Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியின் மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் உப பரிசோதகர் பணி இடைநீக்கம்


 கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியின் மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் உப பரிசோதகர் பணி இடைநீக்கம்


திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காக பெருந்தொகை பணத்தையும், அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சத்தையும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்த உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


கடந்த 2021ஆம் ஆண்டு குறித்த உத்தியோகத்தர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்காக பணத்தையும், அவரது மனைவியிடம் தகாத முறையில் பாலியல் இலஞ்சத்தையும் கோரியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரினால் திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.


விசாரணைகள் நிலுவையில் இருந்த காலத்தில் இவர் திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு, சில வாரங்களுக்கு முன்னரே கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் விசாரணைகளின் முடிவுகளுக்கு அமைய பொலிஸ் தலைமையகம் அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


ත්‍රිකුණාමලයේදී අත්අඩංගුවට ගත් මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවෙකුගේ බිරිඳගෙන් ලිංගික අල්ලස් ඉල්ලූ උප පොලිස් පරීක්ෂකවරයෙකුගේ වැඩ තහනම්


ත්‍රිකුණාමලයේදී අත්අඩංගුවට ගත් මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවෙකු නිදහස් කිරීම සඳහා විශාල මුදලක් සහ ඔහුගේ බිරිඳගෙන් ලිංගික අල්ලස් ඉල්ලූ බවට එල්ල වූ චෝදනාවක් මත මඩකලපුව, කල්කුඩා පොලිස් ස්ථානයට අනුයුක්තව සේවය කළ උප පොලිස් පරීක්ෂකවරයෙකුගේ වැඩ ඊයේ සිට ක්‍රියාත්මක වන පරිදි අත්හිටුවා තිබේ.


ඕට්ටමාවඩි ප්‍රදේශයේ පදිංචිකරුවෙකු වන අදාළ පොලිස් නිලධාරියාගේ සේවය වහාම ක්‍රියාත්මක වන පරිදි අත්හිටුවන ලෙස පොලිස් මූලස්ථානය නිකුත් කළ නියෝගයකට අනුව මෙම පියවර ගත් බව උසස් පොලිස් නිලධාරියෙකු තහවුරු කර ඇත.


පසුගිය 2021 වසරේදී අදාළ නිලධාරියා ත්‍රිකුණාමලය පොලිස් ස්ථානයේ සේවය කරමින් සිටියදී, හෙරොයින් මත්ද්‍රව්‍ය සමඟ අත්අඩංගුවට ගත් ජාවාරම්කරුවෙකු නිදහස් කිරීම සඳහා මුදල් මෙන්ම ඔහුගේ බිරිඳගෙන් ලිංගික අල්ලස් ඉල්ලා ඇති බවට චෝදනා එල්ල විය. මේ සම්බන්ධයෙන් විපතට පත් පුද්ගලයා විසින් ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් පොලිස් අධිකාරී කාර්යාලය වෙත කරන ලද පැමිණිල්ලකට අනුව දීර්ඝ විමර්ශනයක් සිදුකර තිබුණි.


විමර්ශන කටයුතු සිදුවෙමින් පැවති කාලසීමාව තුළ මොහු ත්‍රිකුණාමලයේ සිට වාළච්චේන සහ කන්තලේ පොලිස් ස්ථාන වෙත මාරු කර යවා ඇති අතර, සති කිහිපයකට පෙර කල්කුඩා පොලිස් ස්ථානයට ස්ථාන මාරුවීම් ලබා තිබුණි. මේ වන විට විමර්ශන වාර්තා මත පදනම්ව පොලිස් මූලස්ථානය මඟින් ඔහුගේ වැඩ තහනම් කර ඇත.


කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Sub-Inspector Interdicted for Demanding Bribe and Sexual Favours from Drug Suspect's Wife


A police sub-inspector attached to the Kalkudah Police Station in Batticaloa has been placed under interdiction with effect from yesterday following grave allegations of demanding a substantial monetary bribe and sexual favours from the wife of an arrested narcotics dealer.


According to a senior police official, Police Headquarters issued directives to immediately interdict the officer, who is a resident of Ottamavadi.


The alleged incident took place in 2021 when the officer was stationed at the Trincomalee Police Station. He had reportedly solicited financial bribes alongside sexual favours from the suspect's wife in exchange for releasing a dealer detained in possession of heroin. Following a formal complaint lodged by the aggrieved party with the Trincomalee Senior Superintendent of Police (SSP) office, an internal investigation was initiated.


While departmental inquiries were underway, the officer was transferred from Trincomalee to Valachchenai and Kantale, and was reassigned to the Kalkudah Police Station only a few weeks ago. Acting upon the findings of the internal disciplinary inquiries, Police Headquarters has now enforced the interdiction order.


KR TV Network - Local News

Comments