போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாய கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: அச்சத்தில் கிராம மக்கள்!
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாய கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: அச்சத்தில் கிராம மக்கள்!
மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத் திட்டம் (Youth Agricultural Scheme) கிராமத்திற்குள் புகுந்துள்ள காட்டு யானைகள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதுடன், அப்பகுதி மக்களைக் கடும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளன.
இரவு வேளைகளில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ள காட்டு யானைகள், அங்குள்ள பயிர்களையும் விவசாய நிலங்களையும் அடித்து நாசம் செய்வதுடன், பொதுமக்களின் சொத்துகளுக்கும் சேதங்களை விளைவித்து வருகின்றன.
இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் எவ்வித பாதுகாவுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு யானைகளைக் காடுகளுக்குள் துரத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பிராந்தியச் செய்தி
පෝරතිව්පත්තුව ප්රදේශයේ තරුණ වගා ගම්මානයට වන අලි රංචුවක් ඇතුළුවෙයි: ගම්වාසීන් දැඩි බියක!
මඩකලපුව දිස්ත්රික්කයේ, පෝරතිව්පත්තුව ප්රදේශයේ ලේකම් කොට්ඨාසයට අයත් තරුණ කෘෂිකාර්මික ව්යාපෘති ගම්මානයට (Youth Agricultural Scheme) ඇතුළු වී ඇති වන අලි දැඩි අලාභහානි සිදු කරමින් සිටින අතර, ප්රදේශයේ ජනතාව දැඩි බියට පත් කර ඇත.
රාත්රී කාලයේ ජනාවාස වෙත පැමිණෙන වන අලි, එහි වගාබිම් සහ බෝග විනාශ කරමින් ජනතාවගේ දේපළවලට ද හානි සිදු කරමින් සිටිති.
මෙම ප්රදේශයේ වන අලි උවදුම දිනෙන් දින ඉහළ යමින් පවතින බැවින් ගොවීන් සහ ගම්වාසීන් දැඩි අනාරක්ෂිතභාවයකට මුහුණ දී සිටිති. වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව සහ අදාළ බලධාරීන් වහාම මැදිහත් වී වන අලි කැලෑ ප්රදේශවලට පලවා හැරීමට කඩිනම් පියවර ගන්නා ලෙස ජනතාව ඉල්ලි සිටිති.
කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් | ප්රාදේශීය පුවත්
Wild Elephants Stray Into the Youth Agricultural Village in Porativupattu: Residents Gripped by Fear!
A herd of wild elephants has strayed into the Youth Agricultural Scheme village within the Porativupattu Divisional Secretariat Division in the Batticaloa District, causing widespread destruction and instilling panic among local residents.
Moving into residential zones during the night, the elephants have rampaged through agricultural lands, destroying valuable crops and damaging property.
With wild elephant encounters on the rise in the area, farmers and villagers are facing severe safety concerns. Residents have urgently called upon the Department of Wildlife Conservation and local authorities to intervene immediately and drive the elephants back into the wild.
KRTV Network | Regional News




Comments