வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: பலநாள் கலங்களுக்குக் கடும் எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: பலநாள் கலங்களுக்குக் கடும் எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அந்தமான் தீவுகளுக்கு வடக்கே நிலவும் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ஒரு குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும் என இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் விசேட வானிலை ஆலோசனையொன்றை வெளியிட்டுள்ளது.
2026 செப்டம்பர் 18ஆம் திகதி பிற்பகல் 05.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பானது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது நாளை (19) முதல் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 முதல் 65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் பலநாள் மீன்பிடிக் கலங்களும் கடல்சார் சமூகமும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால ஆலோசனைகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / காலநிலை மற்றும் கடல்சார் அனர்த்த முன்னெச்சரிக்கை விவகாரம்
බෙංගාල බොක්ක මුහුදු ප්රදේශයේ අඩු පීඩන කලාපයක්: බහුදින ධීවර යාත්රාවලට අවවාදාත්මක නිවේදනයක්
බෙංගාල බොක්ක මුහුදු ප්රදේශයේ අන්දමන් දූපත්වලට උතුරින් පවතින වායුගෝලීය කැළඹිලි ස්වභාවය ඉදිරි පැය 24 තුළ අඩු පීඩන කලාපයක් දක්වා වර්ධනය විය හැකි බව ස්වභාවික විපත් පිළිබඳ පූර්ව අනතුරු ඇඟවීමේ මධ්යස්ථානය නිවේදනය කරයි.
2026 සැප්තැම්බර් 18 වන දින පස්වරු 05.00 ට නිකුත් කරන ලද මෙම අනතුරු ඇඟවීමේ නිවේදනය ඉදිරි පැය 24 සඳහා වලංගු වේ. මෙම පද්ධතියේ බලපෑම හේතුවෙන් බෙංගාල බොක්ක මුහුදු ප්රදේශවල සුළගේ වේගය හෙට (19) සිට ඉදිරි දින කිහිපය තුළ ඉහළ යාමේ හැකියාවක් පවතී. විශේෂයෙන් ගැඹුරු මුහුදු ප්රදේශවල සුළගේ වේගය විටින් විට පැයට කිලෝමීටර් 55ත් 65ත් දක්වා වැඩි විය හැකි අතර එම මුහුදු ප්රදේශ විටින් විට රළු හෝ ඉතා රළු විය හැක. එබැවින් ගැඹුරු මුහුදේ ධීවර කටයුතුවල නියැලෙන බහුදින ධීවර යාත්රා සහ නාවික ප්රජාව මේ පිළිබඳව දැඩි විමසිල්ලෙන් පසුවන ලෙසත්, කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව මඟින් නිකුත් කරන ඉදිරි නිවේදන පිළිබඳ අවධානය යොමු කරන ලෙසත් ඉල්ලා සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / කාලගුණ හා සමුද්රීය ආපදා පූර්ව අනතුරු ඇඟවීම් පුවත්
Low-Pressure Area Over Bay of Bengal: Severe Advisory for Multiday Fishing Craft
The Natural Hazards Early Warning Centre of the Department of Meteorology has issued a weather advisory concerning the atmospheric disturbance situated north of the Andaman Islands over the Bay of Bengal, which is likely to intensify into a low-pressure area within the next 24 hours.
Issued at 05:00 PM on 18 September 2026 and valid for the subsequent 24 hours, the advisory indicates that wind speeds across the Bay of Bengal are likely to enhance starting tomorrow (19) and over the ensuing days. Wind speeds across designated deep-sea areas are anticipated to increase up to 55 to 65 kmph at times, accompanied by rough to very rough sea conditions. Multiday fishing vessels operating in the deep Bay of Bengal and maritime navigational crews are advised to remain vigilant and closely follow forthcoming weather bulletins issued by the Department of Meteorology.
KR TV Network - Local News / Weather and Maritime Disaster Advisory


Comments