Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!











 மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!


மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்திற்கு உடனடியாகத்  தீர்வு வழங்குமாறு கோரி, செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பல மாதங்களாகத் தொடரும் இந்த நிலப் பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாகத் தலையிடுமாறு கோஷங்களை எழுப்பினர்.


இப்பகுதியில் நிலவும் மேய்ச்சல் தரை நெருக்கடியால் கால்நடை வளர்ப்பாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக உரிய தீர்வை வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


මයිලත්තමඩු සහ මාධවනා තණබිම් ගැටළුවට විසඳුම් ඉල්ලා  (චෙන්කලාඩි) ප්‍රදේශීය ලේකම් කාර්යාලය ඉදිරිපිට විරෝධතාවක්!


මයිලත්තමඩු සහ මාධවනා තණබිම් ගැටළුවට කඩිනමින් ස්ථිර විසඳුමක් ලබා දෙන ලෙස ඉල්ලමින් චෙන්කලාඩි ප්‍රදේශීය ලේකම් කාර්යාලය ඉදිරිපිට විරෝධතා ව්‍යාපාරයක් දියත් කර තිබේ.


ගව පාලකයින් සහ ප්‍රදේශවාසීන්ගේ සහභාගීත්වයෙන් පැවති මෙම විරෝධතාවේදී, තණබිම් අයිතිවාසිකම් අත්පත් කර ගැනීම් වහා නතර කරන ලෙස බලධාරීන්ගෙන් ඉල්ලා සිටින ලදී.


මාස කිහිපයක සිට පවතින මෙම ගැටළුව සම්බන්ධයෙන් බලධාරීන් නිසි ක්‍රියාමාර්ග ගෙන නොමැති බවට චෝදනා කළ විරෝධතාකරුවන්, තම ජීවනෝපාය ආරක්ෂා කර දෙන ලෙස ඉල්ලමින් සටන් පාඨ නංවන ලදී.


ප්‍රදේශයේ පවතින තණබිම් අර්බුදය හේතුවෙන් ගව පාලකයින් දැඩි දුෂ්කරතාවන්ට මුහුණ දී සිටින බැවින්, අදාළ පාර්ශ්වයන් කඩිනමින් මැදිහත් වී විසඳුමක් ලබා දෙන ලෙස ඔවුන් අවධාරණය කළහ.


කේ.ආර්.ටී.වී.  |නෙට්වර්ක් දේශීය පුවත්


 Protest in Front of Chenkalady Divisional Secretariat Demanding Resolution to Mailathamadhu-Madhavana Pasture Crisis!


A demonstration has been staged in front of the Chenkalady Divisional Secretariat urging authorities to provide an immediate and permanent solution to the ongoing Mailathamadhu and Madhavana pasture land dispute.

The protest, led by livestock farmers and local residents, called for an immediate halt to the encroachments on traditional grazing lands.


Protesters accused relevant authorities of failing to take constructive action over the prolonged land issue, raising slogans to protect their livelihoods and dairy farming.


Highlighting the severe hardships faced by pastoralists due to the crisis, participants demanded swift intervention from the responsible stakeholders.


KRTV Network | Local News

Comments