பாராளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ஷ பங்கேற்க சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் கடிதம்
பாராளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ஷ பங்கேற்க சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் கடிதம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கூடவுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ நாளை சபை அமர்வுகளுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
නාමල් රාජපක්ෂ පාර්ලිමේන්තු සැසිවාරයට සහභාගී කරවීමට අවශ්ය පහසුකම් සලසන ලෙස පාර්ලිමේන්තු මහලේකම්ගෙන් ලිපියක්
රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටින ශ්රී ලංකා පොදුජන පෙරමුණේ ජාතික සංවිධායක නීතිඥ නාමල් රාජපක්ෂ මහතාට ඉදිරි පාර්ලිමේන්තු සැසිවාර සඳහා සහභාගී වීමට අවශ්ය පහසුකම් සලසා දෙන ලෙස පාර්ලිමේන්තු මහලේකම් නීතිඥ කුෂානි රෝහණධීර මහත්මිය බන්ධනාගාර කොමසාරිස් ජනරාල්වරයා වෙත ලිපියක් යොමු කර තිබේ.
පාර්ලිමේන්තු සැසිවාර සඳහා සහභාගී වීමට අවස්ථාව සලසන ලෙස නාමල් රාජපක්ෂ මහතා කළ ඉල්ලීමට ප්රතිචාර දක්වමින් මෙම දැනුම්දීම සිදුකර ඇත. පාර්ලිමේන්තුව හෙට සිට ලබන 11 වන දින දක්වා රැස්වීමට නියමිත අතර, ඒ අනුව නාමල් රාජපක්ෂ මහතා හෙට දින පාර්ලිමේන්තුවට පැමිණීමට බොහෝ දුරට ඉඩ ඇති බව වාර්තා වේ.
මහත් ආන්දෝලනයකට තුඩු දුන් එයාර්බස් (Airbus) ගුවන් යානා ගනුදෙනුවේදී ඇමරිකානු ඩොලර් මිලියන 02 ක අල්ලසක් ලබාගැනීමේ චෝදනාව සම්බන්ධයෙන් අත්අඩංගුවට ගැනුණු ඒ මහතා, ලබන සැප්තැම්බර් 18 වනදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කරන ලෙස කොළඹ මහාධිකරණය පසුගිය සැප්තැම්බර් 4 වනදා නියෝග කර තිබුණි.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Arrangements Requested for Remanded MP Namal Rajapaksa to Attend Parliament Sittings
Secretary General of Parliament Kushani Rohanadeera has instructed the Commissioner General of Prisons to make necessary arrangements allowing remanded Sri Lanka Podujana Peramuna (SLPP) National Organizer, Attorney-at-Law Namal Rajapaksa, to attend parliamentary sittings.
The directive was formally issued following a request submitted by the parliamentarian seeking permission to attend the upcoming scheduled sittings. Parliament is scheduled to convene tomorrow through September 11, and Namal Rajapaksa is widely expected to attend sittings starting tomorrow.
Namal Rajapaksa was remanded until September 18 by the Colombo High Court on September 4 following his arrest over allegations involving the receipt of a USD 2 million bribe in connection with the controversial Airbus aircraft procurement deal.
KR TV Network - Local News

Comments