Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ஆழமான தாழமுக்கமாக வலுவடைகிறது: கடற்றொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை





 வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ஆழமான தாழமுக்கமாக வலுவடைகிறது: கடற்றொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை


வங்காள விரிகுடாவின் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பலநாள் மீன்பிடிக் கலங்கள் மற்றும் கடற்படையினருக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தினால் சிவப்பு (Red) நிறத்திலான அவசர எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


மேற்கு - மத்திய மற்றும் அதனை அண்டிய கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - மத்திய மற்றும் அதனை அண்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு ஆழமான தாழமுக்கமாக (Deep Depression) மேலும் வலுவடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது தொடர்ந்து நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரையிலும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் பலத்த மழையுடன் மணிக்கு 70 கிலோமீற்றர் வரையிலும் அதிகரித்து கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இதனால் வட அகலாங்குகள் 05°N முதல் 22°N வரையிலும், கிழக்கு நெட்டாங்குகள் 85°E முதல் 100°E வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்குள்ளவர்கள் உடனடியாக வெளியேறிப் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / காலநிலை மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை விவகாரம்


බෙංගාල බොක්කේ පීඩන අවපාතය ගැඹුරු පීඩන අවපාතයක් දක්වා වර්ධනය වෙයි: ධීවර ප්‍රජාවට රතු නිවේදනයක්


බෙංගාල බොක්ක ගැඹුරු මුහුදු ප්‍රදේශවල ධීවර හා නාවික කටයුතුවල නිරත වන බහුදින යාත්‍රා සඳහා කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවේ ස්වභාවික ආපදා පූර්ව අනතුරු ඇඟවීමේ මධ්‍යස්ථානය මඟින් රතු (Red) වර්ණයෙන් යුත් විශේෂ හදිසි අනතුරු ඇඟවීමේ නිවේදනයක් නිකුත් කර තිබේ.


බටහිර - මධ්‍යම සහ ඒ ආශ්‍රිත නැගෙනහිර - මධ්‍යම බෙංගාල බොක්ක මුහුදු ප්‍රදේශයේ පැවති අඩු පීඩන කලාපය බටහිරට බරව වයඹ දෙසට ගමන් කරමින් පීඩන අවපාතයක් බවට පත්ව ඇති අතර, එය ඉදිරි පැය 24 තුළ ගැඹුරු පීඩන අවපාතයක් (Deep Depression) දක්වා තවදුරටත් තීව්‍ර වීමේ හැකියාව පවතී. මෙම පද්ධතිය උතුරු ආන්ද්‍රා ප්‍රදේශ් සහ දකුණු ඔඩිෂා වෙරළ තීරය දෙසට ඇදී යා හැකි අතර, ඒ හේතුවෙන් සුළගේ වේගය පැයට කිලෝමීටර් 55 ත් 65 ත් අතර දක්වාත්, අනතුරු ඇඟවීම් කලාපවල ප්‍රබල වැසි සමඟින් සුළගේ වේගය පැයට කිලෝමීටර් 70 දක්වාත් ඉහළ ගොස් මුහුදු ප්‍රදේශ ඉතා රළු වනු ඇත. ඒ අනුව උතුරු අක්ෂාංශ 05°N සිට 22°N දක්වා සහ නැගෙනහිර දේශාංශ 85°E සිට 100°E දක්වා වන මුහුදු කලාපවල නැවත දැනුම්දෙන තුරු නාවික සහ ධීවර කටයුතුවල නිරත වීමෙන් වළකින ලෙසත්, එම ප්‍රදේශවල සිටින යාත්‍රා වහාම ඉවත් වන ලෙසත් උපදෙස් දී තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / කාලගුණ සහ ආපදා පූර්ව අනතුරු ඇඟවීම් පුවත්


Depression in Bay of Bengal Likely to Intensify into Deep Depression: Red Alert Issued for Mariners


A red alert advisory has been issued by the Natural Hazards Early Warning Centre of the Department of Meteorology, cautioning multi-day naval and fishing operators navigating deep waters of the Bay of Bengal.


The atmospheric depression situated over the west-central and adjoining northwest Bay of Bengal is tracking west-northwestwards and is projected to intensify into a deep depression within the next 24 hours. The system is anticipated to advance towards the coastlines of north Andhra Pradesh and south Odisha. Gale winds gusting between 55 to 65 kmph, and reaching up to 70 kmph in designated severe warning sectors accompanied by heavy thundershowers, are expected to cause extremely rough sea conditions. Consequently, naval and fishing operations are strictly advised to stay clear of the coordinates bounded by latitude 05°N to 22°N and longitude 85°E to 100°E until further notice, with all active vessels directed to immediately return to safety.


KR TV Network - Local News / Weather and Natural Disaster Advisory

Comments