யாழ் கொடிகாமத்தில் இரு விபத்துக்கள்: ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட இருவர் பலி
யாழ் கொடிகாமத்தில் இரு விபத்துக்கள்: ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட இருவர் பலி
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு விபத்துச் சம்பவங்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதேவேளை, வரணி பகுதியில் வேகனார் காரும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விரு விபத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கொடிகாமம் பொலிஸார், விபத்துக்களை ஏற்படுத்திய வாகனங்களின் சாரதிகள் இருவரையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / வீதி விபத்து மற்றும் பொலிஸ் புலனாய்வு விவகாரம்
යාපනය කොඩිකාමම්හි අනතුරු දෙකකින් විශ්රාමික ගුරුවරයෙකු ඇතුළු දෙදෙනෙක් මරුට
යාපනය කොඩිකාමම් පොලිස් වසමට අයත් ප්රදේශයන්හි සිදුවූ වෙනම රිය අනතුරු දෙකකින් විශ්රාමික ගුරුවරයෙකු ඇතුළු දෙදෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබේ.
කෙර්පේලි ප්රදේශයේදී මහින්ද්රා වර්ගයේ රථයක් සහ ඩිස්කවර් වර්ගයේ යතුරුපැදියක් එකිනෙක ගැටීමෙන් සිදුවූ අනතුරකින් යතුරුපැදිය පැදවූ විශ්රාමික ගුරුවරයා මියගොස් ඇත. මේ අතර, වරනි ප්රදේශයේදී වැගන් ආර් වර්ගයේ මෝටර් රථයක් සහ පාපැදියක් ගැටීමෙන් සිදුවූ තවත් අනතුරකින් පාපැදිය පදවාගෙන ගිය වැඩිහිටි පුද්ගලයෙකු මියගොස් තිබේ. මෙම අනතුරු සිදුවීම් දෙක සම්බන්ධයෙන් පරීක්ෂණ ක්රියාත්මක කළ කොඩිකාමම් පොලිසිය, අනතුරට සම්බන්ධ රථවල රියදුරන් දෙදෙනා අත්අඩංගුවට ගෙන රඳවාගෙන ඇති අතර අනතුරට ලක්වූ වාහනද පොලිස් භාරයට ගෙන වැඩිදුர විමර්ශන සිදුකරයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රිය අනතුරු සහ පොලිස් විමර්ශන පුවත්
Two Separate Accidents in Jaffna Kodikamam Claim Two Lives Including Retired Teacher
Two individuals, including a retired teacher, were killed in two separate road accidents reported within the Kodikamam police division in Jaffna.
In the Kerpeli area, a collision between a Mahindra vehicle and a Discover motorcycle resulted in the fatal death of the motorcyclist, identified as a retired schoolteacher. In another accident reported from Varani, a Wagon R car collided with a bicycle, claiming the life of an elderly bicyclist. Kodikamam police investigating the two fatalities have arrested the drivers of both vehicles, detained them at the police station, and impounded the damaged vehicles for further judicial proceedings.
KR TV Network - Local News / Road Accidents and Police Investigations

Comments