Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று: புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு


 ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று: புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, கொழும்பு புதுக்கடை (அலுத்கடே) நீதிமன்ற வளாகத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்புக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகியோரைக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நீண்டகாலமாக தினசரி அடிப்படையில் இடம்பெற்று வந்தது. சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி சாட்சிப் பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்தன. அனைத்துத் தரப்பு சாட்சியங்களையும் ஆராய்ந்த பின்னர் வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதியான இன்று வழங்கப்படும் என நீதிபதிகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. தீர்ப்பு வெளியாகவுள்ள பின்னணியில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் புதுக்கடை நீதிமன்றப் பகுதியைச் சூழ பல சிறப்புப் பொலிஸ் பிரிவுகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நீதித்துறை மற்றும் பாதுகாப்பு விவகாரம்


පාස්කු නඩුවේ තීන්දුව අද: අලුත්කඩේ අධිකරණ සංකීර්ණයට දැඩි ආරක්ෂාවක්


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


2019 වසරේ සිදුවූ පාස්කු ඉරිදා ත්‍රස්ත ප්‍රහාර මාලාවට කුමන්ත්‍රණය කිරීම ඇතුළු අධිචෝදනා 23,270 කට අධික සංඛ්‍යාවක් යටතේ විත්තිකරුවන් 24 දෙනෙකුට එරෙහිව පවරා ඇති නඩුවේ අවසන් තීන්දුව අද (22) ප්‍රකාශයට පත් කිරීමට නියමිතව තිබීම හේතුවෙන් කොළඹ අලුත්කඩේ අධිකරණ සංකීර්ණය අවට විශේෂ පොලිස් ආරක්ෂාවක් යොදවා තිබේ.


නවරත්න මාරසිංහ, රාමනාදන් කන්නන් සහ සුජීව නිශ්ශංක යන මහත්වරුන්ගෙන් සමන්විත කොළඹ ත්‍රිපුද්ගල විශේෂ මහාධිකරණ විනිසුරු මඩුල්ල ඉදිරියේ මෙම ඓතිහාසික නඩුව දීර්ඝ කාලයක් මුළුල්ලේ දිනපතා විභාගයට ගැනිණි. නීතිපතිවරයා විසින් පවරන ලද මෙම නඩුව සඳහා පැමිණිල්ල පාර්ශ්වයෙන් සාක්ෂිකරුවන් 2,309 දෙනෙකු සාක්ෂි ලබාදී ඇති අතර, පසුගිය අගෝස්තු 24 වන දින සාක්ෂි විභාගය සම්පූර්ණයෙන්ම අවසන් විය. සියලු කරුණු සලකා බැලීමෙන් පසු අවසන් නඩු තීන්දුව සැප්තැම්බර් 22 වන අද දින ලබාදෙන බව විනිසුරු මඬුල්ල මීට පෙර නිවේදනය කර තිබුණි. මෙම තීරණාත්මක තීන්දුව ප්‍රකාශයට පත් කිරීම නිමිත්තෙන් අධිකරණ භූමියේ ආරක්ෂාව තහවුරු කිරීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් රැසක් සීරුවෙන් යොදවා ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ සහ ආරක්ෂක පුවත්


Tight Security at Hulftsdorp Court Complex Ahead of Landmark Easter Sunday Attacks Verdict Today


Reporter: Farhana Badurdeen


An extensive security blanket featuring elite police units has been deployed across the Hulftsdorp (Aluthkade) Court Complex in Colombo today (22) as the Special High Court Trial-at-Bar prepares to deliver its verdict against 24 defendants indicted on over 23,270 charges linked to the 2019 Easter Sunday terror attacks.


The proceedings were comprehensively heard on a day-to-day basis by a three-judge High Court bench comprising Justices Navaratne Marasinghe, Ramanathan Kannan, and Sujeewa Nissanka. Indicted by the Attorney General, the landmark case saw 2,309 prosecution witnesses testify prior to the formal conclusion of oral hearings on 24 August. Following the evaluation of all submissions, the bench scheduled the delivery of the final judgment for today, 22 September. To preempt disruptions and safeguard public order during the high-stakes proceedings, multiple specialized police details have cordoned off the perimeter and secured the courtroom precincts.


KR TV Network - Local News / Judicial Affairs and Homeland Security

Comments