Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தேசிய மக்கள் சக்தியின் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்: காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வட்டார ஆற்றங்கரைப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் தீவிர தூய்மைப்படுத்தல்!











 தேசிய மக்கள் சக்தியின் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்: காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வட்டார ஆற்றங்கரைப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் தீவிர தூய்மைப்படுத்தல்!


செய்தியாளர்: எம்.எஸ்.எம்.சஜீ


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “அத்தம” (Aththama) தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் வட்டார ஆற்றங்கரைப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் சிரமதான முறையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டலிலும், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் அவர்களின் ஏற்பாட்டின் படியும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் இத்தூய்மைப்படுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


நீண்டகாலமாக முறையான பராமரிப்பின்றிப் பற்றைக் காடாகவும் பயனற்ற மரங்கள் செறிந்தும் காணப்பட்ட குறித்த ஆற்றங்கரைப் பகுதி, பொதுமக்கள் குடியிருப்புகளுக்கும் காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலைக்கும் மிக அருகில் அமைந்துள்ளமையால் மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இவ்வேலைத்திட்டம் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் ஆகியோருடன் இராணுவத்தினர், பொலிஸார், விமானப்படையினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / உள்ளூர்ச் செய்தி


ජාතික ජන බලවේගයේ “අත්තම” ජාතික පවිත්‍රතා වැඩසටහන යටතේ කාත්තන්කුඩි ජාමියුල් ෂාබ්‍රීන් වතුයාය/මුහුදු තීරය පාර්ලිමේන්තු මන්ත්‍රී කන්දසාමි ප්‍රභූගේ ප්‍රධානත්වයෙන් පවිත්‍ර කෙරේ!


 වාර්තාකරු: එම්.එස්.එම්. සජී


ජාතික ජන බලවේග රජයේ “අත්තම” ජාතික පවිත්‍රතා වැඩසටහන යටතේ, කාත්තන්කුඩි 05 ජාමියුල් ෂාබ්‍රීන් ප්‍රදේශයේ වෙරළබඩ/ගංවතු ප්‍රදේශය මඩකලපුව දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී කන්දසාමි ප්‍රභූගේ ප්‍රධානත්වයෙන් සාර්ථකව පවිත්‍ර කරන ලදී.


මඩකලපුව දිස්ත්‍රික් දිසාපති ජේ.එස්. අරුල්රාජ් මහතාගේ මඟපෙන්වීම යටතේ සහ කාත්තන්කුඩි ප්‍රදේශයේ ප්‍රාදේශීය ලේකම් නිහාරා මෞජුත්ගේ සංවිධායකත්වයෙන් මෙම වැඩසටහන ක්‍රියාත්මක විය.


දිගු කලක් තිස්සේ නිසි නඩුවක් නොමැතිව කැලෑ වැදී තිබූ මෙම ප්‍රදේශය ජනාවාස සහ කාත්තන්කුඩි 05 ජාමියුල් ෂාබ්‍රීන් පාසලට ආසන්නව පිහිටා ඇති බැවින්, පාසල් සිසුන්ගේ සහ ප්‍රදේශවාසීන්ගේ සෞඛ්‍යාරක්ෂාව තහවුරු කිරීමේ අරමුණින් මෙම පවිත්‍රතා මෙහෙයුම ක්‍රියාත්මක කරන ලදී.


මෙම අවස්ථාවට දිසාපති ජේ.එස්. අරුල්රාජ්, ප්‍රාදේශීය ලේකම් නිහාරා මෞජුත් ඇතුළු ත්‍රිවිධ හමුදා නිලධාරීන්, පොලිසිය සහ ප්‍රදේශවාසීන් විශාල පිරිසක් සහභාගී වූහ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   | ජාතික / ප්‍රාදේශීයපුවත්


National People's Power “Aththama” National Cleanliness Program: Kathankudi Jamiyul Zahabreen Riverbank Area Cleansed Under the Leadership of MP Kandasami Prabhu!


Reporter:

 M.S.M. Sajee


Under the National People’s Power (NPP) government’s “Aththama” national cleaning initiative, the riverbank area of Kathankudi 05 Jamiyul Zahabreen was successfully cleaned under the leadership of Batticaloa District Member of Parliament Kandasami Prabhu.


The community cleanup drive was organized under the guidance of Batticaloa District Government Agent J.S. Arulraj and coordinated by Kathankudi Divisional Secretary Nihara Moujuth, with MP Kandasami Prabhu leading the frontline efforts.


Left unmaintained for a long period and overgrown with thick bushes, the targeted area is situated in close proximity to residential zones and the Kathankudi 05 Jamiyul Zahabreen School. The cleaning drive was prioritized to safeguard the health, hygiene, and safety of students and local residents.


District Government Agent J.S. Arulraj, Divisional Secretary Nihara Moujuth, alongside members of the tri-forces (Army, Police, and Air Force), and active members of the public enthusiastically participated in the collaborative cleanup campaign.


KRTV Network | National / Local News

Comments