Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டார்


 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டார்


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை ஏற்று, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் பலத்த சிறைச்சாலை பாதுகாப்புடன் அவர் இன்று சபை அமர்வுகளுக்காக அழைத்து வரப்பட்டார்.


சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தத்தில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටින නාමල් රාජපක්ෂ අද පාර්ලිමේන්තුවට රැගෙන එයි


රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටින ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ ජාතික සංවිධායක පාර්ලිමේන්තු මන්ත්‍රී නාමල් රාජපක්ෂ මහතා අද දින පාර්ලිමේන්තු සැසිවාරයට සහභාගී වීම සඳහා බන්ධනාගාර නිලධාරීන් විසින් පාර්ලිමේන්තු පරිශ්‍රය වෙත රැගෙන විත් තිබේ.


පාර්ලිමේන්තු රැස්වීම් සඳහා සහභාගී වීමට අවස්ථාව ලබාදෙන ලෙස නාමල් රාජපක්ෂ මහතා කළ ඉල්ලීමට අනුව, පාර්ලිමේන්තු මහලේකම් කුෂානි රෝහණධීර මහත්මිය බන්ධනාගාර කොමසාරිස් ජනරාල්වරයා වෙත ලිඛිතව දැනුම් දී තිබුණි. ඒ අනුව දැඩි ආරක්ෂක රැකවල් මධ්‍යයේ ඔහු අද පාර්ලිමේන්තුව වෙත කැඳවාගෙන එනු ලැබීය.


ආන්දෝලනාත්මක එයාර්බස් ගුවන් යානා ගනුදෙනුවේදී ඇමරිකානු ඩොලර් මිලියන 02 ක අල්ලසක් ලබාගැනීමේ චෝදනාව මත අත්අඩංගුවට ගැනුණු නාමල් රාජපක්ෂ මහතා ලබන සැප්තැම්බර් 18 වනදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටියි.


කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Remanded MP Namal Rajapaksa Escorted to Parliament Today


Remanded Sri Lanka Podujana Peramuna (SLPP) National Organizer and Member of Parliament Namal Rajapaksa was escorted to the Parliament complex today by prison authorities to attend the scheduled parliamentary sitting.


The arrangement was made after Secretary General of Parliament Kushani Rohanadeera formally notified the Commissioner General of Prisons regarding a request submitted by the parliamentarian to attend parliamentary proceedings. Following the directive, he was brought to the chamber under heavy prison escort.


Namal Rajapaksa, who was arrested and remanded until September 18 over allegations involving the solicitation of a USD 2 million bribe in connection with the controversial Airbus aircraft transaction, attended today's session amidst tight security.


KR TV Network - Local News

Comments