திருகோணமலை மதுபானக் கடையில் துணிகரத் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திருகோணமலை மதுபானக் கடையில் துணிகரத் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திருகோணமலை - அனுராதபுர சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல மதுபானக் கடை ஒன்றில் நேற்றிரவு பூட்டை உடைத்து நுழைந்த நபர்கள், அங்கிருந்த ரொக்கப் பணம் மற்றும் விலையுயர்ந்த மதுபானப் பாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
கடையினுள் அத்துமீறி நுழைந்த நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் மதுபானப் பொருட்களை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்புக் கருவியில் பதிவாகியுள்ளதுடன், அக்காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், உப்புவெளி பொலிஸார் சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களைக் கொண்டு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / குற்றப் புலனாய்வு மற்றும் சட்ட ஒழுங்கு விவகாரம்
ත්රිකුණාමලයේ මත්පැන් හලක් බිඳ මුදල් හා මත්පැන් සොරාගනී: සීසීටීවී දර්ශන නිකුත් වෙයි
ත්රිකුණාමලය - අනුරාධපුර හන්දිය ප්රදේශයේ පිහිටි ප්රසිද්ධ මත්පැන් අලෙවිසැලක දොරගුළු කඩා ඊයේ රාත්රියේ ඇතුළු වූ පිරිසක් එහි තිබූ මුදල් සහ වටිනා මත්පැන් බෝතල් සොරාගෙන ගොස් තිබේ.
අදාළ වෙළෙඳසැලට ඇතුළු වූ පුද්ගලයින් එහි තිබූ මුදල් සහ භාණ්ඩ සොරාගන්නා ආකාරය වෙළෙඳසැලේ සවිකර තිබූ සීසීටීවී (CCTV) ආරක්ෂිත කැමරා පද්ධතියේ සටහන්ව ඇති අතර, එම දර්ශන මේ වන විට සමාජ මාධ්ය ඔස්සේ සංසරණය වෙමින් ප්රදේශය තුළ දැඩි කතාබහක් නිර්මාණය කර ඇත. මෙම සොරකම සම්බන්ධයෙන් ලද පැමිණිල්ලකට අනුව උප්පුවේලි පොලිසිය සීසීටීවී දර්ශන පදනම් කරගනිමින් පුළුල් විමර්ශන ආරම්භ කර ඇති අතර, සිද්ධියට සම්බන්ධ සැකකරුවන් හඳුනාගෙන අත්අඩංගුවට ගැනීමට කටයුතු කරමින් සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අපරාධ විමර්ශන සහ නීතිය ක්රියාත්මක කිරීම පිළිබඳ පුවත්
Burglary at Liquor Shop Near Trincomalee Anuradhapura Junction: CCTV Footage Released
A group of individuals broke into a well-known liquor store situated in the Anuradhapura Junction area of Trincomalee last night, decamping with cash and bottles of liquor.
The suspects, who gained entry by tampering with the store locks, were captured on the premises' CCTV surveillance cameras while carrying out the burglary, with the recorded footage subsequently circulating on social media platforms. Following a formal complaint, the Uppuveli police launched an investigation utilizing the surveillance recordings to establish the identities of the suspects and effect their arrest.
KR TV Network - Local News / Crime Investigation and Law Enforcement
Comments