Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மட்டக்களப்பு களுதாவளையில் மீண்டும் ஒரு விபத்து: நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பர் மீது கார் மோதி விபத்து - சாரதி காயம்!






 மட்டக்களப்பு களுதாவளையில் மீண்டும் ஒரு விபத்து: நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பர் மீது கார் மோதி விபத்து - சாரதி காயம்!


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இன்று (10) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் கார் சாரதி காயமடைந்துள்ளார். நேற்றைய தினம் இதே களுதாவளை பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.


 மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியூடாகக் கிண்ணியாவிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சிறிய ரக கார் ஒன்று, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக டிப்பர் வாகனத்தின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


கார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கமே இந்த விபட்டுக்குக் முக்கிய காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளான கார் சாரதி உடனடியாகச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்துக் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


මඩකලපුව කලුතාවල ප්‍රදේශයෙන් තවත් අනතුරක්: නවත්වා තිබූ ටිපර් රථයක මෝටර් රථයක් ගැටී අනතුරක් - රියැදුරු තුවාල ලබයි!


මඩකලපුව දිස්ත්‍රික්කයේ කළුවාංචිකුඩි වසමට අයත් කලුතාවල ප්‍රධාන මාර්ගයේදී අද (10) දහවල් හදිසි අනතුරක් සිදුව තිබේ. ඊයේ දිනයේදීද කලුතාවල ප්‍රදේශයේදී වෑන් රථයක් අනතුරට ලක්වීම විශේෂත්වයකි.


 මඩකලපුව - කල්මුණේ ප්‍රධාන මාර්ගයේ කින්නියා

 සිට කල්මුණේ බලා ධාවනය වූ කුඩා මෝටර් රථයක්, මාර්ගය අසල නවතා තිබූ කුඩා ටිපර් රථයක පිටුපස ගැටී මෙම අනතුර සිදුව ඇත.


 මෝටර් රථයේ රියැදුරුට ඇති වූ නින්ද යාමේ ස්වභාවය මෙම අනතුරට හේතු වී ඇති බවට සැක කෙරේ. අනතුරින් සුළු තුවාල ලැබූ රියැදුරු ප්‍රතිකාර සඳහා රෝහල වෙත ඇතුළත් කර ඇති අතර, කළුවාංචිකුඩි පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


 Another Accident Recorded in Kaluthavalai, Batticaloa: Car Crashes into Parked Tipper Truck, Leaving Driver Injured!


A traffic accident was reported today (10) afternoon along the main road in Kaluthavalai, within the Kalawanchikudy police division of the Batticaloa district, marking the second consecutive day of accidents in the area following a van mishap yesterday.


 A small car traveling from Kinniya towards Kalmunai along the Batticaloa-Kalmunai main road crashed into the rear of a small tipper truck parked on the roadside.


 Preliminary findings indicate that driver fatigue and drowsiness led to the collision. The driver, who sustained minor injuries, was promptly transported to the hospital for medical care. Kalawanchikudy police have launched further investigations into the incident.


KRTV Network | Local News

Comments