Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இஸ்ரேலுடன் எதிர்காலத்தில் ஒரே குழுவில் போட்டியிடுவதைத் தவிர்க்கக் கோரிய அயர்லாந்தின் கோரிக்கையை நிராகரித்தது யுவேஃபா


 இஸ்ரேலுடன் எதிர்காலத்தில் ஒரே குழுவில் போட்டியிடுவதைத் தவிர்க்கக் கோரிய அயர்லாந்தின் கோரிக்கையை நிராகரித்தது யுவேஃபா


சர்வதேச கால்பந்து போட்டிகளின் போது எதிர்காலத்தில் இஸ்ரேல் அணியுடன் அயர்லாந்து அணி ஒரே குழுவில் மோதுவதைத் தவிர்க்கும் வகையில் குலுக்கல் தெரிவுகளை (Draws) மேற்கொள்ள வேண்டும் என அயர்லாந்து கால்பந்து சம்மேளனம் (FAI) விடுத்த கோரிக்கையை ஐரோப்பிய கால்பந்து சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA) நிராகரித்துள்ளது.


இது குறித்து விளக்கமளித்துள்ள யுவேஃபா நிர்வாகம், போட்டிக் குலுக்கல்களில் அணிகளைத் தனித்தனியாகப் பிரிப்பது தொடர்பான முடிவுகள் பொதுமக்களின் உணர்வுகள் அல்லது அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை எனவும், நாடுகளுக்கிடையிலான நேரடிப் போர் அல்லது நேரடி மோதல்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அயர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நேரடிப் போர் மோதல்கள் இல்லாத காரணத்தினால் இத்தகைய பிரிப்பு விலக்கு நடைமுறை சாத்தியமற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா, ஆர்மீனியா - அஜர்பைஜான் போன்ற நாடுகள் நேரடி மோதல்கள் காரணமாக இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காசா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு அயர்லாந்து பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், எதிர்வரும் நேஷன்ஸ் லீக் தொடரில் இவ்விரு அணிகளும் பொதுவான நடுநிலை மைதானங்களில் இரசிகர்கள் இன்றி மோதவுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / விளையாட்டு மற்றும் புவிசார் அரசியல் விவகாரம்


අනාගත තරගවලදී ඊශ්‍රායලය සමඟ එකට තරග කිරීම වැළැක්වීමට අයර්ලන්තය කළ ඉල්ලීම යූඒෆා ප්‍රතික්ෂේප කරයි


අනාගත පාපන්දු තරගාවලි සඳහා කණ්ඩායම් කාණ්ඩගත කිරීමේදී (Draws) ඊශ්‍රායලය සමඟ අයර්ලන්තය එකම කාණ්ඩයකට නොවැටෙන සේ වෙන්කර තබන ලෙස අයර්ලන්ත පාපන්දු සම්මේලනය (FAI) කළ ඉල්ලීම යුරෝපීය පාපන්දු සම්මේලනය (UEFA) විසින් ප්‍රතික්ෂේප කර තිබේ.


මේ සම්බන්ධයෙන් කරුණු දක්වමින් යූඒෆා පාලනාධිකාරිය පෙන්වා දී ඇත්තේ, මෙවැනි තීරණ මහජන මතය හෝ දේශපාලන හැඟීම් මත පදනම්ව නොගන්නා බවත්, අදාළ රටවල් දෙක අතර පවතින සෘජු යුද ගැටුම් සහ ආරක්ෂක අවදානම් පිළිබඳව පමණක් එක් එක් අවස්ථාව අනුව සලකා බලන බවත්ය. අයර්ලන්තය සහ ඊශ්‍රායලය අතර කිසිදු සෘජු ගැටුමක් නොපවතින බැවින් මෙම ඉල්ලීම ඉටුකළ නොහැකි බව යූඒෆා වැඩිදුරටත් අවධාරණය කර ඇත. ගාසා තීරයේ ගැටුම් හේතුවෙන් අයර්ලන්තය තුළ ඊශ්‍රායලයට එරෙහිව දැඩි විරෝධයක් මතුව ඇති පසුබිමක, එළඹෙන නේෂන්ස් ලීග් තරගාවලියේදී මෙම කණ්ඩායම් දෙක මධ්‍යස්ථ ක්‍රීඩාංගණවලදී ප්‍රේක්ෂකයන් රහිතව තරග වැදීමට නියමිතව තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / ක්‍රීඩා සහ භූ-දේශපාලනික පුවත්


UEFA Rejects Ireland Request to Avoid Future Pairings With Israel


European football governing body UEFA has turned down a formal request by the Football Association of Ireland (FAI) to ensure the Republic of Ireland and Israel are kept apart in future competition draws.


Responding to the matter, UEFA emphasized that decisions regarding team separations during competition draws are evaluated strictly on a case-by-case basis, determined primarily by structural security risks and whether direct geopolitical conflict exists between participating nations, rather than being driven by public sentiment. The governing body clarified that since Ireland and Israel have never been in direct military conflict, granting a draw separation remains impermissible under current tournament regulations. The development comes amid strong public outcry and boycott calls in Ireland over Israel's military assault on Gaza, with the two sides scheduled to play their upcoming Nations League fixtures behind closed doors at neutral venues in Hungary and Serbia.


KR TV Network - International News / Sports and Geopolitical Affairs

Comments