Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மாத்தறை முதல் பொத்துவில் வரை கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்: எச்சரிக்கை

 




மாத்தறை முதல் பொத்துவில் வரை கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்: எச்சரிக்கை


மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் விசேட ஆலோசனையொன்றை வெளியிட்டுள்ளது.


2026 செப்டம்பர் 18ஆம் திகதி பிற்பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பானது, நாளை (19) பிற்பகல் 01.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் குறித்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினரும் கடல்சார் பயணங்களை மேற்கொள்வோரும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / காலநிலை மற்றும் கடல்சார் அனர்த்த முன்னெச்சரிக்கை விவகாரம்


මාතර සිට පොතුවිල් දක්වා තද සුළං සහ රළු මුහුද ගැන අවවාදාත්මක නිවේදනයක්


මාතර සිට හම්බන්තොට හරහා පොතුවිල් දක්වා වන වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශවල විටින් විට තද සුළං ඇතිවිය හැකි අතර එම මුහුදු ප්‍රදේශ රළු විය හැකි බව ස්වභාවික විපත් පිළිබඳ පූර්ව අනතුරු ඇඟවීමේ මධ්‍යස්ථානය මඟින් නිවේදනය කර තිබේ.


2026 සැප්තැම්බර් 18 වන දින පස්වරු 01.00 ට නිකුත් කරන ලද මෙම පූර්ව අනතුරු ඇඟවීමේ නිවේදනය හෙට (19) පස්වරු 01.00 දක්වා වලංගු වන බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව සඳහන් කරයි. මෙම කාලසීමාව තුළ අදාළ මුහුදු ප්‍රදේශවල සුළගේ වේගය විටින් විට පැයට කිලෝමීටර් 50ත් 60ත් දක්වා වැඩි විය හැකි අතර මුහුදු ප්‍රදේශ විටින් විට රළු විය හැක. එබැවින් මාතර සිට පොතුවිල් දක්වා වන මුහුදු ප්‍රදේශවල ධීවර කටයුතුවල නියැලෙන ධීවර ප්‍රජාව සහ නාවික ප්‍රජාව මේ පිළිබඳව දැඩි විමසිල්ලෙන් පසුවන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / කාලගුණ හා සමුද්‍රීය ආපදා පූර්ව අනතුරු ඇඟවීම් පුවත්


Advisory for Strong Winds and Rough Seas from Matara to Pottuvil


The Natural Hazards Early Warning Centre of the Department of Meteorology has issued a weather advisory concerning strong winds and rough sea conditions for the coastal waters extending from Matara to Pottuvil via Hambantota.


Issued at 01:00 PM on 18 September 2026, the warning remains valid for 24 hours until 01:00 PM on 19 September 2026. The sea areas off the coast extending from Matara to Pottuvil via Hambantota are expected to be rough at times, with wind speeds likely to increase up to 50–60 kmph in these deep and shallow sea regions. Both naval and fishing communities operating in these specified marine waters are requested to remain vigilant and heed maritime weather updates.


KR TV Network - Local News / Weather and Maritime Disaster Advisory

Comments