கடந்த இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எவையும் பதிவாகவில்லை: வரலாற்றில் முதன்முறையாக நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
கடந்த இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எவையும் பதிவாகவில்லை: வரலாற்றில் முதன்முறையாக நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள கடந்த இரண்டு ஆண்டுகளில், வரலாற்றில் முதன்முறையாக இனவாத அடிப்படையில் எந்தவொரு பிரச்சினையும் எவ்வித பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகளாகப் பதிவாகவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சியாளர்களின் செயற்பாடுகள்: கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இனவாதத்தைப் போஷித்து வந்ததாகவும், சில அரசாங்கங்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கு ஒரே கணக்கிலிருந்து நிதி வழங்கி மக்களை மோதிக்கொள்ளச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இனவாதத்தைத் தூண்டி மக்களை நாய்களைப் போன்று கடித்துக் கொள்ளச் செய்ததே முந்தைய ஆட்சியாளர்களின் வழக்கம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமது தற்போதைய ஆட்சிக் காலத்தில் நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு எக்காலத்திலும் இடமளிக்கப்படாது என நேற்றைய கூட்டத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
වත්මන් රජය බලයට පත්වී වසර දෙකක් තුළ කිසිදු ජාතිවාදී ගැටළුවක් වාර්තා වී නැත - ජනපති අනුර කුමාර දිසානායක!
තම රජය බලය භාරගෙන ගත වූ වසර දෙකක කාලය තුළ, ඉතිහාසයේ පළමු වතාවට ජාතිවාදී පදනමින් කිසිදු ගැටළුවක් සම්බන්ධයෙන් කිසිදු පොලිස් ස්ථානයක පැමිණිල්ලක් වාර්තා වී නොමැති බව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රකාශ කර තිබේ.
අතීතයේ රට පාලනය කළ පාලකයන් ජාතිවාදය පෝෂණය කළ බවත්, ඇතැම් රජයන් සිංහල සහ මුස්ලිම් ජාතිවාදී සංවිධාන වෙත එකම ගිණුමකින් මුදල් ලබා දී ජනතාව එකිනෙකා මරා ගැනීමට සැලැස්වූ බවත් ජනපතිවරයා චෝදනා කළේය.
ජාතිවාදය අවුළුවාලමින් ජනතාව එකිනෙකා ගැටුම්වලට පැටලවීම පෙර රජයන්ගේ සිරිත වූ බව පෙන්වා දුන් ජනපතිවරයා, තම පාලන සමය තුළ කිසිදු අයුරකින් ජාතිවාදයට හිස එසවීමට ඉඩ නොදෙන බව ඊයේ පැවති රැස්වීමේදී අවධාරණය කළේය.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්
Not a Single Communal Issue Reported Across Police Stations in Two Years: First Time in History, Ethnic Harmony Upheld - President Anura Kumara Dissanayake!
President Anura Kumara Dissanayake has proudly highlighted that during the past two years since his administration assumed office, not a single complaint regarding communal or ethnic-based issues has been recorded at any police station across the country for the first time in history.
Pointing out that past regimes actively nurtured and sustained communalism, he accused previous governments of funding both Sinhala and Muslim extremist organizations from the same bank accounts to instigate division and conflict among citizens.
Emphasizing that former administrations thrived on inciting ethnic hatred and turning communities against each other, the President firmly stated during yesterday's gathering that his administration will never allow racism or communalism to rear its head under his watch.
KRTV Network | Local News

Comments