඉහළ දක්ෂතාවයකින් හා නායකත්වයකින් හෙබි ඒ මහතා, සිය දැනුම හා හැකියාවන් සමාජයේ යහපත හා සංවර්ධනය උදෙසා නිරන්තරයෙන් කැප කළ මානවහිතවාදී පුද්ගලයෙකි. ඔහුගේ හදිසි වියෝව පවුලේ ඥාතීන්ට පමණක් නොව සමස්ත ප්‍රජාවටම දැරිය නොහැකි බලවත් පාඩුවකි.


ඔහුගේ අභාවයෙන් ශෝකයට පත් බිරිඳ, දරුවන්, දෙමාපියන්, සහෝදර සහෝදරියන් ඇතුළු පවුලේ සැමට කේ ආර් ටීවී නෙට්වර්ක් මාධ්‍ය ජාලයේ බලවත් ශෝකය සහ කනගාටුව ප්‍රකාශ කර සිටිමු. සර්වබලධාරී දෙවියන් වහන්සේ ඔහුගේ යහපත් ක්‍රියාවන් පිළිගෙන, පව්වලට සමාව ලබා දී, පරලොව ජීවිතය ආලෝකමත් කර උතුම් වූ ස්වර්ගය (ජන්නතුල් ෆිර්දවුස්) ලබාදෙත්වායි ප්‍රාර්ථනා කරමු.


කේ ආර් ටීවී නෙට්වර්ක් - ශෝක පණිවිඩය


Brother Owais from Kattankudy Passes Away in Saudi Arabia: KR TV Network Expresses Deep Condolences


Brother Owais, a native of Pulavanar Road in Kattankudy and a resident of New Kattankudy Al-Aqsa Grand Jummah Mosque Road, passed away yesterday while working in the Al-Khobar region of Saudi Arabia (Inna Lillahi wa Inna Ilayhi Raji'un).


Brother Owais was well regarded for his proficiency and leadership in digital technology, dedicating his skills and expertise toward community development and social welfare. His sudden demise represents an irreplaceable loss not only to his family but also to the broader community.


The editorial team and management of KR TV Network extend their sincere condolences and deepest sympathies to his wife, children, parents, siblings, and extended family during this hour of grief. We pray that Almighty Allah accepts his noble deeds, forgives his shortcomings, illuminates his resting place, and grants him the highest abode in Jannatul Firdaus, while bestowing patience and strength upon his bereaved loved ones.


KR TV Network - Obituary / Condolences

Comments